பாஸ்போர்ட் விண்ணப்பிக்க போறீங்களா..இன்று முதல் கட்டணம் முதல் எல்லாமே மாறியது.. விவரம்

  • சென்னை: வெளிநாடுகளுக்கு செல்ல பயன்படுத்தப்படும் பாஸ்போர்ட் பெறுவதற்கான கட்டண உயர்வு ஜூலை 1ம் தேதியான இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. 36 பக்க பாஸ்போர்ட் விண்ணப்ப கட்டணம் ரூ.1,500-ல் இருந்து ரூ.2 ஆயிரத்து 500 ஆக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இதேபோல பாஸ்போர்ட்டுக்கான தட்கல் விண்ணப்ப கட்டணம் ரூ.3,500-ல் இருந்து ரூ.5 ஆயிரமாக கூடியுள்ளது. மைனர்களுக்கான (சிறாரான) 36 பக்க புத்தகம் (சாதாரண) ரூ. 1,000 இல் இருந்துரூ. 1,750 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. போலீஸ் சரிபார்ப்பு சான்றிதழ் (PCC) 500 இல் இருந்து 750 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    Advertisement

    பாஸ்போர்ட் (கடவுச்சீட்டு) என்பது குடியுரிமைக்கான சான்று அல்ல, அது ஒரு பயண ஆவணம் மட்டுமே என்று தெரிவித்த அடுத்த நாளே, மத்திய வெளியுறவு அமைச்சகம் அனைத்துப் பிரிவுகளுக்குமான பாஸ்போர்ட் கட்டணங்களை உயர்த்துவதாக கடந்த வாரம் அறிவித்தது. மத்திய அரசின் புதிய அறிவிப்பின் படி, புதிய பாஸ்போர்ட்டுக்கான கட்டணம் தற்போது ரூ.1,500-லிருந்து ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், தட்கல் பாஸ்போர்ட்டுகளின் கட்டணம் ரூ.6,000 வரை உயர்ந்துள்ளது. இந்த புதிய விதிகள் ஜூலை 1ம் தேதியான இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. பாஸ்போர்ட் விதிகள், 1980-ல் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின் மூலம் இந்த பாஸ்போர்ட் கட்டண அமைப்பு மாற்றி அமைக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது.

    Advertisement

    ஜூன் 20 தேதி அன்று வெளியுறவு அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, 36 பக்கங்களைக் கொண்ட சாதாரண புதிய பாஸ்போர்ட் அல்லது மறுவழங்கல் (reissue) பாஸ்போர்ட்டுக்கான சாதாரண கட்டணம் ரூ.2,500 ஆக உயர்த்தப்படுள்ளது, அதே சமயம் இதே பிரிவில் தட்கல் முறையில் பெற ரூ.5,000 கட்டணமாக உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று வரை 36 பக்கங்களைக் கொண்ட சாதாரண புதிய பாஸ்போர்ட் அல்லது மறுவழங்கல் பாஸ்போர்ட்டுக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.1,500 ஆகவும், தட்கல் முறையில் இதே பிரிவுக்கு ரூ.3,500 ஆகவும் இருந்து வந்தது. தற்போது முறையே 1000, 1500 ரூபாய் அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளத.

    Advertisement

    இதேபோல், 60 பக்கங்களைக் கொண்ட சாதாரண புதிய பாஸ்போர்ட் அல்லது மறுவழங்கல் பாஸ்போர்ட்டுக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.2,000-லிருந்து ரூ.3,500 ஆக உயர்த்தியிருக்கிறது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம். மேலும், தட்கல் முறையில் இதே பிரிவிற்கான திருத்தப்பட்ட கட்டணம் ரூ.4,000-லிருந்து ரூ.6,000 ஆக இருக்கும் என்றும் அறிவித்துள்ளது

    மத்திய அரசு தனது அறிவிப்பில் ஒரு புதிய அட்டவணையையும் வெளியிட்டுள்ளது, இது "பாஸ்போர்ட் விதிகள், 1980-ன் அட்டவணை IV"-க்கு மாற்றாக அமையும். இந்த திருத்தப்பட்ட அட்டவணை இரண்டு துணைப் பிரிவுகளைக் குறிப்பிடுகிறது . 15 முதல் 18 வயதுடையவர்கள் 10 வருட பாஸ்போர்ட் வேண்டி "பெரியவர் பிரிவின் கீழ்" விண்ணப்பித்தால், அவர்கள் முதல் பிரிவில் சேர்க்கப்படுவார்கள். 5 வருட பாஸ்போர்ட் போதும் என விண்ணப்பித்தால், அவர்கள் இரண்டாவது பிரிவான "மைனர் பிரிவில்" சேர்க்கப்படுவார்கள்.

    Advertisement

    அதாவது 15 முதல் 18 வயதுக்குட்பட்ட பதின்பருவத்தினருக்கு அரசு ஒரு சலுகை வழங்குவதாக அறிவித்துளளது. அவர்கள் இரண்டு வழிகளில் விண்ணப்பிக்க முடியும். மைன பிரிவின் கீழ் விண்ணப்பிக்கலாம். அவர்கள் தங்களைச் சிறுவர்களாகக் கருதி விண்ணப்பித்தால், அவர்களுக்கு 5 ஆண்டுகள் மட்டுமே செல்லுபடியாகும் பாஸ்போர்ட் கிடைக்கும். கட்டணமும் குறைவாகவே இருக்கும்.

    அவர்கள் பெரியவர் பிரிவின் கீழும் விண்ணப்பிக்காம். அப்படி அவர்கள் தங்களை பெரியவர்களாக கருதி விண்ணப்பித்தால், அவர்களுக்குப் பெரியவர்களைப் போலவே 10 ஆண்டுகள் செல்லுபடியாகும் பாஸ்போர்ட் கிடைக்கும். ஆனால், கட்டணமும் பெரியவர்களுக்கான புதிய கட்டண முறைப்படியே வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மைனர்களுக்கான (சிறாரான) 36 பக்க புத்தகம் (சாதாரண) ரூ. 1,000 இல் இருந்துரூ. 1,750 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. போலீஸ் சரிபார்ப்பு சான்றிதழ் (PCC) 500 இல் இருந்து 750 ஆக உயர்த்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    Advertisement

    இந்தியாவில் கடைசியாக கடந்த 2002ஆம் ஆண்டில்தான் பாஸ்போர்ட் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டது. அதன் பிறகு, கடந்த 24 ஆண்டுகளில் அச்சிடும் செலவு, காகிதத்தின் விலை மற்றும் நிர்வாகச் செலவுகள் பல மடங்கு உயர்ந்துள்ளதால், இந்த கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது என்று அரசு கூறுகிறது. தற்போது மத்திய அரசு சாதாரண பாஸ்போர்ட்டுகளுக்குப் பதிலாக, மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய 'இ-பாஸ்போர்ட்'டை வழங்குகிறது, இதில் பயனர்களின் விவரங்கள் அடங்கிய ஒரு சிறிய மின்னணு சிப் பொருத்தப்பட்டிருக்கும். சர்வதேசத் தரத்திலான இந்த சிப்பிற்கு செலவுகள் அதிகம் என்பதால் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

    Advertisement

    பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் செயல்முறையை எளிதாக்க நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான 'பாஸ்போர்ட் சேவா கேந்திராக்கள்' மற்றும் 'தபால் நிலைய பாஸ்போர்ட் சேவா கேந்திராக்கள்' மத்திய அரசால் அமைக்கப்பட்டிருக்கிறது. இவற்றைப் பராமரிப்பதற்கும், மென்பொருள்களை மேம்படுத்துவதற்கும், டிஜிட்டல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பைத் தடையின்றி இயக்குவதற்கும் ஆகும் கூடுதல் செலவுகளை ஈடுகட்ட பாஸ்போர்ட் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

    English Summary

    Are you planning to apply for a passport? Everything, starting with the fee, has changed as of today—here are the full details.