சென்னை: பழனி முருகன் கோயில் மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள, சுமார் ₹100 கோடி மதிப்புள்ள 1.40 ஏக்கர் நிலம் தனியார் நபர்களுக்கு முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக மாரிதாஸ் கடுமையான கேள்விகளை எழுப்பி உள்ளார்.
இந்த வழக்கு தமிழகத்தையே உலுக்கி வருகிறது. சிபிசிஐடி விசாரணை ஒருபுறம் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்த மோசடியின் பின்னணியில் உள்ள நபர்கள் யார் என்று சமூக ஊடகவியலாளர் மாரிதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.
மாரிதாஸ் தனது பதிவில் அமைச்சர் ரமேஷ் பித்தலாட்டம் எங்கே உடைகிறது என்றால் ! பழனி பத்திரபதிவாளர் லீவில் சென்றால் அருகே 12 கிமி தூரத்தில் தொப்பம்பட்டி அருகே கீரணூர் SRO அவரை கூப்பிடலாமே, இல்லை சத்திரப்பட்டி SRO 15 கிமி தூரத்தில் இருக்கு அவரை கூப்பிடிருக்கலாமே , அட 20 கிமி தூரத்தில் கள்ளிமந்தையம் SRO இருக்கார் அவரை கூப்பிடலாமே... இது தானே வழக்கம். அது என்ன 100 கிமி வெளியில் கொடைக்கானல் SRO வந்து தான் பதிவு செய்ய எவன் திட்டம் போட்டான்? பிரச்சனை இப்படி இருக்க - அமைச்சர் ரமேஷ் எப்படி அந்த பத்திர பதிவாளார் தெரியாமல் செய்துவிட்டார் என்பது போல் பேட்டியில் கூறுகிறார்? ரமேஷ் யாரையே காப்பாற்றுவதற்கு முயற்சிகிறார். 100 கோடி கோவில் நிலம் - அதை எதிர்த்து போராட வேண்டிய அதிகாரி நிலம் பதிவான உடனே சென்னைக்கு புரோமோஷன் வாங்கிட்டு போவார் : அது ரமேஷ்க்கு தெரியாது? கோவில் நிலம் பதிவு செய்த மாவட்ட பதிவாளார் அந்தா ஆளை நாங்கள் காட்டு கத்து கத்திய பின் இடை நீக்கம் செய்வீர்.. கைது இல்லை.. பதிவு செய்தவன் விவரம் சொல்லவில்லை. இதற்கெல்லாம் முழு பொறுப்பாக வேண்டிய IAS ஆபிஸர் எங்கே ஆளை காணம்... இதற்கு பதில் சொல்ல வேண்டிய அமைச்சர் ரமேஷ் வெக்கம் கூச்சம் இல்லாமல் பதிவு செய்த பத்திர பதிவாளருக்கு வக்காலத்து வாங்குவார்... ஆனால் கேள்வி கேட்க கூடாது? கொடுமை அந்த கொடைக்கானல் பத்திரபதிவாளர் சொத்து ஆவணங்கள் பதிவு செய்யும் Core Function சார்ந்த SRO கிடையாது.. அவருக்கு இந்த பத்திர பதிவு செய்ய உரிய தகுதியும் இல்லை.. , என்று மாரிதாஸ் தனது போஸ்டில் கடுமையாக கேள்வி எழுப்பி உள்ளார். பழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி கோயில் நிலத்தை அபகரிக்க முயன்ற நபர்கள் யார் என்ற கேள்வி மக்கள் பலர் மத்தியில் எழுந்துள்ளது. சார்பதிவாளர் சஸ்பெண்ட், வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம், உயர் நீதிமன்றம் பத்திரப்பதிவை ரத்து செய்தது எனப் பழனி முருகன் கோவில் நில மோசடி விவகாரத்தில் அடுத்தடுத்து அதிரடித் திருப்பங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. ஆனால், இந்த விவகாரம் பூதாகரமானதில் இருந்து பொதுமக்கள் மத்தியில் எழுந்த ஆகப் பெரிய குமுறல் இதுதான்.. எல்லாவற்றையும் சொல்கிறார்களே... கடைசி வரை அந்த ரூ.100 கோடி கோயில் நிலத்தை ஆக்கிரமித்து, திருடி, தன் பேருக்குப் பத்திரப்பதிவு செஞ்ச அந்தத் தனிநபர்கள் யார்னு ஏன் வெளிய சொல்லாம மூடி மறைக்கிறாங்க? என்ற கேள்வி எழுந்துள்ளது. அரசியல் மேடைகளிலும் சமூக வலைதளங்களிலும் அந்த பவர் செண்டர் யார்? என்ற விவாதங்கள் தீப்பற்றி எரியும் நேரத்தில் , பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் பதிவாகியுள்ள முதல் தகவல் அறிக்கையின் மூலமாக அந்த மர்ம நபர்களின் முகமூடி தற்போது கிழிந்திருக்கிறது. நிலத்தை அபேஸ் செய்ய துணிந்த அந்தப் புள்ளிகள் யார், அவர்களுக்குப் பின்னால் இருக்கும் நெட்வொர்க் என்ன என்ற முழு விபரம் இதோ: கோவில் நிர்வாகத்தின் நிலப் பிரிவு கண்காணிப்பாளர் முருகானந்தம் கொடுத்த புகாரின் அடிப்படையில், காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ள அந்த அதிகாரப்பூர்வ ஆவணங்களின்படி, இந்த மெகா மோசடியின் பின்னணியில் உள்ள பெயர்கள்.. விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முருகதாஸ். இவர் 'திருப்புகழ் சாமிகள், முருகதாஸ் சாமிகள் மற்றும் தண்டபாணி சாமிகள் டிரஸ்ட்' என்ற போலியான ஒரு தனியார் அறக்கட்டளையின் நிர்வாகி என்று தன்னைத்தானே அறிவித்துக் கொண்டு, இந்த 1.40 ஏக்கர் அரசு நிலத்திற்குத் தான் தான் ஓனர் என்பது போல ஆவணங்களைத் தயாரித்துள்ளார். உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த வெள்ளத்துரை மற்றும் பழனியைச் சேர்ந்த சேதுபதி. ரூ.100 கோடி மதிப்புள்ள இந்த நிலத்தை, வெறும் ரூ.2 கோடிக்குக் கைமாற்றி, தங்களுக்குள் கிரயப் பத்திரம் தயாரித்துக் கொண்ட து இவர்கள்தான். சஸ்பெண்ட் செய்யப்பட்ட பொறுப்பு சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனுடன் சேர்ந்து, இந்த முருகதாஸ், வெள்ளத்துரை, சேதுபதி ஆகிய மூவர் மீதும் தான் மோசடி, போலி ஆவணம் தயாரித்தல், கிரிமினல் சதி உள்ளிட்ட 5 கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு பாய்ந்துள்ளது.மாரிதாஸ் கேள்வி
யார் மீது ஆக்சன்?