3 மாதத்திற்கு முன் அவர்களுக்காக நின்ற உதயநிதி ஸ்டாலின்.. கைதை கூட இன்று கண்டிக்கலையே!

  • சென்னை: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு பாமக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆனால் 3 மாதங்களுக்கு முன் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்ட விசிக, சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய கட்சிகள் கண்டிக்காமல் அமைதி காப்பது திமுக தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

    Advertisement

    தஞ்சையில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதல்வர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா குறித்து அவதூறாக பேசியதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதற்கு தவெக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கடுமையான கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து தவெக மகளிர் அணி நிர்வாகி சார்பாக தஞ்சை காவல் நிலையத்தில் உதயநிதி ஸ்டாலின் மீது புகார் அளிக்கப்பட்டது.

    Advertisement

    தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலின் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதுமட்டுமல்லாமல் காலையிலேயே நீலாங்கரையில் உள்ள உதயநிதி ஸ்டாலின் வீட்டிற்கு முன் போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டனர். போலீசார் குவிக்கப்பட்ட தகவல் கிடைத்த உடனேயே முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அங்கு வந்துவிட்டார். தொடர்ந்து பல்வேறு நிர்வாகிகளும் குவிந்தனர்.

    இருப்பினும் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார். நாளை சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் கூடவிருக்கும் சூழலில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டு தஞ்சாவூர் அழைத்து செல்லப்பட்டு வருகிறார். இதனிடையே அவரின் கைதை கண்டித்து திமுகவினர் பல்வேறு பகுதிகளிலும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Advertisement

    இந்த நிலையில் முதலமைச்சர் விஜய் குறித்து தெரிவித்த சில கருத்துகளுக்காக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை கைது செய்யப்பட்டிருக்கிறார். உதயநிதி ஸ்டாலினின் பேச்சும், கைது நடவடிக்கையும் கண்டிக்கத்தக்கவை. ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் ஆக்கப்பூர்வ அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

    உதயநிதி ஸ்டாலினின் கைதை பாமக கூட கண்டித்திருக்கும் சூழலில், விசிக, சிபிஎம் மற்றும் சிபிஐ ஆகிய 3 கட்சிகளும் அமைதி காத்து நிற்கின்றன. 3 மாதங்களுக்கு முன் சட்டசபைத் தேர்தலின் போது கூட்டணி கட்சிகளின் வெற்றிக்காக உதயநிதி ஸ்டாலின் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டார். ஆனால் தவெக உடன் அதிகாரத்தில் இணைந்த பின், 3 கட்சிகளும் உதயநிதி ஸ்டாலின் கைதை கூட கண்டிக்கவில்லை.

    Advertisement

    தமிழ்நாடு முழுவதும் நடக்கும் போராட்டங்களில் திமுக கொடிகள் மட்டுமே இருக்கிறது. வேறு கூட்டணி கட்சியைச் சேர்ந்த எந்த தொண்டர்களும், நிர்வாகிகளும் பங்கேற்கவில்லை. இதனால் திமுகவினர் மத்தியில் இவர்களுக்காகவா 3 மாதங்களுக்கு முன் தேர்தலில் உழைத்து வாக்களித்தோம் என்று அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    English Summary

    PMK Condemns Udhayanidhi Stalin's Arrest; VCK, CPI, and CPM Remain Silent