கற்பூர நாயகியே கனகவல்லி.. தமிழ் பாடலுடன் வாழ்த்து சொன்ன பிரதமர் மோடி! ட்ரெண்டாகும் எல்ஆர் ஈஸ்வரி!

  • சென்னை: நவராத்திரி விழா இன்று தொடங்கும் நிலையில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. குறிப்பாக கற்பூர நாயகியே கனகவல்லி என்ற தமிழ் பாடலை குறிப்பிட்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்திருக்கும் நிலையில், எல்ஆர் ஈஸ்வரி தேசிய அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறார். பிரதமர் மோடி குறிப்பிட்ட பாடலும் யூட்யூபில் அதிக பேரால் பார்வையிடப்பட்டு வருகிறது.

    Advertisement

    பல்வேறு அவதாரங்கள் எடுத்து தீமைகளை அழித்து நன்மையை தலைதூங்க செய்வது சக்தி வடிவமாக விளங்குகிறார் துர்க்கை. மேலும் லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவிகளை கொண்டாடும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில் நவராத்திரி விழா உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.

    Advertisement

    நவராத்திரி விழாவில் கடைசி நாளில் ஆயுத பூஜை கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு இன்று (அக்டோபர் 11ஆம் தேதி) நவராத்திரி விழா தொடங்குகிறது. கோவில்களில் ஒவ்வொரு நாளும் அம்மன் பல்வேறு அலங்காரங்களில் தோன்றி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

    மேலும் வீடுகளில் படிகள் அமைத்து நவராத்திரி கொலு அமைப்பது வழக்கம். அந்த வகையில் இன்று நவராத்திரி விழா தொடங்கி இருக்கும் நிலையில் இந்தியா முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்த நிலையில் நவராத்திரி விழா தொடங்கும் இன்றைய நாளில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து செய்தி ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

    Advertisement

    அதில்," நவராத்திரி புனித விழா தொடங்கும் இந்த நன்னாளில், அமைதியின் அதிதேவதையான அன்னை சைலபுத்ரியின் திருப்பாதங்களில் கோடான கோடி வணக்கங்களைச் செலுத்துகிறேன். அன்னையின் தெய்வீக அருள் அனைவரது உள்ளங்களிலும் பொறுமை மற்றும் தன்னம்பிக்கை எனும் தீபத்தை ஏற்றட்டும். நாட்டின் மக்கள் அனைவருக்கும் அன்னையின் ஆசீர்வாதம் என்றும் கிடைக்கட்டும் என்று மனதாரப் பிரார்த்திக்கிறேன்." எனப் பதிவிட்டுள்ளார்.

    2027க்குள் மோடி பதவி ஓவர்? அமெரிக்க மோதலுக்கு இடையே பாலிமார்க்கெட்டில் புதிய பந்தயம்! பின்னணி என்ன?

    இதில் குறிப்பிடத் தகுந்த விஷயம் பிரதமர் நரேந்திர மோடி பிரபலமான தமிழ் பக்தி பாடலான கற்பூர நாயகியே கனகவல்லி என்ற பாடலை இணைத்திருப்பது தான். பிரபல பக்தி பாடகி எல்.ஆர்.ஈஸ்வரியின் குறிப்பிடத்தகுந்த பாடல்களில் ஒன்று கற்பூர நாயகியே கனகவல்லி பாடல். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக அம்மன் கோவில்களில் கோலச்சி வரும் இந்த பாடலை அவிநாசி மணி எழுதி இருந்தார்.

    Advertisement

    சோமு காஜா இசையில் வெளியான இந்த பாடல் இன்றும் பலரது விருப்பத்திற்குரிய அம்மன் பாடல் ஆக இருக்கிறது. தற்போது பிரதமர் நரேந்திர மோடி இந்த பாடலை குறிப்பிட்டு இருக்கும் நிலையில் தமிழ் தெரியாத பலரும் இந்த பாடலை தற்போது கேட்டு வருகின்றனர். நரேந்திர மோடி பதிவிட்ட பிறகுதான் இந்த பாடலை கேட்கிறேன் என பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றார். மேலும் திடீரென யூடியூபிலும் இந்த பாடல் ட்ரண்ட் ஆகி வருகிறது.

    English Summary

    PM Narendra Modi shares L.R. Eswari’s iconic Tamil devotional song Karpoora Nayagiye Kanakavalli as Navratri begins, sparking renewed online interest.