“கமலாம்பாள் கருணாநிதி, மகேஸ்வரி ஸ்டாலின்!” பெரியார் அறிவுலகத்தில் போலி புத்தகங்கள்! ராஜ்மோகன் தாக்கு

  • சென்னை: பெரியார் அறிவுலக புத்தக கொள்முதலில் திமுகவினர் தவெகவை குற்றஞ்சாட்டுவதை நகைச்சுவை செய்தியாகவே பார்க்க வேண்டும் என்ற அமைச்சர் ராஜ்மோகன், சினிமாவில் வருவது போல அவர்களே பாம் வைத்து அவர்களே எடுப்பது போலவே இது இருப்பதாக சாடினார். மேலும், 'கமலாம்பாள் கருணாநிதி', 'பவுனாம்பாள் கருணாநிதி', 'மகேஸ்வரி ஸ்டாலின்' ஆகிய பெயர்களில் பல நூறு புத்தகங்கள் இருப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.

    Advertisement

    கோவை பெரியார் அறிவுலக நூலக புத்தகக் கொள்முதல் குறித்து சர்ச்சை வெடித்துள்ளது. ஏஐ தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட போலி புத்தகங்கள் மிக அதிக விலைக்கு வாங்கப்பட்டதாகவும் இதில் பெரிய மோசடி நடந்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்ததது. இந்த விவகாரத்தில் தவெக, திமுக இரண்டும் மாறி மாறி குற்றஞ்சாட்டி வருகிறது.

    Advertisement

    அமைச்சர் ராஜ்மோகன்

    இதற்கிடையே இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜ்மோன், "பெரியார் பெயரிலான நூலகத்தை திறப்பதற்கு எந்தவித தடங்கலும் வந்துவிடக் கூடாது என்பதாலேயே தேவையான ஏற்பாடுகளை செய்து திறந்து வைத்தோம். ஆனால், முந்தைய அரசு போட்ட பர்ச்சேஸ் ஆர்டர், கருவூலத்திலிருந்து சென்ற ரிலீஸ் ஆர்டரை எப்படி மாற்ற முடியும்? ஆர்டரை மாற்றுவது வேறு, ஆய்வு செய்வது வேறு. அரசியல் காரணங்களுக்காக இந்த விவகாரத்தில் ஸ்டாலின் குற்றஞ்சாட்டி வருகிறார்.

    சமீபத்தில் பபாசி அமைப்பில் இருந்து மூத்த பதிப்பாளர் ஒருவர் என்னை சந்தித்தார். தன்னிடம் இருந்து ஒரே ஒரு புத்தகத்தை மட்டும் வாங்கியிருப்பதாகவும் தன்னை அவமானப்படுத்துவதாகவும் கண்ணீர் வடித்தார். இந்த ஆட்சியில் அனைத்து தரமான நூல்களும் முறையாக ஆய்வு செய்யப்பட்டு மட்டுமே வாங்கப்படும் என்று உறுதியளித்துள்ளோம்.

    Advertisement

    அதேபோல் தவெக ஆட்சியில் புத்தக கண்காட்சிக்கு நிதி ஒதுக்க மாட்டார்கள் என சிலர் வதந்திகளை பரப்பினார்கள். ஆனால் முந்தைய திமுக, அதிமுக ஆட்சிகளில் ஒதுக்கப்பட்டதை விட பல மடங்கு அதிகமான நிதியை நமது முதலமைச்சர் இந்த ஆண்டு புத்தக திருவிழாக்களுக்கு ஒதுக்கி சட்டமன்றத்திலேயே அறிவித்துள்ளார்" என்றார்.

    வெடித்து சிரித்த வன்னியரசு

    மேலும், "திமுகவினர் இந்த விவகாரத்தில் புகார் கொடுத்துள்ளது நகைச்சுவை செய்தியாக தான் பார்க்க வேண்டும். அவர்களே பாம் வைப்பார்களாம்; அவர்களே போய் எடுப்பார்களாம்" என்று அமைச்சர் ராஜ்மோகன் சொல்ல அருகே இருந்த அமைச்சர் வன்னியரசு வெடித்து சிரித்தார். பிறகு தொடர்ந்து பேசிய ராஜ்மோகன், "போலீசார் நிலைமையை யோசித்து பாருங்கள். புகார் கொடுத்தால் காவல்துறை விசாரிக்கட்டும். புகாரை வைத்து பார்த்தால் அவர்கள் ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் மீது திமுகவினருக்கு கோபம் இருப்பது போல தெரிகிறது" என்றார்.

    Advertisement

    த்ரிஷா விஜய் என்ற எழுத்தாளர் பெயரில் உள்ள புத்தகம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, "ஒரு குறிப்பிட்ட புத்தகத்தை மட்டும் பற்றி பேசுகிற ஊடகங்கள், மற்ற போலி புத்தகங்கள் குறித்து ஏன் கேள்வி கேட்பதில்லை? கள்ளநோட்டு மிஷினை போட்டு அடிப்பது போல, ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, உண்மையான நூல்களிலிருந்து 10 பக்கங்களை திருடி ஒரு மிக பெரிய அறிவுசார் மோசடியை செய்துள்ளனர்.

    போலி புத்தகங்கள்

    'கமலாம்பாள் கருணாநிதி', 'பவுனாம்பாள் கருணாநிதி', 'மகேஸ்வரி ஸ்டாலின்' போன்ற பெயர்களில் நூற்றுக்கணக்கான புத்தகங்களை உருவாக்கியுள்ளார்கள். இவர்கள் ஒவ்வொருவரின் பெயரிலும் 100 புத்தகங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் அப்படி ஒரு பெண் எழுத்தாளர் நிஜமாகவே இருந்து 100 புத்தகங்களை எழுதியிருந்தால், அவரை நீங்களே தேடிக் கூட்டிக்கொண்டு வாருங்கள்; நாங்கள் அவருக்குக் 'கலைமாமணி' விருது தருகிறோம்.

    Advertisement

    கொள்ளை அடித்துவிட்டனர்

    ஆனால் அப்படி ஆட்களே இல்லை; போலி பெயர்களை பயன்படுத்தி அரசு பணத்தைக் கொள்ளையடித்துள்ளனர். அந்த புத்தங்களை ஊடகங்களுக்கு காட்டலாம் என இருந்தேன். ஆனால், அவை அனைத்தும் முக்கிய ஆதாரங்கள் என்பதால், நூலகத்திலிருந்து அகற்றப்பட்டுப் பெட்டியில் வைத்து சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்போம்" என்றார்.

    English Summary

    Tamil Nadu Minister Rajmohan has accused the previous DMK government of irregularities in the purchase of books(பெரியார் அறிவுலக மோசடி): Periyar Library Book Scam latest news in tamil.