விடை பெறும் டீசல் பேருந்துகள்? மாற்றி யோசிக்கும் சென்னை மாநகர போக்குவரத்து கழகம்.. நல்ல பிளான்

  • சென்னை: இன்றைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதன் விலை அனேகமாக இன்னும் கடுமையாக உயரவே வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. டீசலை கிட்டத்தட்ட 100 ரூபாய் கொடுத்து வாங்கி போட்டு, மகளிருக்கு இலவச பயணம் தந்து, அரசால் போதிய லாபத்தை ஈட்ட முடியாத நிலை இருக்கிறது. இதனால் போக்குவரத்து கழகம் வருமானத்திற்கு மாற்று வழிகளை ஆராய்ந்து வரும் நிலையில், சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் இயங்கி வரும் டீசல் பஸ்களை மின்சார பஸ்களாக மாற்றும் திட்டத்தை அரசு பரிசீலித்து வருகிறது.

    Advertisement

    சென்னை மாநகர போக்குவரத்து கழகம் என்பது மிகப்பெரியது. தமிழ்நாட்டிலேலேயே அதிகப்படியான பேருந்துகளை இயக்கி வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு சுமார் 690 வழித்தடங்களில் சுமார் 3 ஆயிரத்து 900 பேருந்துகளை தினசரி இயக்கி வருகிறது சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம். தினமும் சுமார் 40 லட்சம் மக்கள் மாநகர போக்குவரத்து கழக பஸ்களை பயனபடுத்துகிறார்கள். சென்னை புறநகரில் வசிக்கும் ஒன்றரை கோடி மக்களில் பெரும்பாலானோர் பேருந்துகளை பயன்படுத்துகிறார்கள்.

    Advertisement

    அரசு பேருந்துகள் எல்லாமே டீசலில் தான் ஓடி வந்தன. ஆனால் டீசல் போட்டு ஓட்டுவதற்கு நிறைய பணத்தை செலவு செய்ய வேண்டியதிருந்தது. ஆனால் அது பெரும் இழப்பையே ஏற்படுத்தி வருகிறது. அதேபோல் டீசல் பேருந்துகள் சுற்றுச்சூழலுக்கு பொறுத்தமானதாக இல்லை.. எனவே சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் எரிபொருள் மிச்சம் ஆகிய காரணங்களுக்காக டீசல் பஸ்களுக்கு பதிலாக சி.என்.ஜி. பஸ்களை இயக்கவும், பழைய டீசல் பஸ்களை சி.என்.ஜி. பஸ்களாக மாற்றவும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அரசு திட்டமிட்டது.

    அதன்படியே சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் சுமார் 60 டீசல் பஸ்கள், சி.என்.ஜி. பேருந்துகளாக மாற்றப்பட்டன. மேலும், 145 புதிய சி.என்.ஜி. பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஒரு கிலோ மீட்டருக்கு சுமார் ரூ.5 எரிபொருள் மிச்சம் ஏற்பட்ட போதிலும் சி.என்.ஜி. பஸ்களில் அடிக்கடி பழுது ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக அரசு டீசல் பஸ்களை சி.என்.ஜி. பஸ்களாக மாற்றும் திட்டம் கைவிட்டுவிட்டது.

    Advertisement

    இதனிடையே கடந்த 2025-ம் ஆண்டு ஜூன் மாதம் முதன் முதலாக மின்சார பஸ்கள் இயக்கம் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் தொடங்கப்பட்டிருந்தது. மின்சார பஸ்கள் இயக்கம் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு உகந்ததாக இருக்கிறது,' ல் முதல்கட்டமாக 625 மின்சார பஸ்கள் இயக்கப்பட்ட நிலையில், 2-வது கட்டமாக 750 மின்சார பஸ்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு அதில் 130 ஏ.சி. மின்சார பஸ்கள் இயக்கத்தை முதல்வர் விஜய் கடந்த ஆகஸ்டு மாதம் தொடங்கி வைத்தார்.

    இந்த நிலையில், எரிபொருள் சேமிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் உள்ள சுமார் 3 ஆயிரத்து 240 டீசல் பஸ்களை மின்சார பஸ்களாக மாற்றுவதற்கான யோசனையை போக்குவரத்து கழகம் முன் வைத்துள்ளது. இதற்காக முதற்கட்டமாக 100 டீசல் பஸ்களை ஆய்வு செய்து மின்சார பஸ்களாக மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை கண்டறிய சென்னை மாநகர போக்குவரத்து கழகம் பரிசீலித்து வருகிறது.

    Advertisement

    எனினும், மின்சார பஸ்களை இயக்குவதற்கான மின்கட்டமைப்புகளை அதிகளவில் உருவாக்க வேண்டியதிருக்கிறது. எனவே, முதற்கட்டமாக 100 டீசல் பஸ்களை மின்சார பஸ்களாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை பரிசீலித்து வருகிறது. அதன்பிறகு படிப்படியாக பேருந்துகள் மின்சார பேருந்துகளாக மாற்றப்பட வாய்ப்பு உள்ளது.

    English Summary

    As the transport corporation explores alternative revenue streams, the government is considering a plan to convert the diesel buses operated by the Chennai Metropolitan Transport Corporation into electric buses.