கோப்புகள் இருந்தால் வெளியிடுங்க! அச்சுறுத்துவது போல பேசுவது.. முதல்வர் விஜய்க்கு பெ சண்முகம் அட்வைஸ்

  • சென்னை: என்னுடைய டேபிளில் மூன்று கோப்புகள் இருக்கு. எப்போது வேண்டுமானாலும் திறப்பேன்.. என முதல்வர் பேசியிருக்கிறார். உடனடியாக அந்த கோப்புகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்கு தான் முதல்வர் முன் வர வேண்டுமே தவிர.. அதை வைத்து எதிர்க்கட்சிகளை அச்சுறுத்துவதை போல, கூறுவது பொருத்தமானது அல்ல என சிபிஎம் மாநில செயலாளர் பெ சண்முகம் கூறியுள்ளார்.

    Advertisement

    சிபிஎம் மாநில செயலாளர் பெ சண்முகம் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    Advertisement

    கோப்புகள் இருந்தால் நடவடிக்கை எடுங்க..

    தமிழக முதல்வர் அவர்கள் என்னுடைய டேபிளில் கோப்பு எல்லாம் இருக்கு.. மூன்று கோப்புகள் இருக்கு. எப்போது வேண்டுமானாலும் திறப்பேன்.. என்ற முறையில் சொல்லியிருக்கிறார். அந்த கோப்புகள் அவர் கைக்கு வந்த பிறகு அதில் காத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. உடனடியாக அந்த கோப்புகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்கு தான் முதல்வர் முன் வர வேண்டுமே தவிர.. அதை வைத்து எதிர்க்கட்சிகளை அச்சுறுத்துவதை போல, என் கையில் கோப்பு இருக்கு என கூறுவது பொருத்தமானது அல்ல.

    உண்மையிலேயே சம்பந்தப்பட்ட துறைகளில் ஊழல், முறைகேடுகள் நடந்து இருக்கிறது என்பதற்கான ஆதாரங்கள் இருந்தால் உடனடியாக சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்கு தமிழக முதல்வர் அவர்கள் தாமதம் இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வலியுறுத்துகிறோம்" என்றார்.

    Advertisement

    விஜய் அறிவிப்பினை வரவேற்கிறோம்

    முதல்வர் விஜய் இன்று சட்டசபையில் 110 விதியின் கீழ் 3 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில் முக்கியமான ஒன்று பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படுகிறது என்ற முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். முதல்வர் விஜய்யின் இந்த அறிவிப்பினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் வரவேற்கிறோம்.

    எங்களை பொறுத்தவரை 13 ஏரிகளை அழித்தும், 3,000க்கும் மேற்பட்ட நஞ்சை நிலங்களை அழித்து தான் பரந்தூர் விமான நிலையம் அமைக்கப்படும் என கடந்த ஆட்சி காலத்தில் அறிவிக்கப்பட்டது. அதற்கு எதிராக அப்பகுதி மக்கள், விவசாயிகள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வந்தார்கள்.

    Advertisement

    3 ஏரிகளை அழிப்பது என்பது எல்லாம், எவ்வளவு பெரிய சிறந்த திட்டமாக இருந்தாலும் அதை ஏற்கக் கூடியது அல்ல. மாற்று இடத்தில் விமான நிலையம் அமைக்கப்படும் எனவும், பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும் என முதல்வர் விஜய் சொல்லியிருப்பதை வரவேற்கிறோம்.

    அனைத்து பேருந்துகளிலும்

    இதே போன்று இரண்டாவதாக முதல்வர் விஜய் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தது போன்று, ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் வழங்கப்படும் என அறிவித்து உள்ளார். 3 சிலிண்டர்களுக்கான பணம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என இந்த திட்டத்தினை அறிவித்ததையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் வரவேற்கிறோம்.

    Advertisement

    3-வதாக பெண்கள் ஏற்கனவே மகளிர் விடியல் திட்டம் கீழ் குறிப்பிட்ட பஸ்களில் மட்டும் தான் இலவசமாக செல்ல முடியும் என்று இருந்த நிலையில், தவெக தங்களது தேர்தல் அறிவிக்கையில் சொல்லியிருப்பதின் ஒரு பகுதியாக டீலக்ஸ், எக்ஸ்பிரஸ் என நகர்ப்புறங்களில் அனைத்து பஸ்களிலும் பெண்கள் இலவச பயணம் செய்யலாம் என அறிவித்து இருக்கிறார்கள். இதனையும் வரவேற்கிறோம்.

    எனினும் தமிழ்நாடு முழுக்க பெண்கள் இலவசமாக எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்று தான் தவெக வாக்குறுதி அளித்து இருந்தது. எனவே தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்பது தான் எங்களது கோரிக்கை. படிப்படியாக நிறைவேற்ற தவெக அரசை வலியுறுத்துகிறோம்" என்று கூறினார்.

    English Summary

    P Shanmugam: "The Chief Minister has stated that there are three files on his desk which he could open at any time. CPM State Secretary P. Shanmugam has remarked that, rather than making statements that appear to threaten opposition parties, the Chief Minister should instead come forward to take appropriate action on those files immediately."