Parandur: பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து! 50% சரிந்த நிலங்களின் விலை! பிளாட் ஓனர்கள் கலக்கம்

  • சென்னை: பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து செய்யப்பட்டதால் அந்த இடத்தில் நிலத்தின் விலை 50 சதவீதம் வரை சரிந்துள்ளதால் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் கவலை அடைந்துள்ளன. புதிதாக நிலம் வாங்க எண்ணிய மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    சென்னையின் 2ஆவது விமான நிலையம், காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்கப்படும் என்று கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்புக்கு முன்பு சாதாரண விவசாய பகுதியாக இருந்த பரந்தூர், சுற்றுவட்டார நிலங்களை வாங்க பலர் முயற்சித்தனர். இதனால் ஒரு ஏக்கர் நிலம் ரூ 6 லட்சம் முதல் 12 லட்சம் வரை இருந்த விவசாய நிலங்களின் விலை ரூ 18 லட்சம் முதல் 35 லட்சம் வரை, அதாவது சுமார் 3 மடங்கு உயர்ந்துள்ளது.

    Advertisement

    மேலும் சில மெயின் பகுதிகளில் நிலங்களின் மதிப்பு 100 சதவீதம் முதல் 200 சதவீதம் வரை உயர்ந்தது. இதனால் இங்கு நிலம் வாங்கி போடுவது பண முட்டையிடும் வாத்து போல் பலர் கருதினர்.

    அதிலும் விமான நிலையத்திற்கு அருகில் உள்ள பகுதிகளில் நிலம் வாங்க பெரும்பாலானோர் ஆர்வம் காட்டி வந்தனர். இதனால் சாதாரண பகுதிகளிலும் தேசிய நெடுஞ்சாலையையொட்டியுள்ள பகுதிகளிலும் ஒரு சதுர அடி விலை உயர்ந்தே இருந்தது.

    எப்படி கிளாம்பாக்கம், குத்தம்பாக்கம் அருகே உள்ள நிலங்களை வாங்க மக்கள் போட்டி போட்டனரோ அதே போல் பரந்தூரை சுற்றியுள்ள நிலங்களையும் வாங்கி குவிக்க மக்கள் ஆர்வம் காட்டினர்.

    Advertisement

    இந்த நிலையில் கடந்த மே மாதம் விஜய் ஆட்சி அமைந்தது. அவர் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே விவசாயத்தை அழித்து கட்டப்படவுள்ள பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். போராட்டக் களத்தில் இருந்த பரந்தூர் மக்களையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்திருந்தார். இதனால் அவர் ஆட்சி அமைந்ததும் பரந்தூர் விமான நிலையம் அமைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்ததால் நிலங்களின் விலை உயர்வும் அதை வாங்க மக்கள் போட்ட போட்டியும் அப்படியே நின்று போனது.

    இந்த நிலையில் பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் பணிகளை கைவிடுவதாக விஜய் சட்டசபையில் அறிவித்தார். இதனால் பரந்தூர் மக்களும் விவசாயிகளும் நிம்மதி அடைந்தனர். இந்த அறிவிப்பை வரவேற்று பரந்தூர் விவசாயிகள் விஜய்யை சந்தித்து நன்றி தெரிவித்திருந்தனர்.

    Advertisement

    அது போல் பரந்தூர் அருகே நிலம் வாங்கியவர்கள் கவலைில் உள்ளனர். மேலும் இந்த இடங்களில் பிளாட் போட்டு விற்க இடம் வாங்கிய நிறுவனங்கள் என்ன செய்வது என தெரியாமல் விழிபிதுங்கி நின்றனர்.

    இதனால் வாங்கிய விலைக்கே இடங்களை விற்க பல கட்டுமான நிறுவனங்கள் முடிவு செய்திருந்தாலும் அதை வாங்க யாரும் முன்வரவில்லை. பரந்தூரில் ஒரு சதுர அடி ரூ 1400 முதல் 1600 வரை விற்பனை செய்யப்பட்ட நிலங்களின் விலை தற்போது ரூ 600 முதல் 800 ரூபாயாக குறைந்துள்ளது. அது போல் நெடுஞ்சாலையையொட்டிய பிளாட்டுகளும் ரூ 2999-லிருந்து ரூ 1800 ஆக குறைந்துவிட்டது. கிட்டத்தட்ட பரந்தூரை சுற்றியுள்ள நிலங்களின் விலை 40 முதல் 50 சதவீதமாக சரிந்துள்ளது. இதனால் இங்கு முதலீடு செய்தோரும் அதிக விலைக்கு பிளாட் வாங்கியோரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.

    English Summary

    Parandur Airport project was cancelled by TVK government leads land prices in that area fall upto 50 percent. Sharp decline gives worries for Real Estate companies.