சென்னை: பரந்தூர் விமான நிலையத்திற்கு மாற்று இடம் பரிசீலனையில் இருப்பதாகவும், பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார் என்றும் அமைச்சர் நிர்மல் குமார் கூறினார். மேலும், தொழில்நுட்பத்தை விட சுற்றுச்சூழல் பாதுகாப்பே அவசியம் என்றும், பரந்தூரில் ரன்வே ஏற்படுத்த முடியாது என்று அதிகாரிகள் கூறியுள்ளதாகவும் கூறினார்.
அமைச்சர் நிர்மல் குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். அதிகாரிகள் சிலரிடம் பேசிய போது பரந்தூரில் ரன்வே ஏற்படுத்த முடியாது என்று கூறினார். சுமார் 800 முதல் 900 ஏக்கர் பரப்பளவில் நீர் நிலைகள் அதிக அளவில் இருப்பதே இதற்கு காரணம் எனவும் தெரிவித்தனர். எனவே தான் பரந்தூர் விமான நிலையத்திற்கு மாற்று இடம் பரிசீலனையில் இருக்கிறது. தொழில்நுட்பத்தை விட சுற்றுச்சூழல் பாதுகாப்பே அவசியம்" என்று கூறினார்.