சென்னை: அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு இனி எப்படி ஆட்கள் நியமிக்கப்படுவார்கள்? நிரந்தர அரசு வேலைக்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு இதனால் என்ன பாதிப்பு ஏற்படும்? தமிழக அரசின் புதிய நடவடிக்கை இப்போது இந்தக் கேள்விகளை எழுப்பியுள்ளது... அரசின் இந்த அவுட்சோர்சிங் முறைக்கு, மூத்த அரசியல் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்குத் தேவையான பணியாளர்களை அவுட்சோர்சிங் முறையில் வழங்குவதற்கான நிறுவனமாக வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷனை (Overseas Manpower Corporation Limited) தமிழக அரசு நியமித்துள்ளது.
அதாவது, அரசு அலுவலகங்களுக்குத் தேவையான சில பணியாளர்களை அரசே நேரடியாகத் தேர்வு செய்து நியமிக்காமல், இந்த நிறுவனம் மூலமாக ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தும்.. இந்த முறையால் அரசுக்கு ஏற்படும் முக்கியமான நன்மை என்னவென்றால், செலவைக் குறைப்பதுதான். நிரந்தர ஊழியர்களை நியமிக்கும்போது சம்பளம், இதர படிகள் உள்ளிட்டவற்றுக்காக அதிக செலவு செய்ய வேண்டியிருக்கும். ஆனால் அவுட்சோர்சிங் முறையில் குறைந்த செலவில் பணியாளர்களைப் பெற முடியும். மேலும், காலிப் பணியிடங்களுக்கு விரைவாக ஆட்களை நியமிக்க முடியும். பணியாளர்களைத் தேர்வு செய்வது, சம்பளம் வழங்குவது போன்ற நிர்வாகப் பொறுப்புகளையும் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் ஒப்படைக்க முடியும். ஆனால், இந்த முறையால் சில பாதிப்புகளும் ஏற்படலாம்.. குறிப்பாக, சோர்சிங் முறையால் நிரந்தர அரசு வேலைவாய்ப்புகள் குறையக்கூடும். இதனால் டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட அரசுப் போட்டித் தேர்வுகளுக்காக பல வருடங்களாக தயாராகும் இளைஞர்களுக்கு வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் பாதிக்கப்படலாம். மேலும், நிரந்தர அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தைவிட ஒப்பந்தப் பணியாளர்களுக்குக் குறைவான சம்பளமே கிடைக்கும் நிலை ஏற்படலாம். அதுமட்டுமல்ல, வேலைக்கான நிரந்தர உத்தரவாதம் இருக்காது என்பதால், ஒப்பந்தம் முடிந்தால் வேலையை இழக்க நேரிடலாம். ஓய்வூதியம், பதவி உயர்வு, மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட சலுகைகளும் கிடைக்காமல் போகலாம். அதேபோல், அவுட்சோர்சிங் நியமனங்களில் இடஒதுக்கீடு முறையாகப் பின்பற்றப்படாவிட்டால், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியின மக்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படும் அபாயமும் உள்ளது. அதனால்தான் பாமக தலைவர் டாக்டர் அன்புமணி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவுட்சோர்சிங் முறையில் நியமிக்கப்படும் பணியாளர்களுக்கு நிரந்தர அரசு ஊழியர்களைவிடக் குறைவான சம்பளமே கிடைக்கும் என்றும், இதனால் தொழிலாளர்களின் உரிமைகளும் ஊதியமும் பறிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். குறிப்பாக, இந்த நியமனங்களில் இடஒதுக்கீடு முறையாகப் பின்பற்றப்படுவதில்லை என்றும், இதனால் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியின மக்களுக்குக் கிடைக்க வேண்டிய வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படும் என்பதை சுட்டிக்காட்டியிருக்கும் ஜவாஹிருல்லா, இந்த அரசாணையைத் திரும்பப் பெற்று, அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை இடஒதுக்கீட்டைப் பின்பற்றி நிரந்தர அடிப்படையில் நிரப்ப வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். தீர்வு என்ன ஆக, அரசுக்கு நிர்வாக செலவைக் குறைக்கவும், தேவையான பணியாளர்களை விரைவாக நியமிக்கவும் அவுட்சோர்சிங் முறை உதவினாலும், நிரந்தர அரசு வேலைக்காகக் காத்திருக்கும் இளைஞர்கள், இடஒதுக்கீடு மற்றும் ஒப்பந்தப் பணியாளர்களின் உரிமைகள் தொடர்பான கேள்விகளும் எழுந்துள்ளன. எனவே, இந்த முறையில் பணியாளர்களை நியமிக்கும்போது அவர்களின் ஊதியம், வேலைப் பாதுகாப்பு மற்றும் சமூகநீதி சார்ந்த அம்சங்கள் எவ்வாறு உறுதி செய்யப்படும் என்பதுதான் இப்போது முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது....!!அவுட்சோர்சிங் முறை
அரசு ஊழியர்களை ஆயாவாக மாற்றிய தவெக எம்எல்ஏ பல்லவி.. குழந்தையை பார்த்துக்க ஆள் இல்லையா?
பாதிப்புகள், சிக்கல்கள்
முழு வலிமை பெறும் இந்திய கடற்படை.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
ஜவாஹிருல்லா கடும் கண்டனம்