மெட்ரோவில் இவங்க எல்லாம் கூட இருந்தா நல்லா இருக்கும்.. விஜய் வைத்த கோரிக்கை.. நோ சொன்ன மோடி!

  • சென்னை: சென்னையில் மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்தல் உட்பட பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னைக்கு வந்த பிரதமர் மோடியை வரவேற்றார் முதல்வர் விஜய். இதனையடுத்து மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைக்க போரூர் சென்றனர்.

    Advertisement

    இருவரும் இணைந்து ரயில் சேவையை பச்சைக்கொடி காட்டி தொடங்கி வைத்ததுடன், பூந்தமல்லி வரை இருவரும் அருகருகே அமர்ந்து பயணத்தினர். பிரதமருக்கு கொடுக்கப் பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்டு பிரமித்திருக்கிறார் விஜய். பிரதமருடன் விஜய் பயணிக்கும் போது அவருடன் அமைச்சர்கள் சிலரும் இருக்க வேண்டும் என விரும்பியுள்ளார் விஜய்.

    Advertisement

    விஜய் வைத்த கோரிக்கை

    ஆனால், அதற்கு டெல்லி அனுமதிக் கொடுக்கவில்லை. இத்தனைக்கும் மத்திய ரயில்வே அமைச்சரை வைத்து தொடக்க விழா நடத்தலாம் என்று தான் துவக்கத்தில் டெல்லி முடிவு செய்திருந்ததாம். ஆனால், பிரதமர் மோடி வரவேண்டும் என்று விஜய் விரும்பியதாலே மோடியின் சென்னை பயணம் திட்டமிடப்பட்டது என்றும் அதிகாரிகள் தரப்பில் ஒரு சீக்ரெட் தகவல் கசிந்தபடி இருக்கிறது.

    நோ சொன்ன மோடி!

    போரூர் நிகழ்ச்சியை முடித்துவிட்டு, சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிகளுக்கு செல்ல மோடியும் விஜய்யும் புறப்பட்டனர். ரயில்வே ஸ்டேசனில் இருந்து முதலில் வெளியே வந்த விஜய், பிரதமர் மோடியின் காரில் ஏற முயற்சித்த நிலையில், அப்போது பிரதமரின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் ஓடோடி வந்து, உங்கள் கார் பின் வரிசையில் இருக்கிறது. அதில் தான் நீங்கள் வர வேண்டும். இதில் உங்களுக்கு அனுமதி இல்லை என சொல்ல, சட்டென்று புரிந்து கொண்ட விஜய், தனது காருக்குச் சென்றார். இதனை பார்த்த அதிகாரிகளுக்கும் ஒரு மாதிரியாகி விட்டது.

    Advertisement

    கருப்பு நிறமும் கலந்த ஒரு சட்டை

    சென்னை ஏற்போர்ட்டில் மோடியை வரவேற்ற போதும் சரி, ஐ.ஐ.டி. வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போதும் சரி, அடர் ப்ளூ நிறமும், கருப்பு நிறமும் கலந்த ஒரு சட்டையை அணிந்திருந்தார் முதல்வர் விஜய். பார்ப்பதற்கு கருப்பு சட்டை அணிந்திருப்பது போல தோன்றும். பாஜகவுடன் மறைமுக டீலிங் வைத்திருப்பதாக விஜய்க்கு எதிராக திமுக அரசியல் செய்து வருவதை உடைக்க, மோடிக்கு எதிர்ப்பு காட்டும் வகையில் எங்கள் தலைவர் கருப்பு சட்டை அணிந்திருக்கிறார்.

    ஆந்திராவுக்கு நாளை செல்கிறார் முதல்வர் விஜய்! சந்திரபாபு நாயுடு + பவன் கல்யாணுடன் சந்திப்பு?
    Advertisement

    விஜய் தவிர்த் திருக்க வேண்டும்

    இந்த துணிச்சல் யாருக்கு வரும்? என்று காட்டுவதற்காகவே ஆலோசகர்கள் சொன்ன யோசனையை ஏற்று பார்ப்பதற்கு கருப்பு நிறம் போல தோன்றும் அடர் ப்ளு நிற சட்டையை விஜய் அணிந்து மோடியை வரவேற்றார் என்று தவெக தரப்பில் சொல்லப்படுகிறது. இதனை உணர்ந்துள்ள பாஜக தலைவர்கள், பிரதமரை வரவேற்க அந்த நிறத்தில் சட்டை அணிந்து வந்ததை விஜய் தவிர்த் திருக்க வேண்டும். திமுகவை சீண்ட எங்கள் பிரதமர் தான் கிடைத்தாரா? லோக்கலாக அரசியல் செய்வதை இனியாவது விஜய் நிறுத்திக்கொள்ள வேண்டும். பிரதமர் பெருந்தன்மையானவர். இல்லை எனில் இந்த நிறத்தில் சட்டை அணிந்து வந்ததை கவனித்த பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகளே பிரதமரை வரவேற்க விஜய்யை அனுமதித்திருக்க மாட்டார்கள் என்று கோபம் காட்டுகிறார்கள் பாஜகவினர்.

    Advertisement

    - சிறப்பு நிருபர் எழில்

    English Summary

    PM Modi and CM Vijay Chennai Metro Launch: Protocol Alert, Black Shirt Buzz and Inside Details Revealed