அக்டோபர் 11ல் தமிழகம் வரும் பிரதமர் மோடி.. இளையராஜா இசை ஆராய்ச்சி மையத்தை திறந்து வைக்கிறார்!

  • செனை: பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி வரும் அக்டோபர் 11ஆம் தேதி தமிழகம் வருகிறார். பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் திட்டம் தொடக்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இந்த நிலையில் பிரபல இசையமைப்பாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜாவின் இசை ஆராய்ச்சி மையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பார் என தகவல் வெளியாகி உள்ளது.

    Advertisement

    2021 தமிழக சட்டசபை தேர்தலுக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடி முதன் முறையாக தமிழகம் வருகிறார். சென்னையில் பல்வேறு நிகழ்வுகளில் அவர் கலந்து கொள்ள இருக்கிறார். அக்டோபர் 11ஆம் தேதி டெல்லியில் இருந்து விமான மூலம் சென்னைக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடி ஹெலிகாப்டர் மூலம் காலை 11:30 மணிக்கு பூந்தமல்லி செல்கிறார்.

    Advertisement

    அங்கு சென்னை பூந்தமல்லி மெட்ரோ ரயில் நிலைய ரயில் சேவையை தொடங்கி வைக்கும் பிரதமர் போரூர் வரை பயணம் செய்கிறார். தொடர்ந்து சென்னை ஐஐடி நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் நரேந்திர கலந்து கொள்கிறார். தொடர்ந்து ஜலகண்டேஸ்வரர் கோவில் சுவாமி தரிசனம் செய்ய இருக்கிறார்.

    இதற்கிடையே பிரதமர் பிரதமர் நரேந்திர மோடியின் பயணத்தில் முக்கிய நிகழ்வு ஒன்றும் நடைபெற இருக்கிறது. அதாவது கடந்த 2024 ஆம் ஆண்டு இசைஞானி இளையராஜா இசை ஆராய்ச்சி மையம் அமைக்க, சென்னை ஐஐடி ஆராய்ச்சி மையம் சார்பில் அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்காக இளையராஜாவின் இசை நிறுவனத்துடன் ஒப்பந்தமும் போடப்பட்டிருந்தது.

    Advertisement

    தற்போது அந்த பணிகள் நிறைவடைந்திருக்கும் நிலையில் இளையராஜாவின் இசை ஆராய்ச்சி மையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். நிகழ்வு முடியும் அன்றே (அக்டோபர் 11ஆம் தேதி) பிரதமர் டெல்லி திரும்புவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    English Summary

    Prime Minister Narendra Modi will visit Tamil Nadu on October 11 and reportedly inaugurate Ilaiyaraaja’s music research centre in Chennai.