Petrol, Diesel Price: மீண்டும் மீண்டுமா? சென்னையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு.. இன்றைய ரேட் என்ன?

  • சென்னை: மீண்டும் மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்வைச் சந்தித்து வருகிறது. சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.0.11 காசுகள் உயர்ந்து ரூ.107.87க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் லிட்டருக்கு ரூ.0.10 காசுகள் உயர்ந்து ரூ.99.65க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    Advertisement

    சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்யின் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களால் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் நிர்ணயிக்கப்பட்டு வருகின்றன.

    Advertisement

    அதன் அடிப்படையில், தமிழகத் தலைநகர் சென்னையில் இன்றைய நாளுக்கான (திங்கட்கிழமை) எரிபொருள் விலை நிலவரம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

    சென்னையில் நேற்று (மே 31- ஞாயிற்றுக்கிழமை) ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை - ஜூன் 1) சென்னையில் பெட்ரோல், டீசல் விலை சற்று உயர்ந்துள்ளது.

    அதன்படி பெட்ரோல் லிட்டருக்கு 11 காசுகள் உயர்ந்து ரூ.107.87-க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் லிட்டருக்கு 10 காசுகள் உயர்ந்து ரூ.99.65-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ.95.00 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    Advertisement

    இந்த புதிய விலை நிர்ணயம் இன்று காலை 6 மணி முதல் சென்னை மாநகர் முழுவதும் உள்ள அனைத்து எரிபொருள் நிலையங்களிலும் அமலுக்கு வந்துள்ளது.

    மாநகரப் பகுதிகளில் சி.என்.ஜி (CNG) காஸ் பயன்பாடு அதிகரித்து வரும் சூழலில், அதன் விலையும் கிலோவுக்கு ரூ. 95ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. வாகன ஓட்டிகள் தங்களின் அன்றாடப் பயணத் திட்டமிடலுக்கு இந்த விலை நிலவரத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    English Summary

    Petrol and diesel prices are witnessing repeated hikes. In Chennai today, the price of petrol has risen by ₹0.11 per liter and is being sold at ₹107.87. Diesel has increased by ₹0.10 per liter and is being sold at ₹99.65.