விஜய் தந்த ஐடியா.. பாமக அன்புமணி கையில் எடுக்கும் ராட்சச அஸ்திரம்.. இனி ஆட்டம் மாறுது.. பின்னணி

  • சென்னை: பாமகவின் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகளின் கூட்டம் சமீபத்தில் அன்புமணியின் தலைமையில் நடந்தது. 18 தொகுதிகளில் போட்டியிட்டு 4 தொகுதிகளைத்தான் ஜெயித்திருக்கிறோம். 14 தொகுதிகளில் ஏன் தோல்வி ? என்பது குறித்து நிர்வாகிகளின் கருத்துக்களைக் கேட்டறிந்தார்.

    Advertisement

    அப்போது விஜய்யின் தாக்கம் மட்டுமே காரணம் என பலரும் விவரித்திருக்கிறார்கள். மேலும், தேர்தலுக்கு முன்பாக தவெகவுடன் கூட்டணி வைக்க நமக்கு அழைப்பு வந்த போது அதனை நாம் பயன்படுத்திக் கொள்ள தவறி விட்டோம் என்றும் பலரின் கருத்துக்கள் இருந்துள்ளன.

    Advertisement

    தவெகவுடன் கூட்டணி வைக்க நமக்கு அழைப்பு

    இதனை அன்புமணி ஏற்றுக்கொண்டதுடன், பாஜக-அதிமுகவின் விருப்பம் குறித்தும், ராமதாஸ் எழுப்பிய பிரச்சனைகள் குறித்தும் விவரித்து, தவெகவிடம் எங்கு நழுவினோம் என்பது பற்றியெல்லாம் விளக்கியிருக்கிறார் அன்புமணி. இதனையடுத்து, பாமகவின் அடுத்தக் கட்ட அரசியல் நகர்வுகள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

    அப்போது, பாஜகவுடன் தொடர்ச்சியாக நாம் கூட்டணியில் இருந்து வருகிறோம். அவர்களின் விருப்பத்துக்கு மாறாக நாம் நம்முடைய அரசியல் முடிவுகளை எடுத்ததில்லை. ஆனாலும், அதற்கான மரியாதையை பாஜக தலைவர்கள் தரவில்லை. பாமகவுக்கு அமைச்சரவை பதவி தந்திருக்க வேண்டும்.

    பாஜக-அதிமுகவின் விருப்பம்

    இது குறித்து நாம் வைத்த கோரிக்கைகளையும் அவர்கள் நிராகரித்தே வந்துள்ளனர். அதனால், தற்போது, மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படவிருப்பதாக தகவல்கள் வருகின்றன. இந்த முறை தங்களுக்கு அமைச்சர் பதவி வேண்டும் என்பதை அவர்களிடம் அழுத்தமாகச் சொல்ல வேண்டும். நீங்கள் (அன்புமணி) மத்திய அமைச்சராக வேண்டும். அமைச்சர் ஆனால் தான் பாமகவை எழுச்சியாக உருவாக்க முடியும். இல்லை எனில் சோர்ந்து போவார்கள்.

    Advertisement

    தவெக ஆட்சி

    திமுக மற்றும் தவெக ஆகிய இரு கட்சிகளையும் ஒரு சேர கடுமையாக எதிர்க்க வேண்டுமானால் நீங்கள் மத்திய அமைச்சராக வேண்டும். இல்லை எனில், தவெக ஆட்சி ஒருவேளை 5 ஆண்டு காலமும் நீடித்தி விடும் என்கிற சூழல் உருவாகிவிட்டால், வட தமிழகத்தில் நம் கட்சியில் சேதாரத்தை உருவாக்க விஜய்யும் தவெகவினரும் பகீரத முயற்சி எடுப்பார்கள்.

    அதனால் உடனடியாக, ஒரு ஆட்சி அதிகாரம் நமக்கு வேண்டும். தலைவர் (அன்புமணி) அவர்கள் இதில் சீரியஸ் காட்ட வேண்டும்'' என்று பாமக மாநில-மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் ஒருமித்த குரலில் கருத்துக்களை சொல்லியுள்ளனர். இதனையடுத்து, இந்த கோரிக்கையை பிரதமர் மோடியை சந்தித்து வலியுறுத்த அன்புமணி திட்டமிட்டுள்ளாராம்.

    Advertisement

    - சிறப்பு நிருபர் எழில்

    English Summary

    PMK Anbumani Ramadoss also want power sharing in future alliances: What will happen?