சென்னை: சென்னை பூந்தமல்லி முதல் வடபழனி வரையிலான மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடியும் - தமிழக முதல்வர் விஜய்யும் சேர்ந்து தொடங்கி வைத்த நிலையில், போரூர் ரயில் நிலையத்தில் இருந்து காரில் சென்று சென்னை ஐஐடி வளாகத்தில் மூளை ஆராய்ச்சி மையத்தை திறந்து வைத்தனர். இதற்காக போரூர் ரயில் நிலையத்தில் இருந்து காரில் செல்லும் போது முதல்வர் விஜய் தவறுதலாக வேறு காரில் ஏறினார். உடனடியாக அதிகாரிகள் அலர்ட் செய்ததையடுத்து தனது காரில் ஏறினார் விஜய்.
சென்னை மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் பயணிகளின் வசதிகளை கருத்தில் கொண்டு மெட்ரோ ரயில் நிர்வாகம் மெட்ரோ வழித்தடத்தை விரிவுப்படுத்தி வருகிறது. அந்த வகையில், சென்னை மெட்ரோ ரயில் 2 ஆம் கட்டத் திட்டத்தின் 4-வது வழித்தடத்தின் ஒரு பகுதியாக சென்னை பூந்தமல்லி முதல் வடபழனி வரை மெட்ரோ ரயில் சேவை பணிகள் முடிந்துள்ளன.
இந்த மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடியும் தமிழக முதல்வர் விஜய்யும் ஒன்றாக கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். பின்னர் இருவரும் டிக்கெட் கவுண்ட்டரில் டிக்கெட் எடுத்தனர். பிறகு மோடியும் விஜய்யும் ஒன்றாக எஸ்கலேட்டரில் வந்தனர். தொடர்ந்து தாங்கள் தொடங்கி வைத்த ரயிலில் மோடியும், விஜய்யும் ஒன்றாக பயணம் செய்தனர். அப்போது அதிகாரிகள் இந்த மெட்ரோ ரயில் சேவை குறித்து மோடி, விஜய்க்கு எடுத்து கூறினர். இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ள சேவையானது மாலை 4 மணி முதல் பொது மக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது. இன்று மாலை 4 மணியில் இருந்து இந்த மெட்ரோ ரயிலில் பயணிகள் பயணம் செய்யலாம். தமிழக முதல்வராக விஜய் பதவியேற்ற பிறகு, முதல் முறையாக பிரதமர் மோடியுடன் இணைந்து பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்த பிறகு பிரதமர் மோடி மற்றும் முதல்வர் விஜய் சென்னை ஐஐடி வளாகத்தில் மூளை ஆராய்ச்சி மையத்தை தொடங்கி வைத்தனர். இதற்காக போரூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து கார் மூலமாக சென்னை ஐஐடி வளாகத்துக்கு காரில் சென்றனர். காரில் ஏறும் போது தவறுதலாக முதல்வர் விஜய் வேறு காரில் ஏறினார். உடனே அதிகாரிகள் விஜய்க்கு அலர்ட் செய்தனர். இதையடுத்து முதல்வர் விஜய் அந்த காரில் இருந்து இறங்கி தனது காரில் ஏறினார். போரூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து சென்னை ஐஐடி வளாகம் சென்று அங்கு மூளை ஆராய்ச்சி மையத்தை திறந்து வைத்தனர்.விஜய் மோடி ஒன்றாக பயணம்
ராகுலுடன் கஃபேயில் காஃபி.. மோடியுடன் மெட்ரோ ரைட்.. மதில் மேல் பூனை போல.. பயணிக்கும் விஜய்!
கார் மாறி ஏறிய விஜய்
போரூர் மெட்ரோ.. காசு தராத மோடி! இன்று விஜய்யுடன் போஸ் தருகிறார்! விட்டு விளாசிய திமுக ராஜீவ் காந்தி!