சென்னை: பரந்தூர் மற்றும் விளையாட்டு நகரம் திட்டங்கள் குறித்து மூத்த தலைவர் டிஆர்பி ராஜா வேதனை தெரிவித்துள்ளார். "எந்தவொரு ஆட்சியாளரும் பெரிதாகக் கனவு காண்பதிலும், திட்டங்களை மேம்படுத்துவதிலும் தவறில்லை.. ஆனால், இதற்காக தமிழ்நாடு மீண்டும் மீண்டும் முதல் பக்கத்திற்கே சென்று கொண்டிருக்க முடியாது. அதனால் தயவுசெய்து அரசியல் லாபத்திற்காக தமிழகத்தின் வளர்ச்சியைப் பலிகடாவாக்காதீர்கள்” என்றும் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
2 நாட்களுக்கு முன்பு, திமுக முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா செய்தியாளர்களிடம் பேசும்போது, இதுகுறித்த அதிருப்தியை வெளியிட்டிருந்தார்.. இந்த திட்டத்தை ரத்து செய்வதால் ஏற்படும் பாதிப்புகளையும் விலாவரியாக விளக்கியிருந்தார்.
"பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிட்டது ஒட்டுமொத்த தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் உட்கட்டமைப்பு வசதிகளுக்கும் ஏற்படுத்தப்பட்ட மிகப்பெரிய அடி.. டிஆர்பி ராஜா வேதனை சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தின் தற்போதைய கொள்ளளவு எதிர்கால வளர்ச்சிக்கு போதாது என்பதால், 2045 மற்றும் 2050-ம் ஆண்டுகளைக் கருத்தில் கொண்டு பொருளாதார மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களின் ஆலோசனையின்படி முழுமையாக தமிழக அரசின் கட்டுப்பாட்டில் வரவிருந்த இத்திட்டம் கைவிடப்பட்டுள்ளது வரலாற்றில் ஒரு கருப்பு நாளாகும் இந்த திட்டத்துக்காக ஏற்கனவே 90 சதவீத நிலம் கையகப்படுத்தப்பட்டு, பாதிக்கப்படும் பொதுமக்களுடன் பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு நஷ்டஈடு மற்றும் மாதிரி வீடுகள் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருந்தது. ஆனால், தற்போதைய முதல்வர் அரசியல் லாபத்திற்காக இந்த தொலைநோக்குத் திட்டத்தை கைவிட்டுள்ளார்.. பரந்தூர விமான நிலைய திட்டம் கோடிக்கணக்கான இளைஞர்கள், பெண்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கக்கூடிய திட்டத்தில் அரசியல் செய்யாதீர்கள்... முதல்வர் விஜய்யின் ஈகோவால் இந்த திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்காக நாங்களெல்லாம் ஒவ்வொன்றாக பார்த்து இந்த திட்டத்தில் வேலை செய்துள்ளோம். எனக்கு அந்த வலி நன்றாகவே தெரியும். எவ்வளவு தூரம், எவ்வளவு அனுமதி, அதுவும் ஒன்றிய அரசிடம் இருந்து இந்தத் திட்டத்துக்கான அனுமதி வாங்குவதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டோம் என்று எங்களுக்கெல்லாம் நன்றாக தெரியும்.. இந்த திட்டத்தை கைவிடுவதால், தமிழக இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கான லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் பறிபோகும் அபாயம் உள்ளது.. எனவே அரசு உடனடியாக தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என்றெல்லாம் வேதனையும், அதிருப்தியும் வெளிப்படுத்தியிருந்தார். ஒரே வாரத்தில் 2 திட்டங்கள் ரத்து இந்நிலையில் டிஆர்பி ராஜா மீண்டும் இதுகுறித்து கருத்து கூறியிருக்கிறார்.. இதுகுறித்து பிரத்யேகமாக ட்வீட் ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.. அதில், பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து செய்யப்பட்டது மற்றும் உலகளாவிய விளையாட்டு நகர ஒப்பந்தம் கைவிடப்பட்டது போன்ற இந்த வாரத்தின் இரண்டு முக்கிய நிகழ்வுகள் தமிழகத்தின் உள்கட்டமைப்பு எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளதாக முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஆதங்கம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் சொல்லும்போது, “ஏற்கனவே பல அனுமதிகள் பெறப்பட்டு, நிலம் கையகப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வந்த பரந்தூர் விமான நிலையம் இப்போது கைவிடப்பட்டு, மறுபடியும் வேறு இடம் தேடும் அவலம் ஏற்பட்டுள்ளது. உலகளாவிய விளையாட்டு நகர திட்டம் அதேபோல், அடிக்கல் நாட்டி, ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டு கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கவிருந்த உலகளாவிய விளையாட்டு நகர திட்டமும் Global Sports City) இப்போது அதிரடியாக ரத்து செய்யப்பட்டு மீண்டும் முதலிலிருந்து டிசைன் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அரசுகளுக்குத் திட்டங்களை மறுபரிசீலனை செய்ய முழு உரிமை உண்டு என்றாலும், பாதியிலேயே கைவிட்டுவிட்டு மீண்டும் முதலிலிருந்து தொடங்குவது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது.. ஒவ்வொரு முறையும் இதுபோன்று திட்டங்களை மாற்றி அமைப்பதால் தேவையில்லாமல் கால விரயமும், ஒப்பந்தச் சிக்கல்களும், பலகோடி ரூபாய் செலவின அதிகரிப்பும் ஏற்பட்டு உள்கட்டமைப்பு வளர்ச்சியே பாதிக்கப்படும். மீண்டும் முதல் பக்கத்தில் தமிழகம் தேவையை முன்கூட்டியே கணித்து, துரிதமாக செயல்பட்டதால்தான் தமிழ்நாடு இன்று இந்தியாவின் உற்பத்தித் தலைநகரமாக உருவெடுத்துள்ளது. எந்தவொரு ஆட்சியாளரும் பெரிதாகக் கனவு காண்பதிலும், திட்டங்களை மேம்படுத்துவதிலும் தவறில்லை.. ஆனால், இதற்காக தமிழ்நாடு மீண்டும் மீண்டும் முதல் பக்கத்திற்கே சென்று கொண்டிருக்க முடியாது. அதனால் தயவுசெய்து அரசியல் லாபத்திற்காக தமிழகத்தின் வளர்ச்சியைப் பலிகடாவாக்காதீர்கள்” என்று சற்று கடுமையாக எச்சரித்துள்ளார்.