காங்கிரஸ் வளரணும்னா முதலில் இதை செய்யுங்கப்பா.. மாணிக்கம் தாகூர் முன்பு உடைத்த பீட்டர் அல்போன்ஸ்

  • சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அரசியல் களத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. அரசியல் கட்சிகளின் நிர்வாகம், கட்டமைப்பிலும் மாற்றம் ஏற்படுகிறது. காங்கிரஸ் கட்சியின் புதிய மாநில தலைவராக இருந்த செல்வபெருந்தகை மாற்றப்பட்டுள்ளார். புதிய மாநில தலைவர் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி நீண்ட நேரம் நடைபெற்றதால் தொண்டர்கள் பலர் பாதியிலேயே வெளியறினார்கள். கட்சி நிகழ்ச்சிகளில் அதிரடி மாற்றம் செய்தால் மட்டுமே கட்சி வளரும் என்று பீட்டர் அல்போன்ஸ் ஓப்பனாக பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக மாணிக்கம் தாகூர் பொறுப்பேற்றார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அந்தக் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், "முதலில் இந்த நிகழ்ச்சி மேடையை பார்க்க வேண்டும். வழக்கமான நம் மேடை என்றால் மேடையில் 150 பேர் இருப்பார்கள். எதிரில் 20 பேர் தான் அமர்ந்திருப்பார்கள். தம்பி மாணிக்கம் தாகூர் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளார். பேசுகிற ஆட்கள் மட்டும் தான் மேடையில் இருக்க வேண்டும். எதிரில் அமர்ந்திருப்போர் கேட்டால் கேளு, இல்லையென்றால் போ என்று முடிவு செய்துள்ளார்.

    Advertisement

    கட்சி எப்படி வளரும்

    இந்த நேரத்தில் இன்னொரு முடிவையும் நாம் எடுக்க வேண்டும். எந்த கூட்டமாக இருந்தாலும் ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் நடக்க கூடாது. இதை படித்தால் தான் காங்கிரஸ் வளரும். அது எந்த பொதுக்கூட்டம், கருத்தரங்காக இருந்தாலும் சரி. ஒன்றரை மணி நேரம் தான் நடக்க வேண்டும். அந்த ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் நடத்தப்படும் கூட்டம் வேஸ்ட். இதையெல்லாம் நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. ஒரு நாள் அவர் எனக்கு அட்வைஸ் செய்துள்ளார்.

    நான் மனம்விட்டு பேசி, கட்சியை எப்படி நடத்த வேண்டும் என்று அட்வைஸ் வழங்கினேன். அதற்கு அவர், அண்ணா இப்படியெல்லாம் பேசாதீங்க. ராகுல் காந்தி கட்சியை எப்படி நடத்துகிறார் என்பதை தெரிந்து கொண்டால் தான், காங்கிரஸ் மேலே வர முடியும். காங்கிரஸ் கட்சி எப்படி செயல்படுகிறது, எப்படி செயல்பட வேண்டும் என்பதை தெளிவாக தெரிந்து அந்த நிழலிலேயே வளர்ந்துள்ளார்" என்றார். அவரின் பேச்சு காங்கிரஸ் கட்சியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

    English Summary

    Peter Alphonse: Congress Peter Alphonse said, If you want to develop congress conduct meeting with short time. this create shock among party's other leaders.