விஜய் பிரதமரா? அசிங்கமா இருக்கு! காங்கிரஸ் நேரம் பார்த்து கழுத்தை அறுக்கும்.. பழ கருப்பையா டென்ஷன்

  • சென்னை: முதல்வர் ஆகி என்ன புதிய திட்டம் கொண்டு வந்தாய்.. இதில், நீ பிரதமராக வந்து என்ன செய்யப் போகிறாய்.. ஒரு இன்ஸ்டாகிராமை வைத்து முதல்வர் ஆகிட்டோம்.. இன்னொரு இன்ஸ்டாகிராம் வைத்து பிரதமர் ஆகிவிடலாம் என நினைக்கிறார்.. ஒரே அசிங்கமாக இருக்கிறது என முதல்வர் விஜய்யை பழ கருப்பையா கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், காங்கிரஸ் காரன் கடைசியில் உன்னை நேரம் பார்த்து கண்டிப்பாக கழுத்தை அறுப்பான். இது தான் நடக்கப் போகிறது எனவும் கூறினார்.

    Advertisement

    விஜய் பிரதமர் வேட்பாளர் என்ற பேச்சு அதிகரித்து வரும் நிலையில் இது தொடர்பாக பழ கருப்பையா விமர்சித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது:-

    Advertisement

    காங்கிரஸ் ஒத்து வரமாண்டான் அது வேற.. அசிங்கமாக இருக்கு.. அதாவது ஒன்றுமே இல்லை. நாம சினிமாவில் நடித்துவிட்டு வந்தோம், நம்மை முதல்வராக ஆக்கினார்கள். ஏன் இந்தியா ஆக்காது என்று நினைக்கிறார். தமிழ்நாட்டு காரர்களுக்காவது உன்னை தெரியும். உத்தர பிரதேசக் காரனுக்கு உன்னை எப்படி தெரியும்.. அசிங்கமாக இருக்கிறது.

    காங்கிரஸ் காரன் நேரம் பார்த்து கழுத்தை அறுப்பான்

    இப்படி சொல்லி மீண்டும் காலத்தை ஓட்டுவீர்களே தவிர நீ முதல்வராக ஆகி என்ன புதிய திட்டம் கொண்டு வந்தாய்.. என்ன நிதி நிலை அறிக்கையில் மாறுதல்.. ஏற்கனவே போட்ட திட்டங்களை வேறு பெயரில் கொண்டு வந்து.. 5 கோடி பத்து கோடி கூடுதலாக போட்டு அந்த திட்டத்தை கொண்டு வந்து இருக்கிறாய்.. அதை தவிர வேறு ஒன்றும் செய்யவில்லை. இதில், நீ பிரதமராக வந்து என்ன செய்யப் போகிறாய்..

    Advertisement

    காங்கிரஸ் காரன் கடைசியில் உன்னை நேரம் பார்த்து கண்டிப்பாக கழுத்தை அறுப்பான். இது தான் நடக்கப் போகிறது. அசிங்கமாய் இருக்கிறது. தகுதியில்லாமல் யாரும் எதை வேண்டுமானாலும் பேசலாம் என்பது இல்லை. இது அவருடைய மதிப்பை குறைக்கிறதே தவிர வேறொன்றுமில்லை.

    இன்ஸ்டாகிராமை வைத்து பிரதமர் ஆகிவிடலாம்

    இன்ஸ்டாகிராமை வைத்தே முதல்வர் ஆகிவிட்டோம். இன்னொரு இன்ஸ்டாகிராமை வைத்து பிரதமர் ஆகிவிடலாம் என்று நினைக்கிறார். என்ன செய்வது.. இவ்வளவுக்கு கீழே போய்விட்டது நாடு. மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு ஒரு முதல்வருக்கு பாதுகாப்புக்காக மட்டும் ரூ.7 கோடி ரூபாய் செலவு ஆகிறது என்றால் என்ன அர்த்தம். பாடி கார்டுகள், பேரி கேர்டுகள், விமான செலவு என இதற்கெல்லாம் ஆடம்பர செலவு எதற்கு..

    Advertisement

    எதில் முக்கியமோ அதற்குரிய காரியங்கள் செய்யப்படாமல், ஆடம்பரமான காரியங்கள் செய்யப்படுகின்றன. மேட்டூர் அணையில் இன்னும் 3 ஆயிரம் கோடி செலவு செய்து தூர் வாரினால் இன்னும் 30 அடி அளவுக்கு கூடுதலாக தண்ணீரை சேமிக்க முடியும். 7 கோடிக்கு பூ தூவுவது முக்கியமா இல்லை 30 டிஎம்சி தண்ணீர் கூடுதலாக சேமிப்பது முக்கியமா..

    எம்.எல்.ஏக்களுக்கு கார் எதற்கு?

    சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் எல்லாம் எதற்கு தேவைப்படும் என்றால் கல்யாண வீட்டுக்கு போவதற்கும், கருமாரி வீட்டுக்கு போவதற்கும் தான் உதவும். இதற்கு ரூ.1 லட்சம், கார் டிரைவர், பிஏ, பெட்ரோல் என எத்தனை கோடி செலவு செய்வார்கள். ஒரு அரசு பேருந்தில் எம்.எல்.ஏ வந்து இறங்கினால் அவரை மதிப்பாங்க.. அதை விட்டுவிட்டு காரில் வந்தால் யாரு மதிப்பாங்க.. இதற்கு ஏன் இவ்வளவு கோடி செலவு செய்ய வேண்டும்.. என்று கூறினார்.

    English Summary

    Pala Karuppiah criticize vijay: "What new scheme did you introduce after becoming Chief Minister? And what do you intend to achieve if you become Prime Minister? He seems to think that just as he became Chief Minister using Instagram, he can become Prime Minister with another Instagram campaign—it is truly disgraceful." — Pazha Karuppiah severely criticized Chief Minister Vijay with these words.