பாகிஸ்தான் இன்ப்ளூயன்ஸர்களின் விஜய் ஆதரவு போஸ்ட்களால் சர்ச்சை

  • சென்னை: பாகிஸ்தானை சேர்ந்த சமூக வலைத்தள "இன்ப்ளூயன்ஸர்கள்" தமிழக முதல்வர் விஜய்க்கு ஆதரவு தெரிவிப்பதுபோல சமூகவலைதளங்களில் பிரச்சாரம் செய்து வருவதாக வெளியாகியுள்ள தகவல்கள், புது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    தவெக அரசு, ஒரு ரீல்ஸ் அரசு என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்கிறார்கள். எல்லாவற்றையும் இன்ஸ்டாவில் ரீல்ஸ் போட்டு ஆட்சியை பிடித்ததாக கேலி செய்யப்படுவது உண்டு. ஆட்சிக்கு வந்த பிறகும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் நடத்தும் ஆய்வுகளை ரீல்ஸ்ஸாக்கி வருகிறார்கள். இதை எதிர்க்கட்சிகள் கண்டித்து வருகிறார்கள்.

    Advertisement

    இந்த நிலையில் முதல்வர் விஜய் சிறப்பாக ஆட்சி செய்வதாகவும், தமிழகத்தையே தலைகீழாக புரட்டி போட்டுவிட்டதாகவும் அவர் பிரதமராக போகிறார் என்றும் வட மாநிலங்களில் உள்ள சமூக வலைத்தள "இன்ப்ளூயன்ஸர்கள்" வீடியோ வெளியிட்டு வருகிறார்கள். முதல்வர் விஜய்யின் ஆட்சி குறித்த தகவல்கள் எப்படி வடமாநிலத்தவரை ஈர்த்தது என தெரியவில்லை.

    இது எல்லாவற்றுக்கும் மேலாக பாகிஸ்தானை சேர்ந்த இன்ப்ளூயன்ஸர்கள், முதல்வர் விஜய் குறித்து பேசுவதுதான் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. "பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானை பின்பற்றி தான் அரசியலுக்கு வந்ததாக முதல்வர் விஜய் கூறியுள்ளார்" என "ஸ்க்ரோல் பாகிஸ்தான்" என்ற முகநூல் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    Advertisement

    முதல்வர் விஜய் புகைப்படங்களுடன், ஏராளமான சமூகவலைதள கணக்குகளும் , முகநூல் பக்கங்களும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தானில் கம்மி ரேட்டுக்கு ஆள் கிடைப்பதால் யாரோ இதுபோல வீடியோ வெளியிட வைத்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

    இதனிடையே முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: ஆதாரமற்ற செயலையும், அடிப்படை இல்லாத செய்திகளையும் சமூகவலைதளங்களில் பெய்டு இன்ப்ளூயன்சர்கள் மூலம் நரேட்டிவ் செட் செய்வதில் தவெக அரசுக்கு தொடர்பு இருக்கிறதா என்பதை விளக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

    அண்மையில் பாதிஸ்தானுக்கு விஜய் சென்றது போல் அங்கு இம்ரான்கானுடன் இருப்பதாக எப்படி ஆதாரமற்ற செய்தி வந்தது. ஒரு மாநில முதல்வர் பிற நாடுகளுக்குச் செல்ல வேண்டும் என்றால் மத்திய அரசின் அனுமதி வேண்டும். அப்படியிருக்கும் நிலையில் இது போன்ற பொய்யான தகவல்களை பரப்புவது சரியல்ல என கண்டனத்தை ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

    English Summary

    Pakistan Influencers are supporting Tamil nadu CM Vijay in Social media posts? How did they are doing propaganda?