PF பணம் யுபிஐ மூலம் 75% வரை எடுக்கலாம்.. பிஎப் சந்தாதாரர்களுக்கு டிசம்பரில் வரும் புதிய வசதி என்ன?

  • சென்னை: பிஎப் பணம்.. யுபிஐ மூலம் இனி நேரடியாக எடுக்கலாம் என்ற புதிய வசதி வரப்போகிறது.. மாதம் மாதம் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் இந்த பணம், தேவைப்படும் நேரத்தில் கைகொடுக்கும்.. ஆனால் அதை எடுப்பதற்கு இதுவரை சில நடைமுறைகளை பின்பற்ற வேண்டியிருந்தது. இப்போது அந்த விஷயத்தில்தான் ஒரு மாற்றம் வரப்போகிறது.. பிஎப் பணத்தை யுபிஐ செயலிகள் மூலம் எளிதாக எடுக்கும் வசதியை கொண்டு வர தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎப்ஓ) ஏற்பாடுகளை செய்து வருகிறது. அதை பற்றி இங்கே பார்க்கலாம்.

    Advertisement

    பிஎப் பணம் தேவைப்படும்போது அதை எப்படி எடுப்பது என்பதுதான் பலருக்கும் குழப்பமாக இருக்கும்.. இப்போது பிஎப் பணத்தை எடுக்க வேண்டும் என்றால், யுஏஎன் வெப்சைட் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

    Advertisement

    பிஎப் பணம் யுபிஐ

    விண்ணப்பித்த பிறகு, நம்முடைய விவரங்கள் சரிபார்க்கப்படும். எல்லாம் சரியாக இருந்தால், பிஎப் கணக்கில் இருந்து எடுக்கப்படும் பணம் நம்முடைய வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். அதன் பிறகு வங்கியில் இருந்து அந்த பணத்தை எடுத்துப் பயன்படுத்தலாம்.

    இந்த நடைமுறையைத்தான் இன்னும் சுலபமாக்க இபிஎப்ஓ இப்போது வேலை செய்து வருகிறது.. அதாவது, நாம் தினமும் பணம் அனுப்பவும், செலவு செய்யவும் பயன்படுத்தும் யுபிஐ ஆப்கள் மூலமாகவே பிஎப் பணத்தை எடுக்கும் வசதியை கொண்டு வர ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

    டிசம்பர் மாதம் வசதிகள்

    இதற்கான சோதனை வேலைகளும் தற்போது முழுவீச்சில் நடந்து வருகின்றன. வரும் டிசம்பர் மாதத்திற்குள் இந்த வசதியை அறிமுகம் செய்ய ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    Advertisement

    இதற்காக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு புதிய செயலி ஒன்றையும் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த புதிய வசதி நடைமுறைக்கு வந்தால், அனுமதி கிடைக்கும் பட்சத்தில் பிஎப் கணக்கில் இருக்கும் பணத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை யுபிஐ மூலமாகவே எடுத்துக்கொள்ள முடியும்.

    அதிலும் முக்கியமான விஷயம் இருக்கிறது.. பிஎப் கணக்கில் இருக்கும் பணத்தில் இருந்து 75 சதவீதம் வரை யுபிஐ மூலம் எடுக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் கணக்கில் இருக்கும் மொத்த பணத்தையும் அப்படியே எடுத்துவிட முடியாது. குறைந்தபட்சம் 25 சதவீத பணம் பிஎப் கணக்கிலேயே இருக்க வேண்டும்.

    Advertisement

    தற்போதைய விதிகளின்படியும், சில முக்கியமான தேவைகளுக்காக பிஎப் பணத்தை எடுக்க அனுமதி உள்ளது. குறிப்பாக கல்வி, திருமணம், வீடு கட்டுவது உள்ளிட்ட அத்தியாவசிய செலவுகளுக்காக பிஎப் கையிருப்பில் இருந்து 75 சதவீதம் வரை பணத்தை எடுக்கலாம்.

    வங்கிக் கணக்குக்கு வசதி

    இதுவரை பிஎப் பணத்தை எடுக்க ஆன்லைனில் விண்ணப்பித்து, பணம் வங்கிக் கணக்குக்கு வந்த பிறகுதான் அதை பயன்படுத்த முடிந்தது. இனி யுபிஐ வசதி வந்தால், பணம் எடுக்கும் நடைமுறை இன்னும் வேகமாகவும் எளிமையாகவும் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது..

    அதாவது, பிஎப் கணக்கில் பணம் வைத்திருப்பவர்களுக்கு இனி பணம் தேவைப்படும் நேரத்தில் அதை எடுப்பது கொஞ்சம் ஈஸியாக போகிறது.. டிசம்பருக்குள் புதிய வசதி அறிமுகமானால், பிஎப் பணம் வைத்திருக்கும் நிறைய பேருக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

    Advertisement

    இந்த யுபிஐ வசதி இபிஎப்ஓவின் "EPFO 3.0" திட்டத்தின் ஒரு பகுதியாகும்.. பிஎப் கணக்கையும் வங்கி கணக்கு போல செல்போன் மூலம் எளிதாக பயன்படுத்த வேண்டும் என்பதுதான் இதன் நோக்கம்... இந்த வசதி வந்தால், கோடிக்கணக்கான ஊழியர்கள் அவசர தேவைகளுக்கு பிஎப் பணத்தை யுபிஐ மூலம் எளிதாக எடுத்துக்கொள்ள முடியும். மேலும், எவ்வளவு பணம் எடுக்கலாம், பிஎப் கணக்கில் என்னென்ன தகவல்களை அப்டேட் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட முழு விவரங்களையும் இபிஎப்ஓ விரைவில் வெளியிட உள்ளது...!!

    Topics: #pf money

    English Summary

    PF Money via UPI: Withdraw Up to 75%.. What New Facility Is Coming for PF Subscribers in December?