பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு.. வாகன ஓட்டிகளுக்கு இடியை இறக்கிய மத்திய அரசு!

  • சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. கடந்த 10 நாட்களில் மூன்றாவது முறையாக எரிபொருள் விலை உயர்ந்துள்ளது. இன்று பெட்ரோல் லிட்டருக்கு 87 காசுகளும், டீசல் லிட்டருக்கு 91 காசுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 82 காசுகள் அதிகரித்து ரூ.105.31 ஆக விற்பனை ஆகின்றது.

    Advertisement

    தமிழகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். கடந்த 10 நாட்களில் மூன்றாவது முறையாக எரிபொருள் விலை உயர்ந்திருப்பது மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    மேற்காசிய நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக நம் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதன் எதிரொலியாகவே ஏற்கனவே இருமுறை பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து இருந்தது.

    இந்த நிலையில் மீண்டும் பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. இந்த புதிய உயர்வின் படி, பெட்ரோல் லிட்டருக்கு 87 காசுகளும், டீசல் லிட்டருக்கு 91 காசுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று ரூ.104.57 ஆக இருந்த ஒரு லிட்டர் பெட்ரோல் விலை இன்று ரூ.105.44 ஆக உயர்ந்துள்ளது.

    சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 82 காசுகள் அதிகரித்து ரூ.105.31 ஆக விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ச்சியாக எரிபொருள் விலை உயர்வதால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மாற்றம் மற்றும் வரி சுமைகளே இந்த உயர்விற்கு காரணமாக கூறப்படுகிறது.

    English Summary

    Petrol and diesel prices have been increased again in Tamil Nadu, marking the third hike in the last 10 days. Petrol prices rose by 87 paise per litre while diesel increased by 91 paise. In Chennai, petrol is now being sold at Rs.105.31 per litre after an 82 paise hike.