கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் அமைச்சர் தமிழன் பார்த்திபனை கேள்விகளால் துளைத்த மக்கள்

  • சென்னை: கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் தமிழன் பார்த்திபன் ஆய்வு நடத்தினார். அப்போது போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை எனக்கூறி பயணிகள் வாக்குவாதம் செய்தனர். துரை, திருச்சி, தூத்துக்குடி, காரைக்குடி, கும்பகோணம், துறையூர், பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் வரவில்லை எனவும், முன்பதிவு செய்யப்பட்ட பேருந்துகள் குறித்த நேரத்திற்கு வராததால் நீண்ட நேரமாக காத்திருப்பதாக அமைச்சரிடம் குற்றச்சாட்டை முன் வைத்தனர்.

    Advertisement

    ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்பது கிளாம்பாக்கம் பேருந்துநிலையத்தை பொறுத்தவரை உண்மையாக இருக்கிறது. சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்திலிருந்து பண்டிகை மற்றும் முகூர்த்த தினம் வார இறுதி நாள் விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் நேற்று பக்ரீத் பண்டிகைக்காக சொந்த ஊர் செல்ல விரும்பிய மக்களுக்காக பல பேருந்துகள் இயக்கப்பட்டன. இதையொட்டி தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் தமிழன் பார்த்திபன் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    Advertisement

    அப்போது பேருந்துகளின் இயக்கம் குறித்தும், பயணிகளுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து நடைமேடையில் பேருந்திற்காக காத்திருந்த பயணிகளிடம் சென்ற போக்குவரத்து துறை அமைச்சருடன் போதிய பேருந்துகள் இல்லை என பயணிகள் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    மதுரை, திருச்சி, தூத்துக்குடி, காரைக்குடி, கும்பகோணம், துறையூர், பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் வரவில்லை எனவும், முன்பதிவு செய்யப்பட்ட பேருந்துகள் குறித்த நேரத்திற்கு வராததால் நீண்ட நேரமாக காத்திருப்பதாக அமைச்சரிடம் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

    இதையடுத்து போக்குவரத்து துறை அமைச்சர் தமிழன் பார்த்திபன் நடைமேடையில் காத்திருந்த பயணிகளை எங்கு செல்கிறீர்கள் எனக் கேட்டு முன்பதிவு செய்யப்பட்ட பேருந்துகளில் முன்பதிவு செய்யாத பயணிகளை ஏற்றி அனுப்பி வைத்ததால் முன்பதிவு செய்த பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

    Advertisement

    இது ஒருபுறம் எனில், பயணி ஒருவர், கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து தென் மாவட்டத்திற்கு ஆம்னி பேருந்து இயக்கப்படுகிறது.. ஏன் அரசு பேருந்து இயக்கப்படவில்லை என்று கேள்வி எழுப்பினார். கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வருவதற்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்தும் பேருந்து கிடைக்கவில்லை அதேபோல் இங்கிருந்தும் தென் மாவட்டத்திற்கு செல்ல பேருந்து கிடைக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.இப்படி பல்வேறு பயணிகள் அமைச்சர் தமிழன் பார்த்திபனை கேள்விகளால் துளைத்தனர். அவர்களிடம் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று கிளம்பி சென்றார். அப்போது அவர் கூறிய சில கருத்துக்கள் விமர்சனங்களையும் ஏற்படுத்தி உள்ளது.

    English Summary

    People fire a barrage of questions at Minister Tamilan Parthiban at the Kilambakkam Bus Stand—what exactly happened there last night?