மோடிக்கு குறையாத செல்வாக்கு.. இன்று தேர்தல் நடந்தாலும் NDA 326-ல் வெல்லும்.. வெளியான புதிய சர்வே

  • டெல்லி: லோக்சபா தேர்தல் இன்று நடைபெற்றாலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று புதிய கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. Mood of the Nation நடத்திய சர்வே முடிவுகளில் மோடியின் செல்வாக்கு குறையாமல் இருப்பது தெரியவந்துள்ளது.

    Advertisement

    இன்று தேர்தல் நடைபெற்றாலும் தேசிய ஜனநாயக கூட்டணி 326 இடங்கள் வெற்றி பெறும் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன. கடந்த ஜனவரி மாதம் நடத்திய இதே சர்வேயில் 352 இடங்கள் மோடிக்கு கிடைக்கும் என்று கருத்து கணிப்புகள் கூறின. ஆனால் 8 மாதங்களில் மோடி அரசுக்கு 26 இடங்கள் குறைந்துள்ளன.

    Advertisement

    ஜென்சி இளைஞர்களின் போராட்டம்

    இந்த சர்வே முடிவுகளின் படி பார்த்தால், ஜென்சி இளைஞர்களின் போராட்டம், இளைஞர்கள் மத்தியில் ஆட்சிக்கு எதிரான மனநிலை போன்றவை இருப்பதாக சொல்லப்பட்டாலும் மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான என்டிஏவுக்கு செல்வாக்கு பெருமளவில் குறையவில்லை என்பதே தெரிகிறது.

    காங்கிரசுக்கு எத்தனை இடங்கள்

    காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு 185 இடங்கள் கிடைக்கும் என்று கணித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் வெளியான சர்வேயில் 182 இடங்கள் காங்கிரஸ் கூட்டணிக்கு என்று கணிக்கப்பட்டு இருந்தது. இதை வைத்து பார்க்கும் போது கடந்த 8 மாதங்களில் காங்கிரஸ் கூட்டணிக்கு சற்று செல்வாக்கு அதிகரித்து இருப்பதாக தெரிகிறது. அதே நேரத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 234 இடங்களில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி வெற்றி பெற்றது.

    Advertisement

    2014 ஆம் ஆண்டுக்கு பிறகு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கடும் சவாலை கடந்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி கொடுத்த நிலையில், 2026 தேர்தலுக்கு பிறகு 2 ஆண்டுகளில் காங்கிரஸ் கூட்டணியின் செல்வாக்கு சரிந்து இருப்பதை இந்த சர்வே காட்டுகிறது.

    உத்தர பிரதேசத்தில் யாருக்கு செல்வாக்கு?

    உத்தரப் பிரதேச மாநிலம்தான் பாஜகவுக்கு கடும் போட்டியாக அமையும் என்பதும் இந்த சர்வே முடிவுகளின்படி தெரியவருகிறது. அங்கு மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் 41 இடங்களில் இந்தியா கூட்டணி கைப்பற்றும் எனவும், 38 இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்று சர்வே கணித்துள்ளது.

    Advertisement

    கடந்த 2026 ஜனவரியில் வெளியான சர்வேயின் படி, உத்தர பிரதேசத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 48 இடங்களும், இந்தியா கூட்டணிக்கு 31 இடங்களும் கிடைக்கும் என கணிக்கப்பட்டு இருந்தது. ஆகஸ்ட மாத கணிப்புப்படி இந்தியா கூட்டணிக்கு 10 இடங்கள் கூடுதலாக கிடைக்கும் என சர்வே கூறுகிறது. சி வோட்டர் நடத்திய இந்த சர்வே ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 25 வரையில் 25,184 பேரிடம் கருத்து பெற்று சர்வே முடிவுகளை வெளியிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    டாப் 3 இல் விஜய் பெயர்

    நாட்டின் அடுத்த பிரதமராக யாரை விரும்புகிறீர்கள் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு தமிழக முதல்வர் விஜய்க்கு ஆதரவாக 9.2 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். மோடி என்று 48.7 சதவீதம் பேரும், ராகுல் காந்திக்கு 27.1 சதவீதம் பேரும் கூறியுள்ளனர். கட்சி ஆரம்பித்த இரண்டு ஆண்டுகளில் தமிழக முதல்வரான விஜய், பிரதமர் ரேசிலும் டாப் 3 க்குள் இடம் பெற்று இருக்கிறார் என்பதை சர்வே முடிவுகள் காட்டுகின்றன.

    English Summary

    MOTN survey: A new opinion poll indicates that the BJP-led National Democratic Alliance (NDA) would retain power if the Lok Sabha elections were held today. The results of the 'Mood of the Nation' survey reveal that Modi's popularity remains undiminished.