தமிழகம் முழுதும் பெட்ரோல் பங்க்குகளில், டிஜிட்டல் முறையில் பணம் வசூலிப்பதை நிறுத்த திட்டம்?

  • சென்னை: தமிழ்நாட்டில் சிலரின் வங்கி கணக்குகள் இணைய மோசடியில் ஏமாற்றப்பட்ட பணத்தைப் பெறவும், பின்னர் பல்வேறு வங்கி கணக்குகளுக்கு பணத்தை மாற்றவும் பயன்படுத்தப்படுகிறது. இதனை கண்டுபிடித்த சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக நடவடிக்கை எடுத்து பலரை கைது செய்துள்ளனர். பல வங்கி கணக்குகளை முடக்கி உள்ளனர். அதாவது சைபர் குற்றத்தில் இருந்து பணம் அனுப்பப்பட்ட வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. அதில் பெட்ரோல் பங்க் டீலர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து தமிழகம் முழுதும் பெட்ரோல் பங்க்குகளில், டிஜிட்டல் முறையில் பணம் வசூலிப்பதை நிறுத்துவது குறித்து பரிசீலிக்கும் நிலை ஏற்படும்,' என, தமிழக பெட்ரோலியம் டீலர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

    Advertisement

    தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் சைபர் கிரைம் வலையமைப்பை மொத்தமாக காலி செய்யும் நோக்கில் ஆப்ரேஷன் நடந்து வருகிறது. தமிழ்நாடு காவல் துறையின் இணையவழி குற்றப்பிரிவு சார்பில் ஆகஸ்ட் 6 மற்றும் 7 தேதிகளில் சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் 837 சைபர் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

    Advertisement

    கைதானவர்களில் பலர் வங்கி கணக்கை வாடகைக்கு விட்டவர்கள் ஆவர். சைபர் மோசடிகள் மூலம் பெறப்படும் பணத்தைப் பெறுதல், பரிமாற்றம் செய்தல், பல்வேறு கணக்குகளுக்கு மாற்றுதல் போன்றவற்றுக்கு தொடங்கப்படும் மியூல் வங்கிக் கணக்குகளை, சட்டரீதியாக தொடங்கி கொடுப்பவர்களை அடையாளம் காணும் வகையில், தேசிய இணைய குற்ற புகார் பதிவேற்ற தளமான என்.சி.ஆர்.பி (NCRP) மூலம் பெறப்பட்ட புகார்கள் மற்றும் நுண்ணறிவு தகவல்களின் அடிப்படையில் பல வங்கி கணக்குகள்முடக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வங்கி கணக்குகள், இணைய மோசடியில் ஏமாற்றப்பட்ட பணத்தைப் பெறவும், பின்னர் பல்வேறு வங்கி கணக்குகளுக்கு பணத்தை மாற்றவும் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்தால், அவற்றை முடக்குவதுடன்,விசாரணைக்கும் அழைக்கிறார்கள்.இதில் பெட்ரோல் பங்க் டீலர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    Advertisement

    இதுகுறித்து தமிழக பெட்ரோலியம் டீலர்கள் சங் தலைவர் முரளி கூறியதாவது: தமிழகத்தில், 7,000 பெட்ரோல் பங்க்குகள் செயல்படுகின்றன, இவற்றில் சராசரியாக தினமும், 40 சதவீதம், 'கிரெடிட், டெபிட் கார்டுகள், கூகுள் பே' உள்ளிட்ட, 'டிஜிட்டல்' முறையிலும், மீதி ரொக்க பணம் வாயிலாகவும் விற்பனை நடைபெற்று வருகிறது. டிஜிட்டல் முறையில் பணம் வசூலிக்கும்போது, வாடிக்கையாளர்களுக்கு அது எப்படி வந்தது என்ற விபரம், பெட்ரோல் பங்க் டீலர்களுக்கு தெரிய வாய்ப்பு கிடையாது.

    சட்ட விரோத பணப் பரிமாற்றங்களில் ஈடுபடும் நபர்களை, 'சைபர் கிரைம்' அதிகாரிகள் விசாரிக்கும்போது, டீலர்களையும் அழைத்து விசாரிக்கிறார்கள்.

    Advertisement

    இதனால் டீலர்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். சைபர் கிரைம் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை சுட்டிக்காட்டி, வங்கிகள், டீலர்களின் வங்கி கணக்குகளை முடக்குவதால், வியாபாரம் முடங்கிவிடுகிறது. டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்காக, டீலர்களை அலைக்கழிப்பதும், கணக்கு முடக்கத்தையும் சந்திக்க நேரிட்டால், அனைத்து பெட்ரோல் பங்க்குகளிலும் டிஜிட்டல் முறை பண வசூலை தற்காலிகமாக நிறுத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவோம். டீலர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் முன், குறிப்பிட்ட பரிவர்த்தனை தொடர்பான விபரங்களை எழுத்துப்பூர்வமாக வழங்கி, முறையான விசாரணை நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும். டிஜிட்டல் பண பரிவர்த்தனை பிரச்னைகள் குறித்து விசாரிக்கும்போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை, மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட வேண்டும்" இவ்வாறு அவர் கூறினார்.

    English Summary

    Cyber crime police have frozen the bank accounts of petrol dealers; a situation may arise where petrol bunks across Tamil Nadu are forced to stop collecting payments digitally.