ஓபிஎஸ்க்கு மாநில பொறுப்பு.. மாற்று கட்சியில் இருந்து வந்தவர்களுக்கும் பதவி! உறுதியாக சொன்ன ஸ்டாலின்

  • சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு திமுகவில் மாநில அளவிலான பதவி கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதேபோல் அதிமுகவில் இருந்து வந்த மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், விசிகவில் இருந்து வந்த பனையூர் பாபு உள்ளிட்டோருக்கும் மாவட்டச் செயலாளர்கள் பதவி அளிக்கப்பட உள்ளது.

    Advertisement

    அண்மையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைய முடிவு செய்துள்ளதாக தகவல் கிடைத்தது. இதற்கு ஓபிஎஸ் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் முக்கிய காரணம் என்று சொல்லப்பட்டது. தேனி மாவட்டத்தில் முக்கிய பவர் சென்டராக இருந்த ஓபிஎஸ், தற்போது திமுகவில் கட்சிப் பதவி கூட இல்லாமல் இருப்பதே அவரின் அதிருப்திக்கு காரணம்.

    Advertisement

    அதேபோல் தனக்கு எந்தப் பதவியும் அளிக்கப்படவில்லையே என்று விரக்தியில் இருந்தார். இதனால் திமுகவுக்கு பதிலாக தவெகவில் இருக்கலாம் என்று அவர் முயற்சித்த போது, பனையூர் தலைமை தரப்பில் ஓபிஎஸ் உடன் வந்தால் யோசிக்கலாம் என்று பதில் அளிக்கப்பட்டது. ஆனால் ஓபிஎஸ் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய தயாராக இல்லை. இனியும் கட்சி மாறினால் சரியாக இருக்காது என்பதே அவரின் நிலைப்பாடு.

    இந்த விஷயம் திமுக தலைமைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. அதேபோல் சட்டசபையிலும் தவெகவுக்கு எதிராக ஓபிஎஸ் பேசிய கருத்துக்கள் ஸ்டாலினை திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. இந்த நிலையில் மறுசீரமைப்பு பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் எண்ணிக்கையை 100க்கு மேல் கொண்டு செல்ல ஸ்டாலின் அறிவுறுத்தி இருக்கிறார்.

    Advertisement

    இளைஞர்கள், பெண்கள் மட்டுமல்லாமல் மாற்று கட்சியில் இருந்து தேர்தலுக்கு முன் வந்தவர்களுக்கும் மாவட்டச் செயலாளர் பொறுப்பு கொடுக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான பட்டியலையும் ஸ்டாலின் தயார் செய்து வருவதாக சொல்லப்படுகிறது. அதேபோல் ஓபிஎஸ்க்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பு அல்லாமல், மாநில அளவிலான பொறுப்பு கொடுக்க வேண்டும் என்று ஸ்டாலின் கூறி இருக்கிறார்.

    இதனால் திமுகவின் துணை பொதுச்செயலாளர் எண்ணிக்கையை உயர்த்தி, அதில் ஒரு துணைப் பொதுச்செயலாளராக ஓபிஎஸ்ஸை கொண்டு வர உள்ளதாக திமுகவினர் பேசத் தொடங்கியுள்ளனர். இதனால் ஓபிஎஸ் தரப்பும் உற்சாகம் அடைந்துள்ளது. ஓபிஎஸ் மட்டுமல்லாமல் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், விசிகவில் இருந்து வந்த பனையூர் பாபு உள்ளிட்டோருக்கும் மாவட்டச் செயலாளர் பதவி அளிக்கப்பட உள்ளது.

    English Summary

    OPS: Former CM OPS Set for State-Level DMK Role as Key Allies Get District Posts