ஓயோ ஓட்டலை மிஞ்சிய சென்னை சென்ட்ரல்? ரயில்வே வெயிட்டிங் அறையில் அந்த அரசு ஊழியர் முகம்! அலறிய பயணி

  • சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பெண்கள் காத்திருப்போர் அறை பராமரிப்பு பணிகளுக்காக மூடப்பட்டிருந்த சூழலைப் பயன்படுத்தி, ஆண்கள் காத்திருப்பு அறையில் உள்ள கழிவறையில் குளித்துக் கொண்டிருந்த பெண்ணை ரகசியமாக வீடியோ எடுத்த மின்வாரிய ஊழியர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கோரமான செயல், பொது இடங்களில் பெண்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது.

    Advertisement

    மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த அந்த பெண்ணுக்கு 32 வயதிருக்கும்.. இவர் கேரளா மாநிலத்தில் வசித்து வருகிறார். தன்னுடைய குடும்பத்துடன் சொந்த ஊருக்கு சென்றுவிட்டு மீண்டும் கேரளா திரும்புவதற்காக அவர் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு நேற்று வந்தடைந்தார்.

    Advertisement

    சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷ்ன்

    சென்ட்டிரலில் இருந்து, கேரளா செல்வதற்காக காத்திருந்தார்.. கேரளா செல்லும் ரயிலுக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது.. இந்த இடைப்பட்ட நேரத்தில், பயண களைப்பை போக்குவதற்காக குளிப்பதற்காக ஒரு நல்ல இடத்தை அந்தப்பெண் தேடினார்.

    அதனால் பெண்கள் காத்திருப்போர் அறைக்கு சென்றார்.. ஆனால், அந்த வெயிட்டிங் ரூமில் பராமரிப்பு பணிகள் நடப்பதால், மூடப்பட்டிருந்தது.. அதனால் ஆண்கள் காத்திருப்பு அறையில் இருந்த பெண்களுக்கான கழிவறையை நாடி சென்றார். அங்கு அந்த பெண் குளித்துக் கொண்டிருந்தபோது, அருகிலிருந்த கழிவறையில் மறைந்திருந்த ஒரு நபர், தனது செல்போன் மூலம் அவர் குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார்.

    Advertisement

    ஜெயிலுக்கு போன வேலூர் அருண்

    எதேச்சையாக இதை கவனித்த அந்த பெண், அதிர்ச்சியில் உறைந்து போனார். உடனடியாக கத்தி கூச்சலிட்டு உதவி கோரினார்... பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு, அங்கிருந்த சக பயணிகளும், பொதுமக்களும் ஓடி வந்து, அங்கு மறைந்திருந்த நபரை வளைத்து பிடித்தனர்.. பிறகு உடனடியாக சென்ட்ரல் ரயில்வே போலீசாரிடமும் ஒப்படைத்தனர்.

    போலீசார் அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டதில், அந்த நபர் வேலூர் மாவட்டம் கீழந்தூரைச் சேர்ந்த அருண் (27) என்பது தெரியவந்தது. அவர் மின்வாரியத்தில் கேங்மேனாகப் வேலை பார்த்து வருகிறாராம்.. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த ரயில்வே போலீசார், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குகளை பதிவு செய்தனர்.. இப்போது அருண் ஜெயிலில் உள்ளார்.

    Advertisement

    பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய அரசுப் பணியில் இருப்பவரே, இத்தகைய தரம் தாழ்ந்த செயலில் ஈடுபட்டது பொதுமக்களிடையே பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஓயோ ஓட்டல்களா?

    ஏற்கனவே ரயில்களில் சமீப காலமாகவே காதல் ஜோடிகள் வரம்பு மீறி நடந்து கொள்வது பெரும் தலைவலியாக மாறியுள்ளது. சோஷியல் மீடியாவில் இதுதொடர்பான அத்துமீறல் வீடியோக்களை பதியவிட்டு, "மெட்ரோ ரயில்கள் என்ன ஓயோ (OYO) ஹோட்டல்களா?" என்று இணையவாசிகள் பலரும் கேள்விகளையும் எழுப்பி வருவதையும் நாம் மறுக்க முடியாது.

    அந்த அளவுக்கு சில ஜோடிகள் செய்யும் ஆபாசச் செயல்கள், குடும்பத்தோடு வருபவர்களையும் முகம் சுளிக்க வைத்து வருகின்றன.. இப்போது இதில் பாலியல் புகார்களும் வெடித்து கிளம்பி உள்ளன.

    Advertisement

    பெண்கள் பாதுகாப்பு அவசியம்

    "பயணிகள் பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தும்போது அடிப்படை ஒழுக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும். சக பயணிகளுக்கு இடையூறு விளைவிப்பவர்கள் மீது பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் ரயில்வே பலமுறை எச்சரிக்கை விடுத்தது. ஆனாலும் சில பயணிகள் அதை காதிலேயே போட்டுக் கொள்வதில்லை என்றே தெரிகிறது..

    இனிவரும் காலங்களில் நடைபெறாமல் இருக்கவும், பொது இடங்களில் பெண்களுக்குப் பாதுகாப்பான சூழலை உறுதி செய்யவும் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை ரயில்வே நிர்வாகம் தீவிரப்படுத்த வேண்டும் என்பதே நம்முடைய கோரிக்கையாக உள்ளது..

    அதேபோல இதுபோன்ற அநாகரீகமான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது எடுக்கப்படும் அதிரடி நடவடிக்கை மட்டுமே எதிர்காலத்தில் இது போன்ற அநாகரீகச் செயல்களை தடுக்கும் என்று நம்பப்படுகிறது...!!

    English Summary

    OYO Hotel Better Than Chennai Central? Woman Shocked After Waiting Room Bathroom Incident