சென்னை: பூந்தமல்லி பைபாஸ் முதல் வடபழனி மெட்ரோ வரை நாளை முதல் ரயில்கள் ஓடுகிறது. முதல் நாளான அக்டோபர் 11 அன்று மாலை 4:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை மட்டும் இயங்கும், அக்டோபர் 12 முதல் தினமும் காலை 7:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை இருமார்க்கங்களிலும் இயக்கப்படும், திங்கள் முதல் சனிக்கிழமை வரை பீக் அவர்ஸில் 10 நிமிடங்களுக்கு ஒரு முறை ரயில் புறப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் நாளை தொடங்கி வைக்கப்படுகிறது. இந்த தொடக்க விழாவிற்கு பிரதமர் மோடி சென்னை வர உள்ள நிலையில், போரூரில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பிரதமர் மோடி, பூந்தமல்லி to வடபழனி மெட்ரோ சேவை தொடங்கி வைக்கிறார். மெட்ரோ ரயிலில்
பிரதமர் மோடி, முதல்வர் விஜய் பயணிக்க உள்ளனர்
சென்னை மெட்ரோ வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-II, வழித்தடம் 4-ல் கட்டம் 1A பயணிகள் சேவை சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் கட்டம்-II வழித்தடம் 4-ல், பூவிருந்தவல்லி புறவழிச்சாலை மெட்ரோ இரயில் நிலையம் முதல் வடபழனி மெட்ரோ இரயில் நிலையம் வரை 15 கி.மீ. நீளத்திற்கு 11 உயர்மட்ட மெட்ரோ இரயில் நிலையங்களில் நாளை அக்டோபர் 11, 2026 முதல் மெட்ரோ இரயில் பயணிகள் சேவை தொடங்கப்படுகிறது என்பதை சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது. பூவிருந்தவல்லி புறவழிச்சாலை, பூவிருந்தவல்லி பேருந்து நிலையம், பூவிருந்தவல்லி அரசு மருத்துவமனை, கரையான் சாவடி, குமணன் சாவடி, காட்டுப்பாக்கம், அய்யப்பன்தாங்கல், தெள்ளியார் அகரம், போரூர் புறவழிச்சாலை, போரூர் சந்திப்பு மற்றும் வடபழனி ஆகிய 11 மெட்ரோ இரயில் நிலையங்கள் இந்த வழித்தடத்தில் உள்ளன. தொடக்க நாளான நாளை மட்டும் ( 11 அக்டோபர் 2026) , மெட்ரோ இரயில் சேவைகள் மாலை 4 மணி முதல் தொடங்கி, இரு திசைகளிலும் இரவு 9 மணி வரை இயக்கப்படும். அதனைத் தொடர்ந்து, மறுநாளான அக்டோபர் 12 முதல், இந்த 15 கி.மீ. நீளமுள்ள வழித்தடத்தில் இரு திசைகளிலும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மெட்ரோ இரயில் சேவைகள் இயக்கப்படும். தினமும் காலை 7:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை இருமார்க்கங்களிலும் இயக்கப்படும். மேலும், இரு முனையங்களிலிருந்தும் அன்றைய தினத்தின் கடைசி ரயில் இரவு 9:00 மணிக்குக் கிளம்பும். ரயில் கால அட்டவணையின்படி திங்கள் முதல் சனிக்கிழமை வரை உச்ச நேரங்களான (Peak hours) காலை 8:00 - 11:00 மற்றும் மாலை 5:00 - 8:00 மணி வரை 10 நிமிட இடைவெளியிலும், மற்ற நேரங்களில் (காலை 7:00 - 8:00, மதியம் 11:00 - மாலை 5:00, இரவு 8:00 - 9:00) 15 நிமிட இடைவெளியிலும் ரயில்கள் இயக்கப்படும். ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் அரசு விடுமுறை நாட்களில் உச்ச நேரங்கள் இன்றி காலை 7:00 முதல் இரவு 9:00 மணி வரை நாள் முழுவதும் 15 நிமிட இடைவெளியில் ரயில்கள் சேவை வழங்கும். பயணிகள் இந்த வசதியைப் பயன்படுத்தி தங்களது பயணங்களைத் திட்டமிட்டுக் கொள்ளுமாறு சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.ஒரே நாளில் வந்த சிக்கல்.. கோயம்பேடு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் முதல்வர் விஜய்க்கு அவசரமாக கடிதம்
பூந்தமல்லி மெட்ரோ.. வடபழனி மெட்ரோவின் ஒரு நுழைவு வாயில் திறப்பு விழாவுக்கு இன்னும் ரெடியாகவில்லை