திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக்


  • சென்னை: சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தவெக ஆட்சியமைத்துள்ளது. தவெக ஆட்சிக்கு வந்த 3 வாரங்களிலேயே அடுத்தடுத்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. தவெகவுக்கு ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை கிடைக்கவில்லை. தவெக ஆட்சி 5 வருடங்கள் தொடருமா, கூட்டணி கட்சிகள் என்ன நிலைப்பாட்டை எடுக்கும் என்கிற சந்தேகங்கள் நிலவுகின்றன. இந்நிலையில் தவெகவுக்கு ஆதரவளித்தாலும் பிரச்சனைகளின் அடிப்படையில் திமுகவுடன் உங்கள் உறவு தொடரும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சண்முகம் பரபரப்பு கருத்தை வெளியிட்டுள்ளார்.

    Advertisement

    சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் தனியார் தொலைக்காட்சிக்கு நேர்காணல் வழங்கியுள்ளார். அதில் அவர் கூறுகையில், "பிரச்சனைகளில் அடிப்படையில் திமுகவுடன் எங்கள் உறவு தொடரும். இதை சிபிஐ, சிபிஎம் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளது. தமிழ்நாட்டிற்கு எதிராக பாஜக செயல்படும்போது, மதசச்சார்பின்மை உள்ளிட்ட விவகாரங்களில் திமுகவுடன் உங்கள் உறவு தொடரும். சூழல் தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கும்.

    Advertisement

    ராசா மீது கோபம்

    தவெகவுக்கு எந்த அடிப்படையில் ஆதரவு என்பதை திமுகவிடம் தெளிவுபடுத்தியுள்ளோம். அதேநேரத்தில் திமுகவை திருப்திபடுத்த வேண்டிய அவசியம் இல்லை. விசிக, முஸ்லிம் லிக் குறித்த ஆ.ராசா விமர்சனம் மோசமானது. முக்கிய பொறுபுகளை வகித்தவர் கொச்சையாக பேசுவது கண்டிக்கத்தக்கது. மோசமான வார்தைதைய பயன்படுத்தியதற்காக ஆ.ராசா மன்னிப்பு கேட்க வேண்டும். அதனால் தான் கடுமையான சொற்களை பயன்படுத்த வேண்டாம் என ஸ்டாலின் கூறினார்.

    அதிமுகவை அமைச்சரவையில் சேர்த்தால் எங்கள் ஆதரவை மறுபரிசீலனை செய்வோம் என்று தவெகவிடம் கூறினோம். அதற்கு அதிமுகவை எங்கள் அமைச்சரவையில் இணைக்கும் சிந்தனை இல்லை என முதலமைச்சர் விஜய் தெளிவுபடுத்த சொன்னதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறினார். விஜய் தமிழகத்தின் அனைத்து தலைவர்களையும் சந்தித்தார். அந்த வகையில் அவர் எடப்பாடியையும் சந்தித்திருக்க வேண்டும்.

    Advertisement

    திமுக தடுக்கவில்லை

    முன்னாள் முதலமைச்சர், அதிமுக பொதுச்செயலாளர் என்பதால் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்தித்திருக்கலாம். விஜய் அவரை சந்தித்திருந்தால் எந்த பிரச்சனையும் ஏற்பட்டிருக்காது.

    50 வருடங்களாக திமுக, அதிமுக எதிரெதிர் அரசியலை செய்துள்ளனர். திடீரென அவர்கள் இணைந்தால் மக்கள் ஏற்க மாட்டார்கள் என்பதால் அந்த சர்ந்தர்ப்பவாத சிந்தனைக்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்கவில்லை. தவெக ஆட்சியமைக்காவிடின் திமுக - அதிமுக இணைந்திருக்க வாய்ப்புகள் இருந்தன. ஆனால் தவெக ஆட்சியமைப்பதை திமுக தடுக்கவில்லை" என்றார்.

    English Summary

    P Shanmugam: CPIM P Shanmugam said, Issue based we will travel with DMK. Both communist parties too this decision. This made TVK Vijay into shock.