சென்னை: பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்ட நிலையில், கையகப்படுத்தப்பட்ட நிலங்களை மக்கள் பாதிக்காத வகையில் மாற்றுத் தொழில் திட்டங்களுக்கு பயன்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க உள்ளதாக தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார்.
சட்டப் பேரவையில் அமைச்சர் கீர்த்தனா இதுகுறித்து கூறியதாவது: பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் மாற்றுத் தொழில் திட்டங்கள் மக்களை பாதிக்காதவாறு செயல்படுத்தப்படும். இதன் மூலம் தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி இந்தப் பகுதியில் ஏற்படுத்தப்படும். பரந்தூர் திட்டத்தை கைவிடுவதற்கான முக்கியக் காரணம் உள்ளது. அப்பகுதியில், பல காலமாக அரிசி விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.
3 பருவகால சாம்பா, தாளடி, சொர்ணாவாரி என மூன்று வகை பயிரிடப்பட்டு வருகிறது. சுழற்சி முறையில் நிலக்கடலை மற்றும் கரும்பு பயிரிடப்படுகிறது. வறண்ட காலத்தில் சிறுதானியங்கள் பயிரிடப்படுகின்றன. 1000 மெட்ரிக் டன் அரிசி ஆண்டுதோறும் தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷனுக்கு அங்குள்ள விவசாயிகள் வழங்கி வருகின்றனர். இதுமட்டுமல்லாமல் பிடிஎஸ் விநியோகத்துக்கும் அரிசி வழங்கப்படுகிறது. பரந்தூரில் மழை பெய்யாமல் இருந்தாலும் கூட அங்கு விவசாயம் நடைபெறக்கூடிய விளை நிலமாகும். அந்த இடத்தை ஏர்ப்போர்ட்டாக மாற்ற வேண்டும் என்று நாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம். இதைத் தவிர குணகரம்பாக்கம், கம்பன் கால்வாய் உள்ளன. இந்த கால்வாய்கள் அடையாறு ஆறுக்கும், செம்பரம்பாக்கம் ஏரிக்கும் சென்று கொண்டிருக்கிறது. இந்த கால்வாய்களை அழித்தால் சென்னை நகரத்துக்குள்ளேயே வெள்ளம் வருவதற்கான வாய்ப்புள்ளது. விமான நிலையம் வேண்டாம் என்று நாங்கள் சொல்லவில்லை. சரிவான இருக்கும் விளைநிலத்தில் எவ்வளவு தூரம் மண்ணை போட்டு ஏர்ப்போட்டை உருவாக்க முடியும். கொச்சியிலும் இதுபோன்ற விளைநிலத்தில் அமைக்கப்பட்டதால் தான் வெள்ளம் ஏற்பட்டபோது 14 நாட்கள் பூட்டி வைக்கப்பட்டது. ராகுல் என்கிற இளைஞர் பேட்டி ஒன்றைக் கொடுத்திருந்தார். அதில், எங்களுக்குப் பரந்தூர் விமான நிலையம் வேண்டாம். நாங்கள் என்ன அந்த விமானத்தில் பறக்கவா போறோம் என்று கூறி எங்களை காப்பாற்றுங்கள் என்று ஒருவார்த்தை கூறியிருந்தார். அந்த ஒரு வார்த்தைக்காக இன்று வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பை மக்கள் கொண்டாடுகின்றனர். பரந்தூரில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், விஜய் சாலை என்று நாங்கள் ஒரு சாலைக்கு வைக்கப் போகிறோம் என்று அப்பகுதி மக்கள் அறிவித்துள்ளனர். பரந்தூர் விமான நிலையம் அமைக்கப்பட்டால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். 1500 நீர்நிலைகள் பாதிக்கப்படும். ஆயிரம் குடும்பங்கள் இடம்பெயர வேண்டியதிருக்கும். இவற்றை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் நாம் எப்படி விமான நிலையத்தை அங்கு கொண்டு வர முடியும். சென்னை ஏர்ப்போர்ட் மீனம்பாக்கம் பணியை ஏன் நீங்கள் 5 வருடம் கிடப்பில் போட்டிருந்திருந்தீர்கள் என்று கேள்வி எழுப்பிய அமைச்சர், மத்திய அரசு அனுமதி வழங்கியும் ஏன் 5 வருடம் கிடப்பில் போட்டு வைத்திருந்தீர்கள். பரந்தூர் விமான நிலையம் வர இன்னும் ஐந்தாண்டுகள் ஆகும் என்று உங்களுக்கே தெரியும். மீனம்பாக்கம் விமான நிலையத்தை அன்றே விரிவுடுத்தியிருக்கலாம். என்ன நோக்கத்திற்காக அந்தப் பணியை நிறுத்தி வைத்திருந்தீர்கள் என்று உங்கள் மனசாட்சியை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். இத்திட்டம் கைவிடப்படுவதால் தொழிலே பாதிக்கப்படும் என்று தற்போது கூறுகின்றனர். அப்படியென்றால், 49 சதவீதம் எலக்ட்ரானிக் ஏற்றுமதி பரந்தூர் விமான நிலையத்தை நம்பிதான் போய்க் கொண்டிருக்கிறதா. போர்ட், ஏர் கார்கோ, சென்னை விமான நிலையம் மூலமாகத் தான் அனுப்பப்பட்டு வருகிறது. இரண்டாவது ஏர்ப்போர்ட் வேண்டும் என்றுதான் நாங்களும் கூறுகிறோம். விமான நிலைய விரிவகாக்கமும் கூட விமான நிலையத்துக்குள்ளேயே தான் வரப்போகிறது. எதையும் இடித்துவிட்டு விரிவாக்கம் செய்யப்படாது. இந்திய விமான நிலைய ஆணையம் டி5 முனையத்தின் பயணிகள் முனையம் ஏற்கனவே உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதேபோல, டி5 முனையத்தின் புறவழி சாலை, தாம்பரம் - மதுரவாயல் சாலை அமைக்க மாநில அரசின் அனுமதியையும், ஒத்துழைப்பையும் கோரியுள்ளது. அடுத்த 10 வருடத்திற்கு இதன் பயன் இருக்கும். இரண்டாவது விமான நிலையத்திற்கான நிலங்கள் மக்கள் பாதிக்கப்படாத வகையில், விவசாய நிலங்கள் பாதிக்கப்படாத வகையில் கையகப்படுத்தப்படும் என்றார்.பரந்தூர் திட்டம்
மக்கள் கொண்டாடும் அறிவிப்பு
எதிர்க்கட்சியினருக்கு கேள்வி
நிலம் கையகப்படுத்தப்படும்