பழநி ரூ.100 கோடி நில மோசடி.. தலைமறைவாக இருந்த பத்திர எழுத்தர் உட்பட 2 பேர் கைது!

  • திண்டுக்கல்: பழநியில் ரூ.100 கோடி நிலமோசடி வழக்கில் கடந்த 2 மாதமாக தலைமறைவாக இருந்த பத்திர எழுத்தர் உட்பட 2 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

    Advertisement

    திண்டுக்கல் மாவட்டம் பழநி அடிவாரம் பகுதியில் உள்ள தண்டபாணி சுவாமிகள் மடத்துக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம் ரூ.2 கோடிக்கு சட்ட விரோதமாக 2 தனி நபர்களுக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டது.

    Advertisement

    இது தொடர்பாக 88 பேரிடம் விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீசார் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், முருகதாஸ், இடைத்தரகர் ஜெயப்பிரகாஷ் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். அதில், வழக்கறிஞர் அன்வர்தீன் சிறையிலேயே உயிரிழந்தார்.

    இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பத்திர எழுத்தர் சிவகுமார் உட்பட 5 பேர் தலைமறைவாக இருந்தனர். அவர்கள் குறித்த எந்தத் தகவலும் தெரிய வராததால் போலீசாரால் அவர்களை நெருங்க முடியவில்லை.

    அதனால் கடந்த 2 மாதங்களாக அந்த 5 பேரையும் கண்டுபிடிக்க முடியாமல் சிபிசிஐடி போலீசார் திணறி வந்தனர். இதேபோல், இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்ட முக்கிய புள்ளி குறித்தும் ஆதாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.

    Advertisement
    உலகப் புகழ்பெற்ற பழனி பஞ்சாமிர்தம் ரகசியம்.. பழநி பஞ்சாமிர்தத்தின் அதிசயம்! மருத்துவ குணம் ஆச்சரியம்

    அதே நேரத்தில் இந்த மோசடி தொடர்பாக முக்கிய குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்துவிட்டதால், இதுவரை நடத்திய விசாரணை அடிப்படையில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவும் சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டிருந்தனர்.

    இந்நிலையில் இன்று காலை, பத்திரப் பதிவுக்கு உடந்தையாக இருந்த பதிவுத்துறை இளநிலை உதவியாளர் சிவசங்கரி, கடந்த 2 மாதமாக தலைமறைவாக பத்திர எழுத்தர் சிவகுமார் ஆகிய 2 பேரையும் அவர்களது வீடுகளில் வைத்து சிபிசிஐடி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மோசடி தொடர்பாக ஏற்கெனவே இளநிலை உதவியாளர் சிவசங்கரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    CBCID police arrested two individuals, including a document writer, who had been absconding for the past two months in connection with a ₹100 crore land fraud case in Palani.