மதுராந்தகத்தில் தவெகவிற்கு சாதகமான பாமகவின் நடுநிலை முடிவு.. மங்கலம் கிராமமே சாட்சி

  • சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருந்த பாமக, வட மாவட்டங்களில் அதிக இடங்களைக் கைப்பற்ற அதிமுகவிற்கு உதவியாக இருந்தது. அந்த வகையில், மதுராந்தகம் தொகுதியில் கடந்த முறை அதிமுக வெற்றிபெற்றது. ஆனால், தற்போது நடைபெற்ற இடைத்தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் பாமக அதிமுகவிற்கு ஆதரவு அளிக்கவில்லை. இது ஆளும் தவெகவிற்குச் சாதகமாக மாறியுள்ளது.

    Advertisement

    தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, திமுக இரண்டாவது இடத்திலும், அதிமுக மூன்றாவது இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளன. இதற்கு 'மங்கலம்' என்ற பகுதியில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை நிலவரமே சாட்சி என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்.

    Advertisement

    வட மாவட்டங்களில் பாமகவின் செல்வாக்கு அதிகம். அப்படியொரு சூழலில், இந்த இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு அளிக்க பாமக மறுத்துவிட்டது. அதிமுகவிற்கு மட்டுமல்லாமல் திமுக, தவெக என எந்தக் கட்சிக்கும் பாமக ஆதரவு தெரிவிக்காமல், நடுநிலை வகிப்பதாகக் கூறி அமைதியாகிவிட்டது. இதனால் அதிமுக இங்கு கடும் சவாலை எதிர்கொண்டுள்ளதாகவும், பாமகவின் இந்த முடிவு தவெகவிற்கு மறைமுக ஆதரவாக அமைந்துள்ளதாகவும் அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.

    மதுராந்தகம், தாராபுரம்.. எதிர்க்கட்சிகள் வாக்குகள் பிரிந்துவிட்டது.. பொது வேட்பாளரை போட்டிருந்தால்?

    மதுராந்தகம் தொகுதியில் கடந்த முறை அதிமுக சார்பில் வெற்றிபெற்ற மரகதம் குமாரவேல், இம்முறை தவெக சார்பில் போட்டியிட்டுள்ளார். ஐந்தாம் சுற்று நிலவரப்படி, அவர் 20,163 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். திமுகவின் பரந்தாமன் 13,856 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் இருக்கிறார். தவெக இங்குச் சுமார் 6,577 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை வகிக்கிறது. அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத் 11,488 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளார்.

    Advertisement

    மதுராந்தகம் தொகுதியில் பாமக நடுநிலை வகித்தது எந்த அளவிற்கு தவெகவிற்குச் சாதகமாக மாறியுள்ளது என்பதற்கு, அங்குள்ள மங்கலம் பகுதியில் நடைபெற்ற மாற்றமே சாட்சி என்கிறார்கள். மங்கலம் பகுதியில் கடந்த மே 4-ஆம் தேதி நிலவரப்படி தவெக 2,541 வாக்குகள் பெற்றிருந்தது; ஆனால் இன்று 2,741 வாக்குகள் பெற்றுள்ளது (200 வாக்குகள் அதிகம்).

    அதிமுக மே 4 நிலவரப்படி 2,305 வாக்குகள் பெற்றிருந்த நிலையில், இன்று 1,484 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது (821 வாக்குகள் குறைவு). திமுக கடந்த முறை 2,084 வாக்குகள் பெற்றிருந்தது; இந்த முறை 2,167 வாக்குகள் பெற்றுள்ளது (83 வாக்குகள் அதிகம்). நாம் தமிழர் கட்சி கடந்த முறை இங்கு 242 வாக்குகள் பெற்றிருந்த நிலையில், இந்த முறை 118 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது (124 வாக்குகள் குறைவு).

    Advertisement
    ஸ்வீட் பாக்ஸ்க்கு ஆசைப்பட்டு அட்ரஸை போட்ட மதுரை வீரமணி.. குவியும் ஆர்டர்.. வித்தியாசமான பழிவாங்கல்

    பாமக ஒருவேளை அதிமுகவிற்கு ஆதரவு அளித்திருந்தால், நிலைமை அதிமுகவிற்குச் சாதகமாக மாறியிருக்கும் என்றும், திண்டிவனத்தை ஒட்டியுள்ள மதுராந்தகம் தொகுதியில் பாமகவின் செல்வாக்கு அதிகம் என்றும் அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். திண்டிவனம் தொகுதியைக் கடந்தால் அடுத்ததாக அமைவது மதுராந்தகம் தொகுதி; அதற்கு அடுத்து செங்கல்பட்டு வருகிறது.

    வன்னியர்கள் அதிகம் வசசிக்கும் மதுராந்தகம் தொகுதியில் பாமகவின் ஆதரவு இருந்தால் எளிதாக வெற்றிபெற முடியும் என்று அரசியல் கட்சிகள் நம்புகின்றன. இன்றைய தேர்தல் முடிவுகளைப் பார்க்கும்போது அது உண்மைதான் என்றும் அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, பாமக நடுநிலை வகித்தது தவெகவிற்கே சாதகமாக மாறியுள்ளது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

    English Summary

    The AIADMK won the Maduranthakam constituency in the previous election. However, the PMK did not extend its support to the AIADMK in the Maduranthakam by-election, a move that has worked to the advantage of the TVK. Current vote-counting trends place the DMK in second place, while the AIADMK has slipped to third. Political experts cite the vote-counting figures from the Mangalam area as evidence of this shift.