சென்னை: திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணி மகனுக்கு, விநாயகர் கோவிலில் திருமணம் நடைபெற்றதாக தெரிவித்துள்ளார் வீரமணியின் குடும்ப நண்பரும், தற்போது பாஜகவில் நிர்வாகியாக இருப்பவருமான கராத்தே தியாகராஜன்.
திமுக பொதுசெயலாளர் துரைமுருகன் குடும்பத்தில் வைதீக முறையில் திருமணம் நடத்தப்பட்டதை கி.வீரமணி விமர்சித்திருந்தார். இந்த நிலையில்தான், கராத்தே தியாகராஜன் பேசிய ஒரு வீடியோவை துரைமுருகன் ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
அன்புராஜ் வீட்டிற்கு எதிர்வீட்டில் தான் நான் குடியிருக்கிறேன். நானும் அன்புராஜூம் ஒன்றாகவே ஸ்கூலுக்கு போவோம். ஒரு நாள் எங்கள் காரில் போவோம். மற்றொரு நாள் ஆசிரியர் வீரமணி அவரது காரில் அழைத்து செல்வார்.. 1982ல் வீரமணி பையன் அனபுராஜூக்கு காதல் திருமணம்.. அவருடைய மனைவி சுதா. இவர்களுக்கு மெட்ராஸில் பதிவு திருமணம் செய்ய போனோம். ஆனால் வீரமணி மகன் என்று எதிர்ப்பு காரணமாக அவர்கள் மறுத்துவிட்டார்கள். இதனால் பாண்டிச்சேரி போய், கடலூருக்கு போனோம்.. அங்கு வினை தீர்க்கும் விநாயகர் கோவில்.. இவ்வளவு நாளாக கடவுள் இல்லை என்று கூறினாரே ஆசிரியர் வீரமணி. அப்படி பேசியவர் மகனுக்கு கோயிலில் திருமணம் நடந்தது. கடவுள் என்ற ஒருவர் இருக்கிறார்.. பெரியார் பேரன், வீரமணி பையன்.. கோயிலில் என் தலைமையில் கல்யாணம் நடந்தது. இவர்கள்தான் ஆன்மீகத்தை பற்றி பேசுகிறார்கள் " என்று கராத்தே தியாகராஜன் அந்த வீடியோவில் பேசியிருந்தார். வீரமணி வெளியிட்ட பதிவில் கூறியிருந்தது என்ன திராவிடர் கழக தலைவர் வீரமணி வெளியிட்டிருந்த சமூக வலைதளப்பதிவில், "தி.மு.க.வின் பொதுச்செயலாளராக சில ஆண்டுகளாகப் பதவி வகித்துவரும், முன்னாள் அமைச்சர் துரைமுருகன் அவர்களுடைய பேத்தியும், வேலூர் தொகுதி தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த் அவர்களின் மகளுமான செந்தாமரை திருமணம், மானமிகு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் நடத்தி வைப்பதாக அழைப்பிதழ் அனுப்பப்பட்டு, அத்திருமண அழைப்பிதழில் பெரியார், அண்ணா, கலைஞர், மு.க.ஸ்டாலின், அவரது துணைவியார், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் படங்களும் அச்சிடப்பட்டுள்ளன. தி.மு.க.வுக்கும், தலைவருக்கும் இழுக்கல்லவா? இரட்டை நிலை இனி தொடராமல் தி.மு.க. தலைவர் தடுத்திட வேண்டும். 1.11.2026 அன்று காலை நடைபெற்ற ஆடம்பரத் திருமணத்தில், 'சமஸ்கிருத வேத மந்திரம் முழங்க நடந்த துரைமுருகன் இல்லத் திருமணம்' என்ற செய்தி இன்றைய 'நாளேடு ஒன்றில்' வந்திருப்பதுடன், சமூக வலைத்தளங்களையும் ஆக்கிரமித்துள்ளது. இப்படி இரட்டை நிலைப்பாட்டுடன் கொள்கைக்கு அவமதிப்பு ஏற்படுத்திய நடப்புக்காக திராவிட இயக்க தமிழர் பேரவைத் தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், டாக்டர் செந்தில்குமார் (முன்னாள் எம்.பி.) ஆகியோர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் 'இதயம் வலிக்கிறது' என்றும், 'கொள்கைப் பிடிப்புள்ள ஓர் இயக்கத்தில், இப்படி நடப்பதற்கு மனம் உடன்படவில்லை' என்றும் தமது கருத்துகளை மென்மையாக தெரிவித்துள்ளனர்! இதன்மூலமே இச்செய்தி அறிந்த நாம், பெரிதும் வேதனையும், வெட்கமும் அடைகிறோம். 🔸புரோகிதத் திருமணம் என்றால் தி.மு.க. தலைவர் தலைமையில் என்று அழைப்பிதழ் போடுவானேன்? புரோகித முறையில்தான் தங்கள் வீட்டுத் திருமணம் நடைபெறும் நிலை உள்ளது என்றால், அதற்கேன் தி.மு.க. தலைவர் தலைமையில் அவர் நடத்தி வைப்பதுபோல், திராவிட இயக்கத் தலைவர்கள் படமும் போட்ட அழைப்பிதழ் எதற்காக? அதுவும், தி.மு.க.வில் இரண்டாவது பொறுப்பில் உள்ள நமது அன்பிற்குரிய பொதுச்செயலாளர் இல்ல நிகழ்வில், தி.மு.க. தலைவருக்கும், இயக்கத்திற்கு இந்த இரட்டை செயல்முறை மூலம் இழுக்கைத் தேடித் தரலாமா? நண்பர் துரைமுருகன் சுமார் 45 ஆண்டுகளுக்குமேல் தி.மு.க.வில் உள்ளவர். நாடறிந்தவர். அவரது பொது வாழ்க்கைக்கே இது ஒரு தீராத களங்கம் அல்லவா? ஒரு குடம் பாலானால் என்ன? ஒரு துளி (ஆரிய) விஷம் பட்டால்! 'பாலின் வெண்மையா பேசப்படும்! சற்று சிந்தித்திருக்க வேண்டாமா? புரோகிதத் திருமணம்தான் என்றால், அதனை அறிவு நாணயத்துடன் தலைவரிடம் தெரிவித்து, அந்த வழியில் வெளிப்படையாக நடத்தியிருக்கலாமே! 75 ஆண்டுகால திராவிட முன்னேற்றக் கழகம், வெறும் அரசியல் கட்சி அல்ல; பகுத்தறிவு, சுயமரியாதைக் கொள்கைகளைச் செயல்படுத்திட, ஆட்சியைப் பயன் படுத்துவது என்ற உறுதியுடன் உருவான தனித்தன்மையான ஒன்றாகும். அறிஞர் அண்ணா, கலைஞர் போன்ற தலைவர்கள் பாதை போட்டுத் தந்த இயக்கம். 🔸சுயமரியாதைத் திருமண முறையைத் தந்தை பெரியார் அறிமுகப்படுத்தினார்; முதலமைச்சர் அண்ணா சட்ட வடிவம் கொடுத்தார் பார்ப்பனப் புரோகிதர்களை, சமஸ்கிருத மந்திரங்களைத் தவிர்த்து, சுயமரியாதைத் திருமண முறையை அறிமுகப்படுத்தியவர் தந்தை பெரியார். தாம் முதலமைச்சராகப் பொறுப்பிலிருந்த குறுகிய ஆட்சிக் காலத்திலும் அதற்குச் சட்ட அங்கீகாரம் பெற்றுத் தந்து, அதனைத் தம் முத்தான மூன்று வரலாற்றுச் சாதனைகளுள் ஒன்றாக நிறுவியவர் அறிஞர் அண்ணா. அவர்களைத் தலைவர்களாகக் கொண்ட இயக்கத்தின் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருப்பவர், அக்கொள்கையில் இருந்து வழுவலாமா? எனவே, இதனை திராவிடர் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. எது கிடைக்கும், தி.மு.க.வைத் தாக்க என்று காத்திருக்கும் எதிரிகளுக்கு, இப்படிப்பட்ட செய்தி, வெறும் வாய்க்குக் கிடைத்த அவல் போன்றதுதானே? 🔸தி.மு.க. தலைவரின் கவனத்துக்கு தி.மு.க. தலைவரும், இயக்கமும் இதுபோன்ற இரட்டை நிலை நடவடிக்கைகள் இனி தொடரா வண்ணம் கவனத்துடன் பார்ப்பது - தடுப்பது மிகவும் அவசியம், அவசரம்!" இவ்வாறு வீரமணி கூறியிருந்தார்.
அந்த வீடியோவில் கராத்தே தியாகராஜன் பேசியிருப்பதாவது "திகவில் மிகப்பெரிய பொறுப்பு, பொதுச்செயலாளர் பொறுப்பு, ஆயிரக்கணக்கான கோடி சொத்துக்களுக்கு சேர்மன் யார் என்றால் வீரமணி பையன் அன்புராஜ்..
தனி மனிதர்களைவிட இயக்கம் முக்கியம், இயக்கத்தைவிட கொண்ட கொள்கை, லட்சியம் மிக முக்கியம் அல்லவா? கட்டு்ப்பாடு அவற்றைவிட மிக முக்கியம்.பரனூர், ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடிகளில் இனி இவர்களுக்கு கட்டணமில்லை.. மத்திய அரசு திட்டம்
முதலமைச்சரை விமர்சிக்கும் உரிமை சாதாரண குடிமகனுக்கு உண்டு.. நீதிபதி தீர்ப்பில் கூறிய ஏழு அம்சங்கள்