அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறேன்.. இனி அன்புமணி தான் எல்லாம்.. அரசியல் துறவறம்! ராமதாஸ் அறிவிப்பு

  • சென்னை: அரசியலில் இருந்து விலகுகிறேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். அரசியலை இனி அன்புமணி பார்த்துக்கொள்வார்.. இனி நான் அரசியல் பேசமாட்டேன், அரசியலில் தலையிட மாட்டேன் என்று ராமதாஸ் ஓய்வை அறிவித்துள்ளார். இன்று தனது 88 வது பிறந்தநாளை கொண்டாடும் ராமதாஸ், அரசியல் துறவறம் மேற்கொள்வதாக தெரிவித்து இருக்கிறார்.

    Advertisement

    பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று தனது 88-வது பிறந்த நாளை கொண்டாடினார். பிறந்த நாளை ஒட்டி அவரை தைலாபுரம் வீட்டிற்கு சென்று சந்தித்த அன்புமணி, வாழ்த்து தெரிவித்து இருந்தார். பாமகவில் தந்தை - மகன் ஏற்பட்ட பிரச்சனை சமீபத்தில் முடிவுக்கு வந்த நிலையில், அரசியலில் இருந்து விலகுவதாக ராமதாஸ் அறிவித்துள்ளார். இனி அரசியல் பேசமாட்டேன் எனவும், அரசியலில் தலையிட மாட்டேன் என்றும் கூறியுள்ளார். மேலும், அரசியலை இனி அன்புமணி பார்த்துக்கொள்வார் என்றும் ராமதாஸ் கூறியுள்ளார்.

    Advertisement

    தந்தை மகன் மோதல்

    பாமக நிறுவனர் ராமதாஸ்க்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கடந்த 2024 ஆம் ஆண்டு கருத்து வேற்பாடு ஏற்பட்டது. அந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற கூட்டத்தில், பாமகவின் இளைஞரணி தலைவர் நியமனம் தொடர்பாக ராமதாஸ்க்கும் அன்புமணிக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டது. இந்த மோதல் நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில், இருவரும் தனித்தனியே நிர்வாகிகளை அறிவித்தனர்.

    பாமகவின் கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை அன்புமணி தரப்பு பயன்படுத்தக்கூடாது என ராமதாஸ் அறிவித்தார். தேர்தல் ஆணையம் வரை இந்த பஞ்சாயத்து சென்ற நிலையில், அன்புமணிக்கே பாமக கொடி, சின்னம் சொந்தம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. எனினும், சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் ராமதாஸ் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்து இருந்தார்.

    Advertisement

    தந்தையின் திருமண நாள் விழாவில்

    சட்டமன்ற தேர்தலில் சசிகலா கட்சியுடன் கூட்டணி அமைத்த ராமதாஸ் வட மாவட்டங்களில் பாமக செல்வாக்காக உள்ள தொகுதிகளில் வேட்பாளரையும் நிறுத்தினார். தந்தை மகன் இடையே ஏற்பட்ட பிளவு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியிருந்தது. சட்டமன்ற தேர்தலில் பாமக அங்கம் வகித்த தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை பிடிக்க முடியாமல் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டது.

    தேர்தல் முடிவுகளுக்கு பிறகு தமிழக அரசியலில் பல திருப்பங்கள் ஏற்பட்ட நிலையில், பாமகவிலும் தந்தை மகன் இடையே ஏற்பட்ட மோதல் முடிவுக்கு வந்தது. தந்தையின் 61-வது திருமண நாள் விழாவில் அன்புமணி பங்கேற்றார். அப்போது ராமதாசும் அன்புமணியும் பரஸ்பரம் ஆரத்தழுவி கண்கலங்கினர்.

    Advertisement

    ஓய்வு பெறுவதாக அறிவிப்பு

    இதன் தொடர்ச்சியாக ராமதாஸ் - அன்புமணி இடையே ஏற்பட்ட மோதல் முடிவுக்கு வந்தது. இதையடுத்து அன்புமணிக்கு எதிராக தொடர்ந்த வழக்கையும் ராமதாஸ் வாபஸ் பெற்றார். இந்த நிலையில், ராமதாஸ் பிறந்த நாள் விழாவில் அன்புமணி பங்கேற்றார். திண்டிவனத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

    அப்போது பேசிய ராமதாஸ், அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இனி அரசியல் பேசமாட்டேன்.. அரசியலில் தலையிட மாட்டேன்.. யாரும் என்னை வந்து சந்திக்க வேண்டாம். அரசியலை இனி அன்புமணி பார்த்துக்கொள்வார்.. அரசியல் துறவறம் மேற்கொள்கிறேன் என்று கூறினார்.

    English Summary

    PMK founder Ramadoss has announced his retirement from politics. He stated that Anbumani will handle political affairs from now on, adding that he will neither speak about politics nor interfere in political matters.