ஆன்லைன் வகுப்பு வழக்கு: பத்திரிகையில் விளம்பரம் வெளியிட அரசுக்கு ஹைகோர்ட் ஆணை

ஆன் லைன் வகுப்புக்களுக்கு தடை கோரிய வழக்கு விசாரணையில் தனியார் பள்ளிகள், பெற்றோர் சங்கங்கள் பங்கேற்கும் வகையில் வழக்கு விசாரணை குறித்து பத்திரிகையில் விளம்பரம் வெளியிட வேண்டும் தமிழக அரசுக்கு சென்னை


  • சென்னை: ஆன் லைன் வகுப்புகள் அனைத்து தரப்பு மாணவர்களும் பெறும் வகையில் ஒரே மாதிரியான நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்பதால், இந்த வழக்கில், அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களுக்கும், பெற்றோர் சங்கங்களுக்கும் தகவல் தெரிவிக்கும் வகையில், ஆங்கிலம், தமிழ் பத்திரிகையில் இந்த வழக்கு விசாரணை ஆகஸ்ட் 19ம் தேதி விசாரணைக்கு வருகிறது என தெரிவித்து விளம்பரம் வெளியிட வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

    Advertisement

    கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், ஆன் லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படுவதாகவும், இணையதளங்களில் ஆபாச விளம்பரங்கள் வந்து செல்வதால் மாணவர்களின் கவனம் சிதைவதால் உரிய விதிகளை வகுக்கும் வரை, ஆன் லைன் வகுப்புக்களுக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரியும், ஆன் லைன் வகுப்புகளுக்காக மொபைல், லேப்டாப் போன்றவற்றை பார்த்துக் கொண்டிருப்பதால் மாணவர்களின் கண்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி, ஆன் லைன் வகுப்புகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.

    Advertisement

    இந்த வழக்குகள் நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணையில் உள்ளது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசுத்தரப்பில் ஆன் லைன் வகுப்புக்களுக்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தமிழக அரசு விதிமுறைகள் வகுக்க உள்ளதா எனக் கேள்வி எழுப்பிய நீதிமன்றம், விசாரணையை தள்ளிவைத்திருந்தது.

    இன்று, இந்த வழக்குகள் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அதன்படி, மழலையர் வகுப்புகளுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்தக் கூடாது எனவும், ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ஒவ்வொரு பாடவேளையும் 30 முதல் 45 நிமிடங்கள் மட்டுமே இருக்க வேண்டும். நாளொன்றுக்கு ஒரு ஆசிரியர்,ஆறு வகுப்புகளும்,வாரத்திற்கு 28 ஆன்லைன் வகுப்புகளும் எடுக்க வேண்டும்.காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடத்த வேண்டும்.

    Advertisement

    சொத்து குவிப்பு புகார்.. பீலா ராஜேஷ் மீது நடவடிக்கை எடுக்க தலைமை செயலாளருக்கு மத்திய அரசு உத்தரவு

    எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்த கூடாது. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை 30 முதல் 45 நிமிடங்கள் 2 பாடவேளைகள் மட்டுமே நடத்தப்பட வேண்டும். 9 முதல் 12ம் வகுப்பு வரை , 30 முதல் 45 நிமிடங்களுக்கு 4 பாடவேளைகள் நடத்தப்பட வேண்டும். ஆன்லைன் வகுப்புகளுக்கு குழந்தைகளை கட்டாயப்படுத்தக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விதிமுறைகள் வெறும் பரிந்துரை அடிப்படையில் இருப்பதாகவும், இதை அமல்படுத்த முடியாது எனவும் மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அரசாணையை முழுமையாக படிக்காமல், எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், மனுவில் கூறப்பட்டுள்ள அனைத்து அம்சங்களும் அரசாணையில் இடம் பெற்றுள்ளதாகவும் தமிழக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    Advertisement

    இந்த வழக்கில் தங்களையும் இணைக்க கோரி தனியார் கல்வி நிறுவனங்கள் சார்பில் தாக்கல் செய்த மனுக்களை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கு மாணவர்களின் நலன் சம்பந்தப்பட்டுள்ளது மட்டுமல்லாமல், ஆன் லைன் வகுப்புகள் அனைத்து தரப்பு மாணவர்களும் பெறும் வகையில் ஒரே மாதிரியான நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்பதால், இந்த வழக்கில், அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களுக்கும், பெற்றோர் சங்கங்களுக்கும் தகவல் தெரிவிக்கும் வகையில், ஆங்கிலம், தமிழ் பத்திரிகையில் இந்த வழக்கு விசாரணை ஆகஸ்ட் 19ம் தேதி விசாரணைக்கு வருகிறது என தெரிவித்து விளம்பரம் வெளியிட வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஆகஸ்ட் 19ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

    Advertisement

    மேலும், ஆன் லைன் வகுப்புக்கள் நடத்துவது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையை அனைத்து பள்ளிகளும் பின்பற்ற வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    English Summary

    The High Court has ordered the Government of Tamil Nadu to publish an advertisement in the English and Tamil newspapers stating that the case is coming up for hearing on August 19, in order to inform all private educational institutions and parents' associations, as online classes should follow the same procedure for all classes of students.