டெல்லி டூ சென்னை வந்த விமானத்தில் தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு.. அவசர அவசரமாக தரையிறக்கம்

  • சென்னை: டெல்லியில் இருந்து சென்னை வந்துகொண்டிருந்த இண்டிகோ பயணிகள் விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 200-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் நடுவானில் வந்தபோது விமானத்தில் தீப்பிடித்ததால் அவசர அவசரமாக அந்த விமானம் ஹைதராபாத் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

    Advertisement

    நடு வானில் பறந்துகொண்டிருந்த போது விமானத்தில் கரும்புகை ஏற்பட்டு தீப்பிடித்ததால் உள்ளே இருந்த பயணிகள் பலரும் அச்சத்தில் அலறினர். இதையடுத்து விமானி துரிதமாக செயல்பட்டு ஐதராபாத் சர்வதேச விமான நிலையத்தில் விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார்.

    Advertisement

    இதன் பிறகு விமானத்தில் இருந்த பயணிகளும் அவசர அவசரமாக பத்திரமாக தரையிறங்கினர். இதன் பிறகே பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். விமானத்தில் இருக்கைக்கு மேல்பகுதியில் தீப்பிடித்து கரும்புகை வெளியேறுவது போன்றும், பயணிகள் அலறித் துடிப்பது போன்ற வீடியோக்களும் சமூக வலைத்தளத்தில் பரவி வருகின்றன.

    டெல்லியில் இருந்து சென்னைக்கு இண்டிகோ விமானம் ஒன்று 200-க்கு மேற்பட்ட பயணிகளுடன் இன்று பிற்பகல் புறப்பட்டுள்ளது. நடுவானில் விமான பறந்துகொண்டிருந்த போது தான் சிறிய அளவிலான தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது. உடனடியாக விமானத்தில் பயணித்த ஊழியர்கள் தீயை அணைத்தனர். எனினும் பாதுகாப்பு காரணமாக உடனடியாக விமானமானது ஐதராபாத் விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

    English Summary

    A fire broke out on a flight traveling from Delhi to Chennai. The aircraft, carrying 200 passengers, made an emergency landing in Hyderabad after catching fire mid-air. Videos related to the incident are circulating on social media.