அப்பா தேடாதீங்கப்பா.. காணாமல் போன மகள்.. ஸ்விக்கியில் வந்த ஒரே ஒரு ஆர்டரால் உடைந்த ரகசியம்

  • சென்னை: அரசு அதிகாரியின் கவலையால் இருண்டு போயிருந்தது. காரணம், 12ம் வகுப்பு படிக்கும் 16 வயது மகளை காணவில்லை.. "பிரண்ட்ஷிப் டே" கொண்டாட்டத்திற்காக தோழிகளுடன் மாலுக்கு செல்வதாக சொல்லிவிட்டு போனாராம்.. ஆனால் நைட் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. போனை தொடர்பு கொண்டால் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.. இதற்கு பிறகே பெற்றோர் போலீசுக்கு சென்றுள்ளார்கள்.. அடுத்து என்ன நடந்தது?

    Advertisement

    நாக்பூரின் உயர்மட்ட அதிகாரியின் 16 மகள், வீடு திரும்பவில்லை என்பதால், அதுகுறித்த புகார் பதிவுசெய்யப்பட்டது.. நாக்பூர் போலீசாரும் விசாரணையை ஆரம்பித்தனர்..

    Advertisement

    நாக்பூர் சிறுமி மாயம்

    இதனால் சிறுமியின் இன்ஸ்டாகிராம், ஸ்நாப்சாட், கேமிங் ஆப்களை ஆய்வு செய்தனர்.. அப்போதுதான், தானேவைச் சேர்ந்த 20 வயது நிர்பய் (என்ற) ஆகாஷ் மாதவ் பகாரே என்ற இளைஞன் தான் இதற்கெல்லாம் பின்னணியில் இருப்பது தெரியவந்தது. நாக்பூரில் வாடகை வீட்டில் தங்கி BBA படித்து வந்த நிர்பய், பிரபல பெண் மருத்துவரின் மகன் ஆவார்..

    இதையடுத்து தானேவில் உள்ள நிர்பயின் வீட்டிற்கு போலீசார் சென்று, அவரது அம்மாவை வைத்து நிர்பயை போனில் பேச வைத்தனர். ஆனால், இந்த விஷயத்தை மோப்பம் பிடித்து கொண்ட நிர்பய், "நான் நல்லாத்தான் இருக்கேன், என்னை தேட வேணாம்" என்று சிறுமியை வலுக்கட்டாயமாக பெற்றோருக்கு பேச வைத்தான். இருந்தாலும், அந்த ஒரே ஒரு போன் கால் நிர்பயின் லொகேஷனை போலீசாருக்கு காட்டிக் கொடுத்தது.

    Advertisement

    ஆன்லைன் உணவு டெலிவரி

    சிறிது நேரத்தில், நிர்பய் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்தான். அந்த ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனத்தின் தகவலை உடனடியாக கைப்பற்றிய போலீசார், உணவை டெலிவரி செய்யச் சென்ற நபருடனேயே மஃப்ட்டியில் சென்று, நிர்பய் தங்கியிருந்த வாடகை வீட்டின் அட்ரஸை கண்டுபிடித்தது.

    இறுதியில், நாக்பூர் மண்டலம் 4 துணை காவல் ஆணையர் (DCP) ரஷ்மிதா ராவ் தலைமையிலான போலீஸ் டீம், அந்த வீட்டைச் சூழ்ந்தது. உடனடியாக கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தால், மொத்த போலீசாரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

    துண்டிக்கப்பட்ட மணிக்கட்டு

    உடலில் ஆடைகளின்றி, படுக்கையில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் அந்த சிறுமி கிடந்துள்ளார். அவரது கையின் மணிக்கட்டு துண்டிக்கப்பட்டு, உடல் முழுவதும் கத்திக்குத்து காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தாராம்.. கையில் கூர்மையான கத்தியுடன் நின்றிருந்த நிர்பய், சிறுமியை கொலை செய்ய முயன்று கொண்டிருந்தாராம். அந்த நொடியில்தான் போலீசார் பாய்ந்து, நிர்பயியை கைது செய்து. சிறுமியையும் உயிருடன் மீட்டனர்.

    Advertisement

    2 நாட்களாக சிறுமியை சிறைவைத்து, ஆபாச படங்களை எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இப்போது போக்சோ, கடத்தல், கற்பழிப்பு மற்றும் கொலை முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ் நிர்பய் கைது செய்யப்பட்டு, ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    ஜெயிலில் காதலன்

    ஆனால், லாக்அப்பில் பிட்சா வேண்டும் என்று கேட்கிறாராம். மினரல் தண்ணீர் வேண்டுமாம்.. படுக்க மெத்தை வேண்டுமாம்.. அதுமட்டுமல்லாமல் தன்னுடைய செல்போனின் பாஸ்வேர்டையும் போலீசாருக்கு கொடுக்க மறுத்து விசாரணைக்கு ஒத்துழைக்காமல் ஆட்டம் காட்டுகிறாராம்..

    மற்றொருபக்கம், படுகாயங்களுக்கு ஆளான சிறுமிக்கு தீவிர சிகிச்சை தரப்பட்டு வருகிறது.. கடுமையான மன உளைச்சலிலும் பீதியிலும் உள்ளதால், மனநல ஆலோசனைகளும் அவருக்கு வழங்கப்பட்டு வருகின்றன.. இந்த வழக்கு இப்போது நீதிமன்றத்திற்கும் சென்றுள்ளது..

    Advertisement

    "இருவரும் காதலர்கள்.. அப்படியிருக்கும்போது நிர்பயி ஏன் கையை அறுக்க போகிறார்? சிறுமியே தன் கையை அறுத்துக் கொண்டார்" என்று குற்றவாளியின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதாடி கொண்டிருக்கிறாராம்...!!!

    English Summary

    Nagpur Twist! “Don't Look for Me, Dad” Girl Rescued After Online Food Order Leads Police to Suspect