பழனி பத்திரப்பதிவு நிலமோசடி.. கருகிய வாசனையுடன் கதறும் இடர்சாமிகள்.. அதிமுகவை வெளுத்து வாங்கிய தவெக

  • சென்னை: தவறு செய்தது யாராக இருந்தாலும் உடனே துரித நடவடிக்கையை முடுக்கி விடும் மனசாட்சி உள்ள மக்களாட்சியை இழித்துப் பேசும் தீர்ந்துபோன சக்தி, அதிகார வெறியில், ஆற்றாமையில் தீய்ந்துபோய் கருகிய வாசனையில் காண்டாகிக் கதறுவது ஏனோ?" என்று அதிமுகவுக்கு தவெக தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    பழனி முருகன் கோவில் நிலம் ரூ.100 கோடிக்கு மோசடியாக விற்கப்பட்ட விவகாரத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். .

    Advertisement

    பழனி முருகன் கோவில் பத்திரப்பதிவு

    இந்தச் சம்பவத்தை வெறும் எழுத்துப் பிழை (Clerical error) என்று கூறி அலட்சியமாக கடந்து செல்ல முடியாது என்று சுட்டிக்காட்டியுள்ள அவர், இந்த வழக்கை மாநில அரசு உடனடியாக சிபிஐ (CBI) விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். முறைகேட்டின் பின்னணியில் உள்ள உண்மைகளைக் கண்டறிய சிபிஐ விசாரணை ஒன்றே சரியான தீர்வு என்பது அவரது வாதமாக உள்ளது.

    அதேபோல இந்த பத்திரப்பதிவு மோசடி எப்படி நடந்தது என்பது குறித்த முழுமையான காலவரிசையை (Timeline) திமுக வெளியிட்டுள்ளது. முறைகேடு நடைபெற்ற விதம் மற்றும் அதன் பின்னணியில் உள்ள நிகழ்வுகளைத் தெளிவுபடுத்தும் வகையில் இந்தத் தகவல்களை திமுக முன்னிலைப்படுத்தியுள்ளது. பழனி கோயில் சொத்துகள் பறிபோன விவகாரத்தில் அரசியல் ரீதியாக ணு கட்சிகளும் தீவிரமான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில், இந்த டைம்லைன் அறிக்கை பொதுமக்களிடையே பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

    Advertisement

    எடப்பாடி பழனிசாமி கண்டனம்

    இந்நிலையில், தவறு செய்தது யாராக இருந்தாலும் உடனே துரித நடவடிக்கையை முடுக்கி விடும் மனசாட்சி உள்ள மக்களாட்சியை இழித்துப் பேசும் தீர்ந்துபோன சக்தி, அதிகார வெறியில், ஆற்றாமையில் தீய்ந்துபோய் கருகிய வாசனையில் காண்டாகிக் கதறுவது ஏனோ? என்று தவெக காட்டமாக கூறியிருக்கிறது.

    தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு அதிகாரப்பூர்வ 'எக்ஸ்' தள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில் "டேபிளுக்கு கீழே தவழ்ந்துபோய் நாற்காலியைப் பிடித்தவர்கள் எல்லாம் நம் ஆட்சியை பார்த்து பழிப்பது கண்டு கொடநாடு எஸ்டேட் மரங்களும் மண்ணும் அங்கு நடந்த மர்மங்களும்கூட பல்லைக் காட்டி சிரிக்கின்றன.

    Advertisement

    தீர்ந்து போன சக்தி - கருகிய வாசனை

    தவறு செய்தது யாராக இருந்தாலும் உடனே துரித நடவடிக்கையை முடுக்கி விடும் மனசாட்சி உள்ள மக்களாட்சியை இழித்துப் பேசும் தீர்ந்துபோன சக்தி, அதிகார வெறியில், ஆற்றாமையில் தீய்ந்துபோய் கருகிய வாசனையில் காண்டாகிக் கதறுவது ஏனோ?

    பழனி விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் சிரத்தையுடன் இறங்கி உள்ளது தெரியாமல், பத்தாம்பசலித்தன அரசியல் அறிக்கை விடுவது ஏனோ?.

    ஆட்சி அதிகாரத்திற்காக, பதவி சுகத்திற்காக, மாநில உரிமைகளை அடகுவைத்த 'மற்றும் பலர்' தலைமை, இன்று மாநில உரிமைகளை அடகுவைத்த 'மற்றும் பலர்' தலைமை, இன்று மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்காத மக்களரசை பார்த்துப் பேசுவதெல்லாம் மாபெரு.ம் நகைச்சுவை.

    Advertisement

    எடப்பாடி இடர்சாமிகள் ரீல்ஸ்

    ஏ.ஐ. தெரிந்த ஆட்களைத் தேடி அலையும் எடப்பாடி இடர்சாமிகள் ரீல்ஸ் பற்றிப் பேசி அழுதாலும் இனி அரசியலில் அழுது புரள்வதைத் தவிர வேறு வழியில்லை.

    இளைஞர்களுக்காக, பெண்களுக்காக,விவசாயிகளுக்காக என அனைத்து தரப்பு மக்களுக்காக உண்மையாக, நேர்மையாக, லஞ்ச ஊழலற்ற முறையில் உழைக்கத் தெரிந்த அரசை ஆற்றாமையில் அழுதுகொண்டே ஏச வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்." என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது...

    English Summary

    Palani Land Registration Scam! TVK Attacks Edappadi Palaniswami and AIADMK Over Land Fraud