அன்புள்ள அப்பா அப்பா.. மகனை பார்த்ததும் கலங்கிய ராமதாஸ்! கலக்கத்தில் ஸ்ரீகாந்தி! தகிக்கும் தைலாபுரம்


  • சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே நீண்டகாலமாக நீடித்துவந்த கருத்து வேறுபாடு சமீபத்தில் முடிவுக்கு வந்தது. இருவரும் நேரில் சந்தித்து சமரசம் செய்துகொண்ட சம்பவம் பாமக தொண்டர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருந்தாலும் ராமதாஸின் மகள் ஸ்ரீகாந்தி மிகவும் அப்செட்டில் உள்ளாராம். காரணம், ராமதாஸ் தனது மூத்த மகள் ஸ்ரீகாந்திக்கு வழங்கியிருந்த செயல் தலைவர் பதவியை பறிக்க திட்டமிட்டுள்ள நிலையில், தனது எம்பி கனவும் பறிபோனதாக குடும்பத்தினரிடம் புலம்பினாராம்.

    Advertisement

    கடந்த சில ஆண்டுகளாக ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையேயான அதிகார மோதல் வெளிப்படையாகவே வெடித்தது. அதன் தொடர்ச்சியாக, தலைவர் பதவியை ராமதாஸ் தனது வசம் எடுத்துக்கொண்டதுடன், அன்புமணிக்கு வழங்கப்பட்டிருந்த செயல் தலைவர் பொறுப்பை தனது மூத்த மகள் ஸ்ரீகாந்திக்கு வழங்கினார்.

    Advertisement

    அந்த முடிவு பாமகவில் பெரிய அதிர்வை ஏற்படுத்தியது. அப்போதே ஸ்ரீகாந்தியின் நியமனம் கட்சி நிர்வாகிகள் மத்தியில் பல்வேறு அதிருப்தியை உருவாக்கியது. கட்சியின் மூத்த தலைவர்களை விட குடும்ப உறுப்பினருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டதாக விமர்சனங்களும் எழுந்தன.

    பாமக

    இருப்பினும், ராமதாஸ் தனது முடிவில் எந்த மாற்றமும் செய்யவில்லை. இந்நிலையில், தற்போது ராமதாஸ் மற்றும் அன்புமணி மீண்டும் இணைந்திருப்பது பாட்டாளிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 2 ஆண்டு மோதலுக்குப் பின் வெளிப்படையாக தந்தை-மகன் இணைந்தாலும், குடும்பத்திற்குள் உள்ள அனைத்து கருத்து வேறுபாடுகளும் முழுமையாக முடிவுக்கு வந்துவிட்டதாக சொல்ல முடியாது என்ற கருத்து பாமக வட்டாரங்களில் நிலவுகிறது.

    Advertisement

    அன்புமணி ராமதாஸ்

    குறிப்பாக, செயல் தலைவர் பதவியில் ஸ்ரீகாந்தி தொடர்வது அன்புமணி தரப்புக்கு எந்த அளவு ஏற்றதாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. கட்சியின் முழு கட்டுப்பாடும் மீண்டும் அன்புமணியிடம் செல்லும் சூழல் உருவானால், தற்போதைய கட்சியில் மாற்றங்கள் வரலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. பாமக வட்டாரங்களில் பேசப்படும் தகவலின்படி, ஸ்ரீகாந்தி கட்சி பொறுப்பை வெறும் பெயரளவிலான பதவியாக பார்க்கவில்லை என கூறப்படுகிறது.

    ஸ்ரீகாந்தி

    எதிர்காலத்தில் நேரடி தேர்தல் அரசியலிலும் களம் இறங்க வேண்டும் என்ற விருப்பம் அவருக்கு இருப்பதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் அல்லது சட்டமன்ற உறுப்பினர் ஆக வேண்டும் என்ற அரசியல் இலக்குடன் செயல்பட்டு வருவதாகவும் அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிப்பதாக கூறப்படுகிறது. ஆனால், தற்போது தந்தையும் மகனும் இணைந்துள்ளதால் தனது திட்டங்கள் பாதிக்கப்படுமோ என்ற கவலை ஸ்ரீகாந்தி தரப்பில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    Advertisement

    கட்சியின் கட்டுப்பாடு

    குறிப்பாக, கட்சியின் முழு கட்டுப்பாடு அன்புமணி வசம் சென்றால், முக்கிய முடிவுகள் அனைத்தும் அவரது தலைமையிலேயே எடுக்கப்படும் என்பதால், ஸ்ரீகாந்தியின் எதிர்கால வாய்ப்புகள் குறையக்கூடும் என்ற அச்சமும் உள்ளது. மறுபுறம், அன்புமணி ஆதரவாளர்கள் வேறு ஒரு கருத்தை முன்வைக்கின்றனர். குடும்பத்தில் ஒற்றுமை ஏற்பட்டிருக்கும் நிலையில், தேவையற்ற அதிகார மோதல்களை உருவாக்க அன்புமணி விரும்பமாட்டார் என்றும், கட்சியை வலுப்படுத்தும் வகையில் அனைவரையும் அரவணைத்தே செல்வார் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

    செயல் தலைவர் பதவி

    இருப்பினும், செயல் தலைவர் பதவி தொடருமா, அந்தப் பொறுப்பில் மாற்றம் வருமா, அல்லது கட்சியே மறுசீரமைக்கப்படுமா என்பது குறித்து அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. அதேநேரத்தில், பாமகவின் அடுத்தகட்ட பொதுக்குழு அல்லது உயர்நிலைக் கூட்டங்களில் நிர்வாக மாற்றங்கள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. குறிப்பாக, அன்புமணிக்கு முழு அதிகாரம் வழங்கும் வகையில் அமைப்பு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டால், ஸ்ரீகாந்தியின் பதவி குறித்த பதில் கிடைக்கும் என பாமக நிர்வாகிகள் எதிர்பார்க்கின்றனர்.

    Advertisement

    முகுந்​தன்

    ஒன்​றரை ஆண்டுகளாக நீடித்து வந்த மோதல் முடிவுக்கு வந்​தது பாமகவினரை மகிழ்ச்​சி​யில் ஆழ்த்தி இருந்தாலும், முக்கியமான விஷயம் ஒன்றையும் கவனிக்க வேண்டும். ராம​தாஸை அன்​புமணி குடும்​பத்​துடன் வந்து சந்தித்தபோது அவரது இளைய சகோ​தரி கவிதா உடன் இருந்​தார். ஆனால், மூத்த மகளும் பாமக செயல் தலைவருமான ஸ்ரீகாந்​தி, அவரது மகன் முகுந்​தன் உள்​ளிட்​டோர் புறக்​கணித்​தனர் என்பதையும் கவனிக்க வேண்டும்.

    English Summary

    Ramadoss-Anbumani reunion fuels speculation over Srikanthi’s party post and future political ambitions in PMK.