கஜானா காலியா? விஜய் சொன்ன மேட்டர்.. அப்படி எல்லாம் ஆகாது! உடைத்து பேசிய ப.சிதம்பரம்

  • சென்னை: தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்ற ஜோசப் விஜய், முந்தைய அரசு கஜானாவை காலி செய்துவிட்டு சென்றிருக்கிறது என்று விமர்சித்திருந்தார். ஆனால் இந்த குற்றச்சாட்டு உண்மை இல்லை என்று முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கூறியிருக்கிறார்.

    Advertisement

    மே 10ம் தேதியன்று முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றார். இதனையடுத்து தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் விதமாக 3 முக்கிய உத்தரவுகளில் கையெழுத்திட்டார்.

    Advertisement

    3 திட்டங்கள்

    1. 500 யூனிட்டுகளுக்குள் மின்சாரத்தை பயன்படுத்துபவர்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம்
    2. போதைப்பொருள் பயன்பாட்டை ஒழிக்க மாவட்டம் தோறும் சிறப்பு படை
    3. சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை

    மக்களின் கேள்வி

    இதில் முதல் பாயிண்ட் தான் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது. அதாவது தேர்தல் வாக்குறுதியில் மொட்டையாக 200 யூனிட் இலவச மின்சாரம் என்று சொல்லிவிட்டு, இப்போது வந்து, மாதம் 500 யூனிட்டுக்கு குறைவாக பயன்படுத்துபவர்களுக்கு மட்டும்தான் இலவச மின்சாரம் என்று சொல்வது ஏன்? என மக்கள் கேள்வி எழுப்பினர்.

    திமுக அரசுதான் காரணம்

    இப்படியெல்லாம் கேள்வி வரும் என்று ஏற்கனவே விஜய்க்கு தெரியும். எனவேதான் 3 திட்டங்களில் கையெழுத்து போட்டவுடன் பேசிய அவர், "முந்தைய அரசு கஜானாவை காலி செய்துவிட்டுப் போயுள்ளது. தூக்க முடியாத சுமையை ஏற்றி வைத்துவிட்டுச் சென்றுள்ளனர்" என்று கூறியிருந்தார். அதாவது இந்த திட்டம் இப்படி மாற்றியமைக்கப்பட காரணம் நாங்க கிடையாது.. முந்தைய திமுக அரசுதான் என்று கூறியிருந்தார்.

    Advertisement

    இப்படி இருக்கையில் கஜானா காலி என்கிற விஜய்யின் குற்றச்சாட்டு உண்மையில்லை என்று ப.சிதம்பரம் பேசியிருக்கிறார். கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியே முதலமைச்சர் விஜய்யின் பேச்சு உண்மையில்லை என்று சொல்லியிருப்பது கூட்டணிக்குள் விவாதங்களை கிளப்பியிருக்கிறது.

    என்ன பேசினார் ப.சிதம்பரம்

    தனியார் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், "கஜானா காலி என்று கூறிய குற்றச்சாட்டு தவறு. கடன் இல்லாமல் எந்த அரசும் நடக்காது. கஜானா எப்போதும் காலியாகாது. நமக்கு 3 வழிகளில் நிதி வரும். ஒன்று வரி மூலம் பெறப்படும் வரி. இரண்டாவது மத்திய அரசின் நிதி பகிர்வு. மூன்றாவது கடன். ஆக வருடத்தின் 12 மாதங்களும் கஜானாவை நிரப்புவதும், அதிலிருந்து செலவாவதும் நடந்துக்கொண்டேதான் இருக்கும்" என்று கூறியுள்ளார்.

    Advertisement

    ப.சிதம்பரத்தின் பேச்சில் உண்மை இருந்தாலும் கூட, கேட்ட மாத்திரத்தில் 2 அமைச்சர் பதவி, ஒரு ராஜ்யசபா எம்பி போஸ்ட் கொடுத்த பின்னரும் ஏன் நமக்கு எதிராக பேச வேண்டும் என்று தவெகவினர் அப்செட் ஆகியிருக்கின்றனர்.

    English Summary

    P Chidambaram: Joseph Vijay, upon assuming office as the new Chief Minister of Tamil Nadu, criticized the previous government for leaving the state exchequer empty. However, former Union Finance Minister and senior Congress leader P. Chidambaram has stated that this allegation is untrue.