அலறும் போன்கள்.. அச்சத்தில் தவெக! ஒவ்வொரு எம்எல்ஏவுக்கும் தலைமை போட்ட அதிரடி கால்! விஜய் பதற்றம்?

  • சென்னை: தமிழ்நாடு அரசியலில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த அமைதி மறைந்து, இப்போது மிகப்பெரிய பரபரப்பும் பதற்றமும் தொற்றிக்கொண்டுள்ளது.

    Advertisement

    நடிகர் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆட்சி அமைந்து வரும் நவம்பர் 13-ஆம் தேதியோடு 6 மாதங்கள் நிறைவடைகிறது. சட்டசபை விதிகளின்படி இந்த 6 மாதக் கெடு முடிந்த உடனேயே எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர முடியும் என்பதால், "எப்படியாவது விஜய் அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்" என்று எதிர்க்கட்சிகள் வலைவீசி வருவதாகத் தகவல்கள் வெளியாகின.

    Advertisement

    இதன் எதிரொலியாக, தற்போது தவெக கூடாரமே கடும் அதிர்ச்சியிலும் கலக்கத்திலும் ஆழ்ந்துள்ளது. அரசை எப்பாடு பட்டாவது காப்பாற்ற வேண்டும் என்பதற்காக, தவெகவின் மிக முக்கிய தலைவர்கள் களத்தில் இறங்கி, தங்கள் கட்சியின் ஒவ்வொரு எம்.எல்.ஏ-வுக்கும் தனித்தனியாக போன் போட்டு விசாரிக்கும் தீவிர வேட்டையைத் தொடங்கியுள்ளனர்.

    நடுங்கும் தலைமை... நள்ளிரவு வரை ஓயாத தொலைபேசி அழைப்புகள்!

    கடந்த இரண்டு நாட்களாகவே தவெக எம்.எல்.ஏ-க்களின் செல்போன்கள் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திலிருந்தும், முதலமைச்சர் விஜய்க்கு மிகவும் நெருக்கமான உயர்மட்டக் குழுவினரிடமிருந்தும் இந்த அழைப்புகள் செல்கின்றன.

    Advertisement

    ஒவ்வொரு எம்.எல்.ஏ-விடமும் தலைவர்கள் மிக நேரடியாகவும், சற்று அழுத்தமாகவும் சில முக்கிய கேள்விகளை முன்வைத்து வருகின்றனர்:

    நீங்கள் நம்ம கூடத்தான் உறுதியாக இருக்கிறீர்களா?

    திர்க்கட்சிகள் தரப்பிலிருந்து யாராவது உங்களை நேரில் சந்தித்தாரா அல்லது போனில் பேசினாரா?

    பணம், அமைச்சர் பதவி அல்லது வேறு ஏதேனும் பெரிய ஆசை வார்த்தைகள் காட்டப்பட்டதா?

    உங்கள் தொகுதியில் ஏதேனும் சலசலப்பு இருக்கிறதா? உங்களுக்கு ஏதேனும் மனவருத்தம் உண்டா?

    இப்படி அடுக்கடுக்காகக் கேள்விகளைக் கேட்டு, எம்.எல்.ஏ-க்களின் குரல் தொனியை வைத்தே அவர்களின் மனநிலை என்ன என்பதைத் தலைமை துல்லியமாகக் கணிக்க முயல்கிறது.

    முதலமைச்சர் விஜய் மற்றும் தலைவர்களின் அச்சத்திற்கு என்ன காரணம்?

    முதலமைச்சர் விஜய்யும், கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் இவ்வளவு தூரம் அஞ்சுவதற்குக் காரணம் சட்டசபையில் உள்ள பலம்தான்:

    Advertisement

    தமிழ்நாடு சட்டசபையில் ஆட்சியைத் தக்கவைக்க 118 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு தேவை. ஆனால் தவெகவிடம் தனித்து இருப்பது 109 எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே. ஆட்சியை அமைக்கக் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட தோழமைக் கட்சிகள் வெளியிலிருந்து ஆதரவு தந்துள்ளன.

    தற்போது எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்துக்கொண்டு, தவெகவுக்குள் இருக்கும் சிலரைத் தங்கள் பக்கம் இழுத்துவிட்டால் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்ற அபாயம் உள்ளது. குதிரை பேரம் மூலம் எம்.எல்.ஏ-க்கள் விலைபேசப்பட்டு விடுவார்களோ என்ற அச்சம்தான் தவெக தலைமையை இந்த அளவுக்குப் பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

    சென்னைக்கு வாங்க... ரெடியா இருங்க: எம்.எல்.ஏ-க்களுக்கு பறந்த உத்தரவு

    போன் போட்டு நலம் விசாரிப்பதுடன் தலைமை நின்றுவிடவில்லை. தவெக எம்.எல்.ஏ-க்கள் அனைவருக்கும் மிக முக்கியமான சில வாய்மொழி உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன:

    Advertisement

    வெளிநாடுகளுக்கோ அல்லது தூரத்து ஊர்களுக்கோ யாரும் இப்போது பயணம் செய்யக்கூடாது. தலைமை எப்போது அழைத்தாலும் அடுத்த சில மணி நேரங்களில் சென்னை தலைமை அலுவலகத்திற்கு வரத் தயாராக இருக்க வேண்டும்.

    முன்பின் தெரியாத நபர்களிடமிருந்து வரும் அழைப்புகளை எடுக்க வேண்டாம்; சந்தேகம் ஏற்பட்டால் உடனடியாக அந்த எண்களைத் தலைமைக்கு அனுப்பிவிட வேண்டும்.

    குறிப்பாக எதிர்க்கட்சிப் பிரமுகர்களையோ அல்லது இடைத்தரகர்களையோ தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசுவது முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

    கண்காணிப்பு வளையத்தில் உள்ள "ஸ்பெஷல் லிஸ்ட்"

    தவெகவில் உள்ள அனைத்து எம்.எல்.ஏ-க்களையும் விட, மூன்று வகையான எம்.எல்.ஏ-க்களைத் தலைமை 24 மணி நேரமும் ரகசிய உளவுத்துறை மூலமாகவும், கட்சிப் பொறுப்பாளர்கள் மூலமாகவும் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.

    Advertisement

    திமுக, அதிமுக போன்ற கட்சிகளில் இருந்து விலகி வந்து தவெக சீட்டில் வெற்றி பெற்றவர்கள் எந்த நேரத்திலும் பழைய பாசத்தில் திரும்பிவிடலாம் என்ற சந்தேகம். கட்சியில் சீனியராக இருந்தும் தங்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என்று பொதுவெளியில் பேசாமல் உள்ளுக்குள் புகைந்து கொண்டிருக்கும் நபர்கள்.

    ஆட்சிக்கு வந்த பிறகு பொருளாதார ரீதியாகப் பெரிய வளர்ச்சி எதுவும் கிடைக்கவில்லை என்று அதிருப்தியில் முணுமுணுத்து வருபவர்கள். இந்த குறிப்பிட்ட எம்.எல்.ஏ-க்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறை போன் செய்து நிலைமை கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    எதிர்க்கட்சிகள் அமைதி... ஆனால் தவெகவுக்குள் புயல்!

    வெளியில் பார்க்கும்போது திமுகவும் அதிமுகவும் அமைதியாக இருப்பது போலத் தோன்றினாலும், உள்ளுக்குள் காய்நகர்த்தல்கள் வேகமாக நடக்கின்றனவா என்ற அச்சம்தான் ஆளுங்கட்சியைத் தூங்கவிடாமல் செய்துள்ளது.

    "எங்கள் எம்.எல்.ஏ-க்கள் யாரும் விலைபோக மாட்டார்கள்; மக்கள் கொடுத்த தீர்ப்பை யாரும் குலைக்க முடியாது" என்று தவெக தலைவர்கள் வெளிப்படையாகப் பேட்டி அளித்தாலும், உள்ளுக்குள் நடக்கும் இந்தத் தொடர் போன் அழைப்புகளும் அவசர ஆலோசனைகளும் தவெக தரப்பில் இருக்கும் உண்மையான நடுக்கத்தையே காட்டுகிறது.

    நவம்பர் 13-ஆம் தேதிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஆளுங்கட்சியின் இந்த ரோல் கால் நடவடிக்கை தமிழக அரசியலில் அடுத்த சில நாட்களில் ஏதோ ஒரு பெரிய பூகம்பம் வெடிக்கப்போகிறது என்பதற்கான சமிக்ஞையாகவே பார்க்கப்படுகிறது.

    English Summary

    Panic in TVK: CM Vijay & Top Leaders Dial Every MLA Amid Toppling Fears Ahead of Nov 13