ஒரு வாக்கில் தவெக வெற்றி! மறு எண்ணிக்கை கோரிய மனுவை வாபஸ் பெற்ற மாஜி அமைச்சர் பெரியகருப்பன்! பின்னணி

  • சென்னை: தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதிக்கு எதிராக, தொகுதி மாறி அனுப்பப்பட்ட தபால் வாக்கை மீட்டு, மறு எண்ணிக்கை கோரி தாக்கல் செய்திருந்த வழக்கை திமுக முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் வாபஸ் பெற்றுள்ளார். இதையடுத்து நீதிமன்றமும் இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது.

    Advertisement

    நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கம்யூனிஸ்டுகள், காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவுடன் விஜய் முதல்வரானார். இதில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டசபை தொகுதியில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி வெற்றி பெற்று இருந்தார்.

    Advertisement

    முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன்

    அந்த தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்து இருந்தார். இதையடுத்து திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்த தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதியின் வெற்றி செல்லாது என அறிவிக்க கோரி திமுக முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் தேர்தல் வழக்கினை தாக்கல் செய்தார்.

    இது போக தனியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பெரியகருப்பன் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். சிவகங்கை - திருப்பத்தூர் தொகுதிக்கு பதிவான தபால் வாக்குகள் மாறி திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தொகுதிக்கு அனுப்பப்பட்டது. எனவே இந்த வாக்குகளை மீட்டு மீண்டும் மறு எண்ணிக்கை நடத்த வேண்டும். மேலும், தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி எம்.எல்.ஏவாக சட்டமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க தடை விதிக்க வேண்டும். மீண்டும் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என அந்த மனுவில் கோரியிருந்தார்.

    Advertisement

    சுப்ரீம் கோர்ட் உத்தரவு

    இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் சீனிவாச சேதுபதி தமிழக சட்டப்பேரவையில் அரசுக்கு எதிராக நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தில் வாக்களிக்க தடை விதித்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

    இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு மற்றும் வழக்கு விசாரணைக்கு தடை விதித்து இருந்தது. நேற்று வழக்கு விசாரணையின் போது, இந்த விவகாரத்தில் பெரியகருப்பன் தாக்கல் செய்த இடையீட்டு மனுவை ஏற்று அவர்களது தரப்பு வழக்கை வாபஸ் பெற அனுமதிக்கிறது. மேலும் ஐகோர்ட்டில் இருக்கும் வழக்கை ரத்து செய்ய முடியாது. இரு தரப்பினரும் ஐகோர்ட்டை அணுகலாம் என்று கூறியிருந்தது.

    Advertisement

    வாபஸ் பெற்றார்

    மேலும், "வழக்கை சட்டத்திற்கு உட்பட்டு விரிவாக விசாரித்து உத்தரவு பிறப்பிக்கும். இதே போல், இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு மற்றும் வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்த முந்தைய உத்தரவை நீக்கம் செய்கிறோம்'' என உத்தரவிட்டனர். இந்த நிலையில் தான் பெரியகருப்பன், தொகுதி மாறி அனுப்பப்பட்ட தபால் வாக்கை மீட்டு, மறு எண்ணிக்கை கோரி தாக்கல் செய்திருந்த வழக்கை வாபஸ் பெற்றுள்ளார். இதையடுத்து நீதிமன்றமும் இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது.

    ஏற்கனவே தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதியின் வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி நீதிமன்றத்தில் தனியாக தொட்ர்ந்துள்ள தேர்தல் வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Former DMK Minister Periyakaruppan has withdrawn the petition he filed seeking a recount and the retrieval of a postal vote that had been misdirected to a different constituency—a vote intended for TVK candidate Srinivasa Sethupathi. Following this, the court issued an order closing the case.