பெரியார் ஏற்றிய பகுத்தறிவுச் சுடர் தலைமுறைகள் கடந்து ஒளிரட்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிவு

  • சென்னை: தந்தை பெரியாரின் பிறந்தநாள் 'சமூகநீதி நாளாக' கொண்டாடப்பட்டு வருகிறது. இந்லையில் இன்று பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு, 'பெரியார் ஏற்றிய பகுத்தறிவுச் சுடர், தலைமுறைகள் கடந்து ஒளிரட்டும்' என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில், வெளியிட்டுள்ள பதிவில், "தமிழர் தலைமுறை தலைநிமிரப் பாடுபட்ட பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாருக்குப் புரட்சி வணக்கம்! பல தலைமுறைகள் ஆதிக்கத்துக்குப் பணிந்தன. ஒரு தலைமுறை பெரியார் நிகழ்த்திய புரட்சியைக் கண்டது. பல தலைமுறைகள் அதன் மாற்றத்தைக் காண்கின்றன. ஆனாலும், ஆதிக்கம் இன்னும் முற்றாக அகலவில்லை. அதனை அடையாளம் காண வேண்டியது வரும் தலைமுறைகளின் பொறுப்பும்கூட!

    Advertisement

    வெளிச்சமற்ற இடம் இருள்; கேள்விகளற்ற சமூகம் அதைவிடப் பேரிருள். "ஏன்? எதற்கு? எப்படி?" என்ற கேள்விகள் உயிரோடு இருக்கும் வரை, இருள் நம்மை அண்டாது. பெரியார் ஏற்றிய பகுத்தறிவுச் சுடர், தலைமுறைகள் கடந்து ஒளிரட்டும்!" எனத் தெரிவித்துள்ளார்.

    திமுக துணைப் பொதுச் செயலாளரும், எம்.பியுமான கனிமொழி கருணாநிதி வெளியிட்டுள்ள பதிவில், "பெரியாரைப் படிப்போம்; அவர் விதைத்த சிந்தனைகளை உலகெங்கும் விதைப்போம்; நாளைய உலகை பகுத்தறிவும் சமத்துவமும் நிறைந்த உலகாகப் படைப்போம்!" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    English Summary

    Thanthai Periyar's birthday is celebrated as 'Social Justice Day'. Marking the occasion today, DMK leader MK Stalin stated, "May the flame of rationalism lit by Periyar shine on across generations."