பாமகவா?.. விசிகவா?.. மதில்மேல் பூனையாய் தவெக.. அதிருப்தியில் விசிக!

  • கோவை: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக வெற்றி பெற்றுள்ளது. இரண்டு தொகுதிகளையும் வைத்திருந்த அதிமுக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. திமுக இண்டாம் இடத்தை பிடித்தது. அதிமுகவின் தோல்வி பேசு பொருளாகியுள்ளது. தவெகவுக்கு பாமக மறைமுக ஆதரவு கொடுத்ததாக விமர்சனம் எழுந்தது. தவெக வெற்றியை அன்புமணி மனம் திறந்து பாராட்டினார். தவெக கூட்டணியில் பாமக இணைந்தால் விசிக வெளியேறும் என அமைச்சர் வன்னி அரசு கூறினார். இந்நிலையில் பாமகவுடனான கூட்டணி நிலைப்பாடு குறித்து தவெக தொடர்ந்து மென்று முழுங்கி வருவது விசிகவுக்கு கோபத்தை அதிகரித்துள்ளது.

    Advertisement

    தமிழக அரசியலில் சட்டப் பேரவைத் தேர்தல், அதைத் தொடர்ந்து இடைத்தேர்தல் முடிந்த பிறகும் கூட கூட்டணி தொடர்பான விவாதங்கள் ஓய்ந்தபாடில்லை. தவெக கூட்டணியில் பாமக இடம்பெறவுள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. இந்த விவகாரம் விசிக தரப்பில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படும் நிலையில், தவெகவின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    Advertisement

    தவெக எடுக்கப்போகும் முடிவு

    பாட்டாளி மக்கள் கட்சி, பாரதிய ஜனதா கட்சி தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியில் இடம்பெற்றால், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அந்தக் கூட்டணியில் தொடராது என்று விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு கூறியிருந்தார். இதனால், தவெக கூட்டணி விவகாரத்தில் விசிகவின் நிலைப்பாடு முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதனால், பாமகவைச் சேர்ப்பது தொடர்பாக தவெக எடுக்கும் முடிவானது கூட்டணிக் கட்சிகளுக்கு இடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்துமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

    பாமகவுடனான கூட்டணி குறித்து செங்கோட்டையன் கூறுகையில், தவெக கூட்டணியில் பாமக இணையுமா என்று கேட்கிறார்கள். இந்த கேள்விக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது. அவர்கள் வந்தால் கூட்டணியில் இருந்து விலகுவோம் என அமைச்சர் வன்னி அரசு கூறியுள்ளார். வருவார்களா என்பதை நீங்கள் எதிர்பார்க்க வேண்டும். வருவார்களா என்பது பாமகவின் கேள்வி. வந்தால் என்பது விசிகவின் கேள்வி.

    Advertisement

    காலப்போக்கில் தெரியும்

    இரண்டுக்கும் என்னால் இப்போது பதில் சொல்ல இயலாது. கூட்டணி விவகாரங்கள், தேர்தல் தொடர்பான அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகள் அனைத்தும் காலப்போக்கில் தான் தெரியவரும். மக்கள் விரும்பும் திட்டங்களை தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளோம். அவற்றை அரசு படிப்படியாக நிறைவேற்றி வருகிறது. வெற்றி பயணம் திட்டத்தால் தனியார் பஸ் உரிமையாளர்கள், ஆட்டோ டாக்ஸி துறைக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து 2 நாட்களில் தெளிவான விளக்கம் கிடைக்கும் என்றார்.

    English Summary

    TVK’s unclear stance on a possible alliance with PMK has sparked political debate, with VCK warning that it may quit the alliance if PMK or BJP joins, while Sengottaiyan says the matter will become clear in due course.