முதல்வர் விஜய்க்கு ஆசை காட்டி அவர் பதவியை பிடிக்க சதி? ‘ஷாக்’ கொடுக்கும் முன்னாள் சபாநாயகர் அப்பாவு

  • சென்னை: "தேசிய அரசியல் ஆசை காட்டி முதலமைச்சர் பதவியில் இருந்து உங்களை நீக்கி அந்த இடத்தை பிடிக்க உங்களோடு இருக்கும் குள்ளநரி கும்பல் போடும் திட்டத்தை அறிவீர்களா சி.எம் சார்?" என முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார்.

    Advertisement

    அண்மைக்காலமாகவே, தமிழக முதல்வர் விஜய்யை பிரதமர் ஆக்குவோம் என தவெகவின் முன்னணி தலைவர்கள் பேசி வருகின்றனர். சட்டமன்றத்திலும், பொதுக்கூட்டங்களிலும் தவெக தலைவர்கள் பலரும், விஜய்யின் செல்வாக்கு வட மாநிலங்களிலும் உயர்ந்திருப்பதாகவும், அவர் பிரதமர் பதவியை எட்டுவார் என்றும் பேசி வருகின்றனர்.

    Advertisement

    இந்நிலையில், இதுதொடர்பாக அப்பாவு தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ""குறை பிரசவம்" போல் தேர்தலில் வெற்றி பெற்ற தவெக-வை இன்குபேட்டரில் வைத்து ஆளுநர் காப்பாற்றியதால் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லிம் லீக் மற்றும் இடதுசாரி கட்சிகளின் துணையோடு ஆட்சி அமைத்த விஜய், தற்போது ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தம் கொண்ட பாஜக ஆட்சியை தமிழகத்தில் நடத்தி வருவது நம்பிக்கை துரோகம் இல்லையா சி.எம். சார்?

    இந்தியாவின் அடுத்த பிரதமர் பதவிக்கு "ராகுல் காந்திக்கு தகுதி இல்லை" என்பது போலவும், "அடுத்த பிரதமர் விஜய் தான்" என்றும் சட்டப்பேரவையில் ஒரு அமைச்சர் பேசிய போது காங்கிரஸ் எம்எல்ஏ-க்களும் வெட்கமின்றி மேஜையைத் தட்டி ரசிக்கும் கேவலமான செயலில் ஈடுபட்டதுதான் வேடிக்கை. தேசிய அரசியல் ஆசை காட்டி உங்களை முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்கி அந்த இடத்தை பிடிக்க உங்களோடு இருக்கும் குள்ளநரி கும்பலின் திட்டத்தை அறிவீர்களா சி.எம்.சார்?

    Advertisement

    "அரசன் ஒரு முள் செடியை நட்டால் அமைச்சர்கள் முள் காட்டையே உருவாக்கி விடுவார்கள்" என்ற வடஇந்திய பழமொழிக்கு ஏற்ப பொய்களை உண்மை போல் ரீல்ஸ்களாக்கி நீங்கள் தொடங்கி வைத்த செயல், தற்போது அமைச்சர்கள் முதல் தவெக அடிமட்ட தொண்டர்கள் வரை பரவி எங்கும் ரீல்ஸ் எதிலும் ரீல்ஸ் என்ற நிலை உருவாகி சட்டமன்றத்தில் சபாநாயகரால் நீக்கப்பட்ட வீடியோக்களைக் கூட Fake id மூலம் ரீல்ஸ் விடும் கேவலமான செயலை செய்துவருகிரீர்களே சி.எம். சார்?

    தவெக ஆட்சியில் தமிழக மக்களுக்கு தனியார் மருத்துவமனையில் நோயாளி இறந்தால் மருத்துவ கட்டணம் செலுத்த தேவையில்லை என்றும், பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுவோருக்கு உடனடி மரண தண்டனை என்றும், கோவில் உண்டியல் வருமானத்தில் கல்விக் கூடம் கட்டி மக்கள் பயனடைந்து வருவது போன்றும் பொய் பிரச்சாரங்களை வட மாநிலங்களில், பல நூறு கோடி ரூபாய் செலவில் இந்தியில் ரீல்ஸ் தயாரித்து மக்களிடையே பிரச்சாரம் செய்து குழப்பத்தை ஏற்படுத்தி வரும் தவெகவின் நரித்தனத்தை இந்தியாவே பார்த்து சிரிப்பதுடன், உங்கள் fake id மூலம் பொய் Reels பரப்புவதை நீதிமன்றம் சென்று தண்டனை வாங்கித்தரவும் மக்கள் தயாராகி வருகின்றனர் சி.எம் சார்!" எனத் தெரிவித்துள்ளார்.

    English Summary

    “CM Sir, are you aware of the plot being hatched by the pack of jackals around you to oust you from the Chief Minister’s post and seize that position by dangling the prospect of national politics before you?” asked former Speaker Appavu, addressing Chief Minister Vijay.