பரந்தூர், ஓசூர் விமான நிலையத் திட்டங்களில் திடீர் திருப்பம்! - தமிழ்நாடு அரசின் அதிரடி முடிவு பின்னணி என்ன?

  • சென்னை: தமிழகத்தில் புதிய தொழில் பூங்காக்கள் மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களை அமைப்பதற்காக அதிக அளவில் நிலங்களை கையகப்படுத்தும் விவகாரத்தில் தொழில்துறை அதிகாரிகள் அவசரப்படாமல் செயல்பட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்திருக்கிறது.. பெரிய அளவிலான நிலப்பரப்பு தேவைப்படும் புதிய திட்டங்களை உடனடியாக செயல்படுத்துவதில் அவசரம் காட்ட வேண்டாம் என்றும், இப்போதுள்ள சூழலில் நிதானத்தை கையாள வேண்டும் என்றும் அரசு தரப்பில் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. என்ன காரணம்?

    Advertisement

    முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை உயர்த்தும் நோக்கில் பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

    Advertisement

    பரந்தூர் விமான நிலைய திட்டம்

    குறிப்பாக, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிய பசுமை வழியில் அமைந்த விமான நிலையத் திட்டம், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் புதிய விமான நிலையம் மற்றும் அறிவுசார் வழித்தடம், செங்கல்பட்டு மாவட்டத்தில் பிரம்மாண்ட சர்வதேச நகரம் போன்ற பல லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள் இதில் அடங்கும்.

    இந்த திட்டங்களில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்கு மொத்தம் 5,300 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. இதில் தனியாருக்கு சொந்தமான 3,000 ஏக்கர் நிலத்தில், இதுவரை சுமார் 1500 ஏக்கர் நிலம் அதிகாரிகளால் கையகப்படுத்தப்பட்டுவிட்டது.

    Advertisement

    ஓசூர் -சிப்காட்

    இருந்தாலும் பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்காகவும், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சிப்காட் அமைப்பின் சார்பில் புதிய தொழில் பூங்காக்கள் அமைப்பதற்காகவும் நிலங்களை கையகப்படுத்த தொடங்கியபோது, உள்ளூர் விவசாயிகள், பொதுமக்கள் தங்களது எதிர்ப்பை சொன்னார்கள்.. நிலங்களை இழக்கக் கூடாது என்று வலியுறுத்தி தொடர் போராட்டங்களிலும் அவர்கள் ஈடுபட்டனர்.

    இப்போது மாநிலத்தில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தையடுத்து, பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளன. அதுபோலவே, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் 2000 ஏக்கர் பரப்பளவில் திட்டமிடப்பட்ட சர்வதேச நகரம் மற்றும் ஓசூர் அறிவுசார் வழித்தட திட்டங்களுக்கு இதுவரை நிலங்கள் கையகப்படுத்தப்படாமல் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளன.

    Advertisement

    தமிழக அரசு அதிரடி உத்தரவு

    இந்த திட்டங்களின் எதிர்காலம் மற்றும் இப்போதுள்ள நிலைப்பாடு குறித்து அரசு உயரதிகாரிகள் மற்றும் தொழில்துறை உயர் அலுவலர்களுடன் அரசு தரப்பில் விரிவான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

    இந்த ஆலோசனையின்போது, மக்களிடம் ஏற்படும் சமூக எதிர்ப்புகள் மற்றும் சட்டரீதியான நில சிக்கல்களை கவனத்தில் கொண்டு, புதிய தொழில் பூங்காக்கள் மற்றும் அதிக நிலம் தேவைப்படும் மெகா திட்டங்களை செயல்படுத்துவதில் அதிகாரிகள் அவசரப்பட்டு முடிவெடுக்கக் கூடாது என்றும், சூழ்நிலையைக் கணித்து நிதானமாக அடுத்தகட்ட நடவடிக்கைகளை தொடரலாம் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.

    English Summary

    Parandur, Hosur Mega Projects to Slow Down? Tamil Nadu Govt Says No Hurry in Land Acquisition