கோவை பெரியார் நூலகம் கட்டி முடிக்கப்பட்டும் திறக்கப்படாதது ஏன்? சட்டசபையில் எவ வேலு கேட்ட கேள்வி

  • சென்னை: கோவையில் தற்போது வரை பெரியார் நூலகம் திறக்கப்படாதது ஏன் என்று திமுக எம்எல்ஏ எவ வேலு கேள்வி எழுப்பியுள்ளார். பெரியாரை கொள்கைத் தலைவராக ஏற்றுள்ள ஏன் இதுவரை திறக்கவில்லை என்று கேள்வி எழுப்பிய எவ வேலு, வைக்கத்தில் பெரியாருக்கு கட்டப்பட்டு வரும் மணிமண்டபம் கட்டட பணிகளும் நிறுத்த வைக்கப்பட்டுள்ளதாக விமர்சித்துள்ளார்.

    Advertisement

    சட்டசபையில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் திமுக எம்எல்ஏ எ.வ.வேலு பேசுகையில், சென்னை வள்ளுவர் கோட்டம் முதல் குமரி வள்ளுவர் சிலை வரை கலைஞரின் அடையாளம் இல்லாத ஊரெ இல்லை. ஜல்லிக்கட்டு அரங்கம், சைதாப்பேட்டை எம்சி ராஜா மாணவர் விடுதி, கொளத்தூர் மருத்துவமனை உள்ளிட்ட சாதனைகள் படைக்கப்பட்டன.

    Advertisement

    அதேபோல் மதுரை கலைஞர் நூலகம், சிவகங்கையில் கீழடி அருங்காட்சியகம், நெல்லையில் பொருநை அருங்காட்சியம் அமைக்கப்பட்டுள்ளன. இதுமட்டுமல்லாமல் மணிமண்டபங்கள், சிலைகள் கொண்டு வரப்பட்டன. டெல்லியில் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகளுக்காக கட்டடம், டெல்லியில் திருவள்ளுவருக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சியை எட்ட கல்வி அவசியம் என்பதை உணர்ந்து நூலகம் அவசியம் என்று காமராஜர் பெயரில் நூலகம் கட்டப்பட்டது. கடலூரில் அஞ்சலை அம்மாள் பெயரிலும், நெல்லையில் காயிதே மில்லத் பெயரிலும், சேலத்தில் பாரதி தாசன் பெயரிலும், கோவையில் பெரியார் நூலகம் கட்டப்பட்டு வருகிறது. இதில் கோவை பெரியர் நூலகம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படும் நிலையில் உள்ளது.

    Advertisement

    அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூட நேரில் சென்று ஆய்வு செய்தார். திமுக ஆட்சியின் போது 95% பணிகள் நிறைவடந்துவிட்ட சூழலில், 3 மாத காலமாக எந்த பணிகளும் செய்யப்படாமல் உள்ளது. தற்போது வரை பெரியார் நூலகம் திறக்கப்படவில்லை. அதேபோல் கேரளத்தின் வைக்கத்தில் பெரியார் பெயரில் கட்டப்பட்டு வந்த மணிமண்டபம் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    பெரியார் தங்களின் கொள்கைத் தலைவர் என்று தம்பட்டம் அடிக்கும் அவர்கள், ஏன் பெரியார் பெயரில் கொண்டு வரப்பட்ட நூலகம், மணிமண்பப பணிகளை நிறுத்தி வைத்துள்ளார்கள் என்பதே கேள்வியாக உள்ளது என்று தெரிவித்தார்.

    English Summary

    Periyar Library: Why Has Periyar Library Not Opened in Coimbatore Yet? DMK MLA EV Velu Questions Government