அன்புமணி ராமதாஸுக்கு திடீர் அறுவை சிகிச்சை.. பாமக தலைமை வெளியிட்ட தகவல்.. அதிர்ச்சியில் தொண்டர்கள்!

  • சென்னை: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸுக்கு வலது கால் மூட்டில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக பாமக தலைமை தெரிவித்துள்ளது. அப்பல்லோ மருத்துவமனையில் அறுவை சிகிச்சை முடிந்து அன்புமணி வீடு திரும்பியுள்ளார்.

    Advertisement

    பாமக தலைவர் அன்மணி ராமதாஸ் சமீப நாட்களாக பொதுக்கூட்டங்கள் மற்றும் கட்சிப்பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். இந்தநிலையில் அவருக்கு கால் மூட்டில் தொடர்ந்து வலி இருந்து வந்துள்ளது. அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்று பரிசோதித்ததில், சிறிய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

    Advertisement

    அதன்படி, நேற்று அன்புமணி ராமதாஸுக்கு காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. நேற்று அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் அவர் நலமுடன் உள்ளார். இன்று அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். அன்புமணிக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட தகவல் பாமக தொண்டர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.

    இதுதொடர்பாக பாமக தலைமை நிலையம் வெளியிட்டுள்ள செய்தியில், "பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், மேனாள் மத்திய சுகாதாரம் மற்றும் குடும் பநலத்துறை அமைச்சருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., அவர்களுக்கு சென்னை கிரீம்ஸ் சாலை அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று வலது கால் மூட்டில் சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

    Advertisement
    முதல்வர் விஜய்க்கு அன்புமணி அவசர கடிதம்.. சென்னையை ராம்சார் மாநகர பட்டியலில் சேர்க்க கோரிக்கை!

    சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்பிய அவர், நலமுடன் உள்ளார். அடுத்த இரு வாரங்களுக்கு உடலியக்கப் பயிற்சியும் (பிசியோதெரபி), ஓய்வும் எடுக்கும்படி பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English Summary

    PMK leadership has stated that party leader Anbumani Ramadoss has undergone surgery on his right knee. Following the procedure at Apollo Hospital, Anbumani has returned home.