பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகமா?.. தவெகவுக்கு எதிராக களமிறங்கும் மீனவர்கள்..செப்.29ல் ஆர்ப்பாட்டம்

  • சென்னை: சென்னை பட்டினப்பாக்கத்தில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலகம் அடங்கிய புதிய வளாகம் அமைக்க அரசு அரசாணை வெளியிட்ட நிலையில், திட்டம் அறிவிக்கப்பட்டது முதலே பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. இந்நிலையில், பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்யக்கோரி 29ஆம் தேதி மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    தவெக ஆட்சியமைத்து 5 மாதங்கள் ஆகப்போகிறது. தேர்தல் நேரத்தில் பல்வேறு வாக்குறுதிகளை தவெக அளித்தது. அவை ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. 200 யூனிட் இலவச மின்சாரம் திட்டம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. வருகிற 28 ஆம் தேதி தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டம் அரசின் முக்கிய அறிவிப்புகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

    Advertisement

    சென்னையில் ரூ. 1,200 கோடி மதிப்பீட்டில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என்று முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்த்திருந்தார். பல்வேறு இடங்களில் ஆய்வு செய்யப்பட்ட நிலையில், பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டப்படும் என அரசாணையும் வெளியிடப்பட்டிருந்தது. பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்க 9 மீனவ கிராமங்களைச் சோ்ந்த மக்கள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.

    தலைமைச் செயலகம் அமைக்க எதிர்ப்பு

    இப்பகுதியில் தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டால், அங்கு பல தலைமுறைகளாக வசித்து வரும் மீனவ மக்களின் பூா்விக குடியிருப்பு உரிமை மற்றும் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் என கூறப்பட்டது. இதனால், கடலில் மீன்பிடிப்பது, படகுகளை நிறுத்துவது, வலை பின்னுதல், மீன்களை உலா்த்துதல், விற்பனை செய்தல் உள்ளிட்ட தொழில்கள் பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

    Advertisement

    இதுமட்டுமல்லாமல் பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டால் அப்பகுதியில் மிகப்பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்றும் பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஏற்கனவே, அப்பகுதியில் சாந்தோம் தேவாலயம், பள்ளிகள், அரசு அலுவலகம் உள்ளிட்டவை இருப்பதால் இப்பகுதியில் ஏராளமான மக்கள் கூடுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், புதிய தலைமைச் செயலகமும் அமைக்கப்பட்டால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்றும் கூறி பலரும் எதிப்புத் தெரிவித்து வருகின்றனர்.

    செப்.29 ஆம் தேதி ஆர்ப்பாட்டம்

    இந்நிலையில், சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் அரசாணையை ரத்து செய்யக் கோரி செப்டம்பர் 29 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக முள்ளிக்குப்பம், முள்ளிமா நகர், மயிலை பகுதி அனைத்து மீனவ கிராம பஞ்சாயத்து சபை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    Advertisement

    புதிய தலைமை செயலகம் அமையவுள்ள பட்டினப்பாக்கம் பகுதியை மீனவர்களின் பாரம்பரிய குடியிருப்பு பகுதியாக அறிவிக்க வேண்டும் என்றும், அரசு தனது நிலைப்பாட்டை தெரிவிக்காததால் தொடர் போராட்டங்களை முன்னெடுக்க மீனவ மக்கள் முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English Summary

    Fishermen in Chennai's Pattinapakkam are set to protest on September 29, demanding the cancellation of the Tamil Nadu government's order to construct a new ₹1,200-crore Secretariat and Assembly complex in the area.