சென்னை: கோயம்புத்தூர் மாநகரம் நாளுக்கு நாள் அதிவேகமாக வளர்ந்து வருகிறது. சென்னையைத் தொடர்ந்து தமிழகத்தின் மிகப்பெரிய வணிக மற்றும் தொழில் நகரமாக விளங்கும் கோவையில், மக்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஃபீனிக்ஸ் மால் கட்டுமானப் பணிகள் தற்போது மிக மும்முரமாக நடந்து வருகின்றன.
நவா இந்தியா பகுதியில் அமைய உள்ள இந்த பிரம்மாண்ட திட்டம், கோவை மக்களின் ஷாப்பிங் மற்றும் பொழுதுபோக்கு அனுபவத்தை முற்றிலும் மாற்றியமைக்கப் போகிறது.
ஃபீனிக்ஸ் மில்ஸ் நிறுவனம் இந்த திட்டத்தை மிகச் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது. சுமார் 9 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில், ஏறத்தாழ 9.6 லட்சம் சதுர அடி பரப்பளவில் இந்த நவீன ஷாப்பிங் மால் உருவாகிறது. இது தமிழ்நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய வணிக வளாகமாக திகழவுள்ளது. சென்னையைப் போல கோவையிலும் உலகத்தரம் வாய்ந்த ஷாப்பிங் அனுபவத்தை வழங்குவதற்காக இந்த மால் வடிவமைக்கப்பட்டுள்ளது. அவினாசி சாலைக்கு அருகில், நவா இந்தியா பகுதியில் உள்ள பிரபல ராடிசன் ப்ளூ ஹோட்டலுக்கு அருகிலேயே இந்த வளாகம் அமைகிறது. இதனால் கோவையின் எந்தப் பகுதியிலிருந்தும் எளிதில் வந்து செல்ல முடியும். நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளதால், இது கோவை மாவட்டத்தின் புதிய அடையாளமாக மாறும் என்பதில் சந்தேகமில்லை. இந்த புதிய ஃபீனிக்ஸ் மாலில் கோவை மக்கள் இதுவரை கண்டிராத பல சிறப்பம்சங்கள் இடம்பெறுகின்றன. உலக அளவில் புகழ்பெற்ற முன்னணி பிராண்டுகளின் ஆடைகள், காலணிகள், எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் இங்கு வரவுள்ளன. இது தவிர, குடும்பத்துடன் சென்று பொழுதைப்போக்க நவீன திரையரங்கங்கள், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதிகள் மற்றும் நூற்றுக்கணக்கானோருக்கு இடமளிக்கும் பிரம்மாண்ட உணவுக்கூடம் ஆகியவையும் அமைக்கப்படுகின்றன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் வரும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முக்கிய இடமாக இது மாறக்கூடும். இந்த திட்டத்தின் மற்றொரு மிகப்பெரிய சிறப்பு என்னவென்றால், இதன் அருகில் அமைக்கப்படும் பிரம்மாண்ட ஹோட்டல் ஆகும். 534-க்கும் மேற்பட்ட அறைகளைக் கொண்டு உருவாகும் இந்த ஹோட்டல், இந்தியாவின் மிகப்பெரிய ஹோட்டல்களில் ஒன்றாக இருக்கப் போகிறது. வணிக நிமித்தமாக கோவைக்கு வருபவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு இது மிகச் சிறந்த தங்குமிடமாக அமையும். இந்த மாபெரும் கட்டுமானப் பணியால் கோவையின் பொருளாதாரமும் வேலைவாய்ப்புகளும் பல மடங்கு அதிகரிக்கும். குறிப்பாக, சில்லறை விற்பனை, உணவுத் துறை, மற்றும் விருந்தோம்பல் துறைகளில் ஆயிரக்கணக்கான உள்ளூர் இளைஞர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் கிடைக்கும். கோவையின் வளர்சிக்கு இந்த மால் ஒரு பெரிய மைல்கல்லாக இருக்கும் என்று வணிக நிபுணர்கள் கருதுகின்றனர். வீடுகளுக்குத் தேவையான பொருட்கள் வாங்குவது முதல் வார இறுதி நாட்களில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவது வரை அனைத்து தேவைகளையும் இந்த ஒரே இடம் பூர்த்தி செய்யும். பணிகள் மிக வேகமாக நடந்து வருவதால், கோவை மக்கள் இந்த மாலின் திறப்பு விழாவை மிகவும் ஆர்வமுடன் எதிர்நோட்டுக் காத்துள்ளனர்.மாபெரும் திட்டம் மற்றும் பரப்பளவு
ஒரே கூரையின் கீழ் அனைத்து வசதிகளும்
இந்தியாவின் மிகப்பெரிய ஹோட்டல் மற்றும் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள்
கோவை மக்களின் எதிர்பார்ப்பு