தமிழக அரசியலே தலைகீழாகப் போகுது.. தனிக் கட்சி ஆரம்பிக்கும் அருள்! அன்புமணி கைக்குப் போன தைலாபுரம்!


  • சென்னை: மீண்டும் பரபரப்பில் ஆழ்ந்திருக்கிறது பாட்டாளி மக்கள் கட்சி. தந்தை மகன் இடையேயான மோதல் முடிவுக்கு வந்து தற்போது இருவரும் சேர்ந்து இருக்கின்றனர். இந்த நிலையில் அன்புமணியை எதிர்த்து அரசியல் செய்த சில சீனியர்கள் கடும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். இந்த நிலையில் தனிக்கட்சி தொடங்கும் முடிவை இறுதி செய்திருக்கிறார் முன்னாள் எம்எல்ஏவான அருள்.

    Advertisement

    தமிழக அரசியலில் அரசியல் கட்சிகளில் பிளவு ஏற்படுவதும் பின்னர் சேர்வதும் புதிதல்ல. திமுகவில் ஏற்பட்ட பிளவு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஆனால் பிளவுடன் தொடங்கிய பாட்டாளி மக்கள் கட்சி தற்போது மீண்டும் சேர்ந்து இருக்கிறது.

    Advertisement

    கடந்த சில ஆண்ட்களுக்கு முன்பு கட்சியின் எதிர்காலம் கருதி தலைவராக தனது மகன் அன்புமணி ராமதாசை நியமித்தார் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான ராமதாஸ். தொடர்ந்து கட்சியில் நிர்வாகிகள் நியமனம் கூட்டணி என அனைத்திலும் அன்புமணியின் கை ஓங்கியது.

    பாமக

    இதற்கிடையே தனது மகன் ஜிகேஎம் தமிழ்குமரனை கட்சியின் இளைஞரணி தலைவராக நியமிக்க ராமராசை கேட்டுக்கொண்டார் ஜிகே மணி. அதற்கான நியமன உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அன்புமணி ஆதரவாளர்கள் அதனை ஏற்கவில்லை. இதை அடுத்து தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார் தமிழ் குமரன். தொடர்ந்து கட்சியின் பொதுக்குழு செயற்குழு நடைபெற்ற போது ராமதாஸின் பேரனான முகுந்தனை இளைஞர் அணி தலைவராக நியமிப்பதாக அறிவித்தார்.

    Advertisement

    அன்புமணி ராமதாஸ்

    அதற்கு மேடையிலேயே எதிர்ப்பு தெரிவித்தார் அன்புமணி. அதற்குப் பிறகுதான் கட்சியில் மோதல் வெடித்தது. பனையூரில் தனியாக அலுவலகம் தொடங்கினார் அன்புமணி. அதன் பின்னர் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்ற நிலையில் திடீரென அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து இறக்கி செயல் தலைவராக நியமித்த பின்னர் செயல் தலைவர் பதவியில் தனது மகள் ஸ்ரீகாந்தியை அமர்த்தினார். ராமதாஸ் ஆனால் கட்சி பெரும்பாலும் அன்புமணியின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது.

    டாக்டர் ராமதாஸ்

    2026 சட்டமன்ற தேர்தலில் பாமக அன்புமணி தரப்புடன் கூட்டணி வைத்தது. அதிமுக அந்த தேர்தலில் நான்கு எம்எல்ஏக்களை பெற்றது பாட்டாளி மக்கள் கட்சி. அன்புமணியின் மனைவி சௌமியா எம்எல்ஏ ஆனார். இந்த நிலையில் சசிகலா தரப்புரன் கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்தித்த ராமதாஸ் தரப்பில் படுதோல்வியை சந்தித்தது.

    Advertisement

    ஜிகே மணி

    ஜிகே மணியின் மகன் தமிழ் குமரன் காங்கிரஸ் கட்சியில் இணைந்து போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்த நிலையில் ராமதாஸின் திருமண நாளை முன்னிட்டு அவரை சந்திக்க சென்றார் அன்புமணி. அதோடு பிரச்சனைகள் எல்லாம் முடிவுக்கு வந்தது. மகனை கட்டி அணைத்து கண்ணீர் மல்க பேசிய ராமதாஸ் கட்சியையும் வன்னியர் சங்கத்தையும் முழு கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கினார்.

    அருள்

    அதே நேரத்தில் ராமதாஸ் அதிருப்தியில் இருந்த போது அரசியலுக்கு வந்த ஸ்ரீகாந்த் அன்புமணியை கடுமையாக எதிர்த்த ஜிகே மணி, அருள் உள்ளிட்டோர் சிக்கலில் ஆழ்ந்தனர். இனி எல்லாமே அன்புமணி தான் என ஆகிவிட்ட நிலையில் தங்களது எதிர்காலம் என்ன ஆகுமோ என்ற அச்சம் அவர்களிடத்தில் இருந்தது. ஜிகே மணியை சேர்த்துக் கொள்ள எந்த கட்சியின் ஆர்வம் காட்டவில்லை. திமுகவுடன் செல்ல அருள் முடிவெடுத்தார். அதற்கு ஆதரவாளர்கள் ஒப்புக்கொள்ளவில்லை.

    Advertisement

    தனிக்கட்சி

    இந்த நிலையில் தனிக்கட்சி தொடங்கும் முடிவுக்கு வந்திருக்கிறார். அருள் தேர்தலில் செலவு செய்தும் வெற்றி பெற முடியவில்லை. அன்புமணியும் ராமதாஸும் சேர்ந்து விட்டார்கள். அன்புமணியை வெகுவாக எதிர்த்ததால் இனி தங்களால் பாட்டாளி மக்கள் கட்சியில் ஆதிக்கம் செலுத்த முடியாது. இதனால் வேறு வழியின்றி தணிக்கட்சி தொடங்கும் முடிவுக்கு வந்திருக்கிறாராம். ஆதரவாளர்களும் அதற்கு ஓகே சொல்ல தற்போது கட்சி ஆரம்பிப்பதற்கான வேலைகளில் இறங்கி இருக்கிறார் அருள் என்கின்றனர்.

    English Summary

    Former PMK MLA Arul is reportedly preparing to launch a new party after Ramadoss and Anbumani reunited, reshaping PMK politics.